Saturday 17 October 2020

பயனுள்ள தகவல்கள்

லக்ஷ்மி அருள் தழைக்க ....
1.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
2.தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
3. ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
4.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
5. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
6.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
7.வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
8.தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
9. பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது.
10.சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
வாஸ்து தகவல் ....
1.வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும் .... ,பப்பாளி மரம் பெண்களையும்,
கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும் ...
2.முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
3.ஜாதி முல்லை ,மல்லிகை ,பாதிரி ,தாமரை ,தும்பை ,பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்பது மனை தோசத்தை சரி செய்யும் ...
4.தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது ,தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும் ...
5.நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால்
அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ,ஆரோக்கியம் கெட்டு விடும் ...
5. துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது ...
6.ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது ..
7.வீட்டின் வாசலில் அல்லது நிலகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது ...
8.அசைவ கழிவுகள் ,மலமூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள்,குப்பைகள் போன்றவற்றை வாசலில் இருக்க கூடாது ..
9. சந்தன முல்லை ,துளசி ,பவளமல்லி ,பன்னிர் செடி ,திருநீர்பத்திரி ,கற்பூரவள்ளி போன்ற தெய்விக வாசனை தாவரம்கள் வளர்க்க அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும் .
10.கோபுரம் நிழல் ,அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாத படி வீடு கட்டவேண்டும் .மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் ,கணபதி கோவில் எதிர் புறம் வீடு கட்ட கூடாது .....
சில வித்தியாசமான தகவல்கள் .......
1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன் ,பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)...இதை வியாபார இடத்திலும் செய்யலாம் ..
2.தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல் ,ஏவல் ,சூன்யும் ,வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது ..
3.வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் ,
மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம் ...இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள் .
4.மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும் .(சில எண்ணிக்கை மட்டும் ).
5.கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும் ,
(பதப்பட்ட பால் வேண்டாம் ),அல்லது இளநீரை தரவேண்டும் ,
இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும் ,சாபத்தை போக்கும் வல்லமை உடையது ..
6.வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு )
பால் சாம்பிராணி ,கடுக்காய் ,காய்ந்த வேப்ப இலைகள் ,ஓமம் ,தான்றி காய் ,காய்ந்த மருதாணி இலை,மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை ,பௌர்ணமி ,வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல
நன்மைகளை தரும் ,குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும் .(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .)
7.எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும் ,பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும் ..
8.கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார் ..
9.ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று ,ஆயுள்
தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும் (தனியாக உள்ள கோவில்கள் )
10.பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும் .
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...

No comments:

Post a Comment