Saturday, 17 October 2020

பயன்தரும் சில ஆன்மீக குறிப்புகள் !!

பயன்தரும் சில ஆன்மீக குறிப்புகள் !!

கோயிலிலோ வீட்டு வாசலிலோ சூடம் ஏற்றும் போது காற்றினால் அணைந்து போகாமல் இருக்க சூடத்தை கையால் பொடி செய்துவிட்டு பிறகு பற்ற வைத்தால் அணையாமல் அழகாக எரியும்.
பூஜையறையில் உள்ள சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் சிறியதாக முத்துப் போல் வைக்க முடியாமல் போனால் காது குடையும் பட்ஸ் அல்லது  ஒரு குச்சியில் சிறிது பஞ்சை சுற்றி வைத்து அதனால் குங்குமம் மஞ்சளை ஒத்தி எடுத்து படத்தில் வைத்தால் அழகாக முத்து போலவே இருக்கும்.
பூஜையறையில் உள்ள கண்ணாடி பிரேமிட்ட சுவாமி படங்களுக்கு வேப்ப எண்ணெய் சிறிது பஞ்சில் நனைத்து அந்த கண்ணாடியில் துடைத்தால் பூச்சி அரிக்காது  படங்கள் பளபளவென மின்னும்.
நெல்லி மரம் உள்ள வீட்டை தீமைகள் அனுகாது. நெல்லி இலையால் கடவுளுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்து நல்ல பலனும் கிடைக்கும்.
பூஜைகாலத்தில் நாம் ஆண் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டும் போது (உதாராணமாக முருகர் கிருஷ்ணர்) கீழிருந்து மேலாகவும் பெண் தெய்வங்களுக்கு (துர்கை லஷ்மி) மேலிருந்து கீழாகவும் தீபம் காட்ட நன்மை நடக்கும்.

No comments:

Post a Comment