Saturday, 31 October 2020

யோனிப்பொருத்தம்

#யோனிப்பொருத்தம்:-
திருமணப் பொருத்தத்தில் முக்கியமாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் தச பொருத்தங்கள் எனப்படும் அதில் கயிறு என்னும் ரஜ்ஜு பொருத்தத்திற்கு அடுத்தபடியாக யோனிப் பொருத்தம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மிருகத்தின் யோனியை அடையாளமாக வைத்து முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

 இதில் நட்பு , பகை யோனி சம யோனிகள் என்று வகைப்படுத்தி உள்ளார்கள் . இருவருக்கும்பகை யோனிகளாயின்சேர்க்கக்கூடாது என்பது விதி .
மேலும் ஆண் பெண் யோனிகள் இருவகைகளாகவும்பிரிவு படுத்தி உள்ளார்கள்.
இருவருக்கும் ஆண் யோனிகளாக இருந்தாலும் , இருவருக்கும்பெண்யோனிகளாக இருந்தாலும் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
 ஆணுக்குஆண் யோனியும் பெண்ணுக்கு பெண் யோனியும் இருந்தால்உத்தமம் .
ஆண் பெண் இருவருக்கும் மாறி இருந்தால் அதாவது ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியும் அமைந்திருந்தால் அதமம் சேர்க்கக்கூடாது என்ற விதியும் உண்டு எல்லா விதிகளைப் போலவும் இதற்கும் சில விதிவிலக்குகளும் உண்டு.

பகை யோனிகள் வகைப்படுத்துவதில் சில முரண்பாடுகள் உள்ளன உதாரணமாக புலிக்கு:- பசு எருமை மான் நாய் ஆடு இவைகளை சிலர் பகையோனிகளாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் புலிக்கு நேரடி பகை பசு மட்டுமே என்கிறார்கள் சி.ஜி ராஜன் போன்ற மூலநூல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நேரடி பகை யோனிகள்
 குதிரைக்கு ×எருமை 
யானைக்கு ×சிங்கம்
 குரங்குக்கு ×ஆடு 
பாம்புக்கு ×எலி ,கீரி
நாய்க்கு ×மான்
 பூனைக்கு ×எலி 
பசுவுக்கு× புலி 
நேரடிப்பகை யோனிகள் ஆகும்.
எனவே நேரடி பகை யோனிகளை மட்டுமே இணைக்கக் கூடாது.
 ஆண்-பெண் பேதங்கள் பெண் நட்சத்திரத்தில் இருந்து 13 நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் அமைந்திருந்தால் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.
பொதுவான நட்சத்திரப் பொருத்தத்தை விடவும்ஜாதக ரீதியாகவும் ஆராய்ந்து முடிவு செய்யலாம்.

யோனி பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை பற்றி அறிய உதவும் என்று குறிப்பிடப்படுகிறது.

நட்சத்திர பொருத்தங்களில்
 மகேந்திரப் பொருத்தம் 
ராசி பொருத்தம்
 ராசி அதிபதி பொருத்தம் நாடிப்பொருத்தம்
 பால் விருட்ச பொருத்தம் ஆகியவைகளும் புத்திர பாக்கியத்தை பற்றி அறிய உதவுவது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே இதில் மூன்று அல்லது மூன்றுக்கு மேல் இருந்தால் புத்திர பாக்கியத்தை வலுப்படுத்தும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சிலர் யோனி பொருத்தத்தை அன்யோன்யம் தாம்பத்திய சுகம் அறிய உதவுவது என்றும் சிலர்கூறுகிறார்கள் ஆனால் அதற்குரிய விளக்கங்கள் உறுதியாக இல்லை. அப்படியே எடுத்துக் கொண்டாலும் ஜாதக ரீதியாகவும் ஆராய்வதே சிறந்த முறையாகும்

பொதுவாக புத்திர பாக்கியத்தை பற்றி அறிய 5ஆம் இடம் ஐந்தாம் அதிபதி, குரு மற்றும் 9-ஆம் இடம் கர்மம் செய்யக்கூடிய ஸ்தானம் ஆகிய பத்தாமிடம் கர்ம காரகர்கள் செவ்வாய் சனி ஆகியவைகளையும் நன்கு ஆராய்ந்து இறுதி முடிவு செய்ய வேண்டும்.
அன்யோன்யம் தாம்பத்திய சுகத்தை பற்றிய அறிய
மூன்றாம் இடம் ஏழாமிடம் பதினொன்றாம் இடம்
 ஆகிய காம திரிகோண ஸ்தானங்களையும்சுக்கிரன் மற்றும் செவ்வாய்களின் நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு செய்ய வேண்டும்.
நட்சத்திரப் பொருத்தத்தை விட ஜாதகப் பொருத்தமும் அதிமுக்கியம்

சிந்திப்போம்! சந்திப்போம்!


     🌹🌹🌹🌹🙏👍🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment