Saturday 24 October 2020

குரு_ராகு_சேர்க்கையினால்_உண்டாகும்_குரு_சண்டாள_யோகம்_அல்லது_குரு_சண்டாள_தோஷம்

#குரு_ராகு_சேர்க்கையினால்_உண்டாகும்_குரு_சண்டாள_யோகம்_அல்லது_குரு_சண்டாள_தோஷம்

இயற்கை சுபரான குரு பகவான் தனம், குழந்தை, பூர்வ புண்ணியம், கல்வி என பல சுப விடயங்களுக்கு காரகம் வகிக்கின்றார்.

அவருடன் இயற்கை பாபியான ராகு பகவான் பேராசைக்கு காரகம் வகிக்கின்றார். 

அத்தகைய குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றோ குரு ராகுக்கு கேந்திர கோணங்களிலோ ராசி கட்டங்களில் அமரும் போது சுப மற்றும் அசுப பலன் உண்டாகக் கூடும்.

குரு ஆட்சி உச்சம் நட்பு வீடுகளில் இருந்து ராகு சேர்க்கை பெற்றால் ஜாதகருக்கு திடீர் தன அதிஷ்டம் உண்டாவது, பங்கு சந்தையில் பங்கு லாபம் கிடைப்பது, சிறந்த அறிவு, உரிய காலத்தில் குழந்தை பேறு உண்டாவது, அடிக்கடி சுபநிகழ்வுகள் உண்டாகும். (3.20°க்குள் இணைந்தால் ஆரம்பத்தில் தடை பண்ணி பின்னர் யோகம் பண்ணும்.)

ராகுவின் ராசி சார  நாதன் ஆட்சி உச்சமாகியோ ராகு உச்ச ராசிகளிலோ நட்பு  வீடுகளில் அமர்ந்து ராகுவின் கேந்திர கோணத்தில் குரு அமர்ந்து பகை நீசமாகி இருப்பின் குரு சண்டாள தோஷமாகிறது.
பணபற்றாக்குறை நாளாந்தம் நிலவும்,  கல்வி தடை, திருமணம் தடவையாவது, புத்திர தடை, இருதய நோய் உண்டாவது, பண நஷ்டம் இழப்பு உண்டாவது, என வயதிற்கு ஏற்ப அசுப பலனை தரும்.
குருவுடன் 3.20°க்குள் இணைந்தால் கடுமையான தோஷமாக செயற்படும்.

பரிகாரம்: வியாழக்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடும், கிருஷ்ணன் வழிபாடும் சிறப்பு.

No comments:

Post a Comment