Friday, 30 October 2020

மீனம்

##மீனம்

கால புருசனுக்கு 12ஆவது வீடு மீனம் * ஆகும்,, இதன் அதிபர் கிரகத்தில் மிக பெரிய கிரகம் குரு ஆகும்,,அதில் 27ஆவது நட்சத்திரமாக ரேவதி நட்சத்திரம் அமர்ந்துள்ளது,,, இதன் அதிபதி புதன் ஆவார்,, இதன் யோனி நில வாழ் உயிரி மிக பெரிய விலங்கு யானை (பெண் யோனி)ஆகும் குரு பகவானின் வாகனமும் யானைதான்,.புதன் மீன ராசியில் நீசம் ஆகிறார்,, வாத்தியாரிடம் (குரு வீட்டில்) மாணவன் (புதன்)அடங்கி இருக்க வேண்டும் அல்லவா,, அதன் பொருட்டு நீசம் ஆகிறார்,,,

சனி , குரு, புதன்,மூவரும் கர்மா காரர்களே,,,

நிகழ்கால பாவங்களுகுறிய  தண்டனையை குருபகவான் சனியிடம்  நம்மை போட்டு கொடு க்க தயங்குவது இல்லை, சமீபத்தில் தங்கம் திருடிய ஸ்வப்னா சுரேஸ் மிதுன ராசி மிதுன ராசிக்கு குரு பார்வை கிடைக்கும் சமயத்தில் மாட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது, குரு தவறு செய்து இருந்தால் போட்டு கொடுக்கும் குணம் கொண்டவர்,, புதன் பகவான் நமது புணர் ஜென்ம கணக்கு வழக்கை சணியிடம் ஒப்படைக்கிறார்,, புதன் கணக்கு பிள்ளை ,,வங்கியில் கூட,casier வேலை பார்ப்பவர் புதன் ஆதிக்கம் பெற்றவர்கள்தான் மற்றும்  தங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து கொடுப்பது கூட புதன் ஆதிக்கம் பெற்ற ஜோதிடர் தான்,, புதன் பலம் இல்லை என்றால்,பணத்தை என்னும் வேலை,,மற்றும் கணித வளம், எழுத்து வளம், எல்லாமே குறைந்து போகும், கல்விக்கு அறிவுக்கு காரகம், புதன் தானே,, அவர் எழுதுற கர்மா கணக்கு படி தான் சனி நம்மை துண்டாடுவார்,,

இந்த 12ஆம் வீடு மோட்ச வீடு ஆகும் இங்கு அமர்ந்து இருக்கும் நட்சத்திரங்கள் 

பூரட்டாதி (குரு)
உத்திரட்டாதி (சனி)
ரேவதி (புதன்)

இதே போல மீன திரிகோண வீடு கடகம், விருச்சிகம்,, இதுவும் மோட்ச வீடு தான்,, இங்கும் குரு, சனி,புதன் , நட்சத்திரங்கள் தான் இருக்கும்,
கடகம் (புனர்பூசம், பூசம், ஆயில்யம்,)
விருச்சிகம் (விசாகம், அனஸ்ஸம், கேட்டை)

சனி என்பவர் ஜட்ஜ் 
புதன் பூர்வீக கர்மா கணக்கு பிள்ளை
குரு பிறந்த முதல் கடந்தகால, நிகழ்ந்தகால, எதிர்கால,கணக்கு வாத்தியார்,,, இந்த இருவரும் இந்த கணக்குகளை ஜட்ஜ் க்கு சமர்ப்பணம் செய்கிறார்கள்,,

நீதி மன்றத்தை எடுத்து கொள்ளுங்கள் கைதியின் case report எடுத்து ஒருவர் வைப்பார் ,, அவர் தான் புதன்,,

Judge பக்கத்துல ஒரு டவாலி இருப்பார் அவர் தான் குரு,,இந்த டவாளி கூட 3 முறை கைதியை அழைப்பர் 3 குரு எண் ஆகும்

மீன அதிபதி குரு மிக பெரிய வாத்தியார், மிகப்பெரிய யானை வாகனம் யானையில் வலம் வருவார்,, தேவ குருவும் இவரே,

மீன குரு சண்டன் என்றும், தனுசு குரு பிரசண்டன் என்றும் அழைக்க படுகிறார்கள்,,இவர்கள் எல்லா கோவிலும் இருக்கிறார்கள்,,, கோவில் வாயிலில் துவார பாலகர்கள் என்று இருவர் இருப்பார்கள்,, அவர்கள் தான் இந்த மீனம் சண்டன்,, தனுசு பிரசண்டன் , ,, தனுசு பிரசண்ட இறைவன் ஒருவனே என்று சொல்லும் விதமாக ஒரு விரல் நீட்டி இருப்பார் ,,

 மீன சண்டன் இரு கையும் விரித்து வைத்து இருப்பார் (மோட்சம் ) சாகும் போது ஒன்றும் கொண்டு போக போவதில்லை என்று உணர்த்தும் விதமாக இருப்பார்,,

ஜோதிடத்தில் இன்னும் புரியும் விதமாக சொன்னா அரண்மனை ய கற்பனை பண்ணி கொள்ளுங்கள்,,,(இது யாவரும் அறிந்ததே)

 சிம்ம ராஜா கடகம்  ராணி

மிதுனம் கன்னி (புதன் அதிபதி)கணக்காளர் அமைச்சர் மந்திரி மார்கள்

துலாம் ரிஷபம் (சுக்ரன் அதிபதி)கஜானா அமைச்சர்

மேஷம் விருச்சிகம்(செவ்வாய் அதிபதி) படை தளபதிகள் ,, சிப்பாய்,

மீனம் , தனுசு (குரு அதிபதி)வாயில் காப்பாளர்கள் ,,,(துவார பாலகர்கள்)

கும்பம் மகரம் இவர்கள் வம்பு வழக்கு சம்பந்தமாக வரும் மக்கள்,, சனி மக்களை குறிக்கும்,

ஆனால் அரசியலில் சூரியன் முதலமைச்சர், குரு மந்திரி தான் மாற்றம் இல்லை 
 
அரசன் ஆக இருந்தாலும் அவன் கர்மா படி கர்மா காரகன் ஜட்ஜ் இடம் வந்து தான் ஆகனும்,,

மேலே சனியை ஜட்ஜ் என்று சொல்லி விட்டு கீழே சிம்மம் ராஜா என்று சொல்லி இருக்கிறேன் குழப்பம் வேண்டாம்,, அரசன் தப்பு செஞ்சாலும் ஜட்ஜ் கிட்ட வந்து நின்னுதன் ஆகனும்,, அரசியல் வாதிகள் கோர்ட் வாசலில் நின்று தான் ஆக வேண்டும்,,

மீனம் நம் பாதத்தை குறிக்கும் கால்கள் தான் உடலில் பிரதான உறுப்பு, கால்கள் இல்லை எனில் என்னதான் செய்ய முடியும்,,,

கால்களில் தான் உடலில் இருக்கும் அத்தனை நரம்புகளும் முடிகிறது,, அத்தனை எடையும் தாங்கும் உறுப்பு கால் பாதங்கள் ஆகும்,
, அடி பாதங்களில் அனைத்து உள்ளுறுப்புகளை யும் இணைக்கும் நரம்புகள் முடிவடையும் இடம் பாதங்கள் ஆகும்,, பாதம் மீன ராசியை குறிக்கும்,, அது மட்டும் அல்ல இங்கு பாதங்களில் தான் புத்திர பாக்கியம் அருளும் accupreccure புள்ளிகள் உள்ளன,, படத்தில் காணுங்கள் கர்ப்ப பை நரம்புக்கு,மற்றும் ஃபெலோப்பியன் tube நரம்பு க்கு மற்றும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பி யய் இணைக்கும் நரம்பு புள்ளிகள் எல்லாமே இங்குதான் இருக்கிறது,, ஃபெலோப்பியன் tube area கவனியுங்கள் கொலுசு அணிந்த மாதிரி இருக்கிறது,, இந்த புள்ளிகளை அழுத்தி கொண்டும் தொட்டு கொண்டும் இருக்க வெள்ளியை அணிகலனாக,,பயன் படுத்துகிறர்கள்,,பெண்கள் ,,

மீனம் பெண் ராசி ,, வெள்ளி சுக்ரன் ஐ குறிக்கும், மீனத்தில் சுக்ரன் உச்சம்,,

மெதுவாக தினமும் தன் குருவான பாதங்களை அமுக்கி விட்டாள் போதும் வருடம் வருடம் புத்திரர்கள் பிறந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை,,ஒரு சைக்கிள் எடுத்தாலும் சரி அதில் காற்று இருக்கா இல்லையா என்று செக் பண்ணுவோம் ஆனால் உழைக்க கால்கள் அதிக முக்கியம் ஆனால் அதை கவனிப்பது இல்லை, பாதங்களை கவனித்தால் நம் உடலுக்கு வியாதி வரவே வராது என்று அடித்து சொல்ல முடியும் எல்லா உள்ளுறுப்புகளின் நரம்புகளும் இங்குதான் முடிகிறது,,

ரேவதி நட்ச்திரத்திரா மரம் இலுப்பை மரம் 

இலுப்பை மர பூ மார்பில் வைத்து கட்ட தாய்ப்பால் சுரக்கும் இதன் காயை உடைத்தல் பால் வரும் அதை வென் புள்ளியில் தடவலாம், சரியாகும், இதன் பழம் மல சிக்களை தீர்க்கும்

ரேவதி நட்சத்திர யோனி பெண் யானை ஆகும்,,

யானைக்கு உணவு வழங்குவது அவ்வளவு கோடி புண்ணியங்கள் இருக்கிறது,, குழந்தை இல்லாதவர்கள் யானைக்கு பழங்கள் கொடுத்தல், உணவு கொடுத்தல், அல்வா கிண்டி கொடுத்தல், இவை யாவும் குழந்தை தடையை நிவர்த்தி செய்யும்,,ஊருக்குள் பெண் யானையை பாகன் ஓட்டி வருவான் அந்த சமயத்தில் பாகனுகு காசு கொடுபதை விட யானைக்கு உணவு கொடுத்து விடுங்கள்,,,,,

பெண் யானை விசுவாசமாக இருக்கும்,, பாகணுகு விசுவாசமாக இருக்கும், அதிக யாபக சக்தி, தாய்மை பாசம்,, அதிக அறிவுடன் இருக்கும்,, இதே போல தான் ரேவதி நட்சத்திர நபர்களும் இருப்பார்கள், புதன் நட்சத்திரம் அறிவுடன் செயல்படுவார்கள், கதை எழுதுவார்கள், கவிதை எழுதுவார்கள், சிந்தனை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்,,இவர்களுக்கு,, அமைதியாக காயை நகர்த்தி வெற்றி காண்பார்கள்,,

பரணி ஆண் யானை(மேஷம் ஆண் ராசி) போருக்கு பயன்படுத்தினார்கள் 
ரேவதி பெண் யானை(மீனம் பெண் ராசி) ஊருக்கு கோவிலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்,, யானை தந்தம் அதிக மருத்துவ குணம் கொண்டது அதன் வால் முடி மிக பெரிய விலை போகும், பொன் பொருள் சேர்க்கைக்கு குரு இருக்கும் வீட்டை ஆராய்வது வழக்கம்,,

ராசி குறியீடு vector ஆகும்,மற்றும் இரு மீன்கள்,,

Vector. ஒன்னு direction மற்றொன்று magnetude
ஒரு மீன் direction இன்னொரு மீன் magnetude

இந்த கணித அடிப்படையில் தான் பறவயும் பறக்கிறது அது பறக்கும் போது பார்த்தால் கூட v shape தெரியும்,,

நீரில் ஊர்ந்து செல்லும் கப்பலும் ,, காற்றில் பறந்து செல்லும் விமானமும் vector கணக்கீடு வைத்து தான் கண்டும்பிடிதார்கள்,, விமானத்தை கண்டு பிடித்தவர்கள் கூட ரைட் சகோதரர்கள் (இரு மீன்கள் வந்து விட்டதா)(பறவையை கண்டான் விமானம் படைத்தான்)

கப்பலை மேல் இல் இருந்து பார்த்தால் v shape தெரியும், நீர் மூழ்கிக் கப்பல் மற்றும் விமானத்தை பார்க்கும் போது பெரிய திமிங்கலம் போல தெரியும்,,,, இதனால் என்னவோ
மீனம் ராசி காரர்கலுக்கு பயணம் மிகவும் பிடிக்கும்,, ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள், இவர்களின் பயணம் தூரம் எல்லாமே வியப்பாக தான் இருக்கும்,, பெரும்பாலும் வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள்,, வெளிநாடு பயணத்தி க்கும் 12 ஆம் வீட்டை ஆராய்வோம் கால புருசனின் 12 ஆம் வீடு மீனம் ,,

நமது நாட்டில் இருக்கும் நீர்மூழ்கி கப்பலி பெயர்

ஐ. என். எஸ்.சக்ரா - 3 

நமது உடலில் 3 ஆவது சக்ரம் மணிபூரகம் சக்ரம் ஆகும் இதை குரு ஆட்சி செய்கிறார்,,, குரு நமது அடிவயிறு குறிக்கும்,, நம் நாட்டு தேசிய கொடி நடுவில் இருக்கும் சக்கரம் உம் விசாக நட்சத்திர குறியீடு விசாகம் குரு நட்சத்திரம் ,,

எண் கணிதம் இட்டு மீன ராசியை இன்னும் சொல்லி கொண்டே செல்லலாம்,, பதிவு நீளும்,,


No comments:

Post a Comment