Saturday, 24 October 2020

ராகு புதன் இணைவு பலன்

ராகு புதன் இணைவு பலன்

அமிர்த்தத்திற்கு ஆசைபட்ட அசுரன் சுவர்ணபானு என்னும் ராகு, தேவர்களை போல உருமாறி தேவர்களுடன் தேவராக இருந்து அமிர்தத்தை அருந்தி விஷ்ணுவின் கோபத்திற்கு ஆளாகி தலை துண்டாக்கப்படுகிறான். அத்தகை ஆசை கொண்ட சுபர்ணபானுவின் தலையை மகாவிஷ்ணு துண்டாக்குகிறார். அமிர்தம் உண்டதனால் சகாவரம் பெற்ற சுவர்பாணு தலையில் ஆசையாகிய ராகுவும் உடல் விரக்தியாக கேதுவும் செயற்படுகிறது.

அத்தகைய ஆசைகளுக்கு காரகமான ராகுவும், ஆசைகளை பின்தொடரும் புத்திக்கு காரகனான புதனும் இணையும் போது புத்தி தீவிரமாக செயற்பட ஆரம்பிக்கிறது.

கணிதம், வாய்மை, எண்ணும் எழுத்தும், நூல்கள், இன்றைய தொலைதொடர்பு தொழில் நுட்பங்கள், ஆராய்ச்சிகளுக்கு காரகனான புதன் ராகுவுடன் இணையும் போது கணிதமேதையாவது, பொய் பேச வைப்பது, எழுத்து மூல ஆவணங்களால் பிரச்சினை வருவது, தொழில்நுடப் கோளாறுகள் ஏற்படுவது, மொபைலில் கோளாறு உண்டாவது, இலத்திரனியல் உபகரணங்களால் ஆபத்து வருவதுமாக இருக்கும்.

இக்கிரக அமர்வில் புதன் நல்ல நிலையில் நிற்கும் போது ராகு சேரும் போது வியாபாரத்தில்  அதிக ஆர்வத்தை தூண்டுவது, பெரியளவில்  வியாபார ஸ்தாபனம் அமைப்பது, ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுவது, உலவு துறையில் பணி புரிவது, பங்கு சந்தையில் வருமானம் ஈட்ட செய்வது, தரகு வருமானம்,  இசைக்கருவிகள் வாசிப்பது, கதை மற்றும் கவிதைகள் சிறப்பாக எழுதுவதன் மூலம் சமுதாயத்தில் முன்னுரிமையை பெற்று தருகிறது. 

No comments:

Post a Comment