Friday, 30 October 2020

சந்திர நாடி.....



சந்திர நாடி என்பது கோச்சார சந்திரனை மையமாக வைத்துப் பார்ப்பதே சந்திர நாடி அதாவது பிறந்த காலகிரகங்களின் மீது கோட்சார சந்திரன் பயணிக்கும் போது என்ன பலன் நடக்கும் என்பதை துல்லியமாக சொல்லி விடலாம் இதற்கு கணிதம் எல்லாம் தேவையில்லை முதலில் ஜாதகருடைய பெயர்,பாலினம் ஆணா, பெண்ணா,ஜாதகருடைய வயது பிறந்த தேதி நேரம் கண்டிப்பாக இருக்கணும்.அடுத்து கிரக காரகத்துவம்
ராசி காரகத்துவம்,கிரகச்சேர்க்கை,
கிரகங்களின்பலம்,பலவீனம்,பாவக காரகத்துவம்,ஒரு தனித்த கிரகப் பார்வை, ஒரு கிரகத்தின் பார்வையை பெற்ற கிரகத்தின்பார்வை,மற்றும் கோச்சாரம்,தசா புத்தி இது மட்டும் இருந்தால் போதும்.முதலில் பிறந்த காலக்கிரகங்களை இராசி கட்டத்தில் அடைவு செய்துகொள்ளவேண்டும்,
பின்பு கோச்சார கிரகங்களை வெளிக் கட்டத்தில் வரிசையாக எழுத வேண்டும்,
அதன்பின்பு என்ன திசாபுத்தி அந்தரம் நடப்பில் உள்ளது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.முதலில் கோச்சார சந்திரன் பிறந்த காலங்களில் எதன் மேல் பயணிக்கிறது என்று பார்க்கவேண்டும்.ஒருவேளை அந்த வீட்டில் கிரகம் இல்லை என்றால்
கோச்சார சந்திரனின் பார்வையில் ஏதாவது கிரகம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.முதலில் சேர்ந்த கிரகம் வேலை செய்யும் அடுத்து பார்த்த கிரகம் உதாரணமாக:இன்று சந்திரன்
மீனத்தில் உத்திரட்டாதியில் ஓடிக்கொண்டிருக்கிறது.இன்று ஒருவர் ஜாதகம் பார்க்க வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருடைய ஜாதகத்தில் பிறந்த கால சனி மீனத்தில் உள்ளது கூடவே பிறந்த காலச் சந்திரனும் இருக்கிறது வேறு எந்த கிரகத்தின் சேர்க்கையோ பார்வையோ கிடை யாது அதனால் சனியின் காரகத்துவத்தையும் சந்திரனின்
காரகத்துவத்தையுமே பலனுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்
லக்னம் மிதுனம் வருபவர் நிச்சயமாக தொழிலையும் வருமானத்தையும் பற்றிதான் கேள்வி இருக்கும்
சந்திரன்+சனிபுனர்பூ சுப காரியத்தை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கும் சுய
தொழிலில் ஆர்வம் அதிகமாக இருக்கும்
லக்னத்திற்கு 4,6,8,12ல் சந்திரன்இருந்தால் சொந்தத் தொழில் வெற்றியைத் தராது மிகப்பெரிய இழப்பை தரும் தொழில் நன்மை நல்ல ஸ்தானத்தில் அமைந்தால் அது சிறப்பான புனர்பூ இந்த ஜாதகருக்கு
சனி திசை சனி புத்தி அந்தரம் வரும் போது மிகச் சிறப்பாக இருக்கும்.
கோச்சார சந்திரனை வைத்து முக்காலத்தையும் அறியலாம்.அதாவது
கோச்சார சந்திரன் பயணிக்கக்கூடிய ராசி நிகழ்கால ராசி,எந்த ராசியைக் கடந்து வந்ததோ அது கடந்த கால ராசி,
எந்த ராசியை தொடப் போகிறதோஅது எதிர்காலம் இதை வைத்து நடந்து முடிந்த பலன்களையும், நடக்கும் பலன்களையும்,நடக்கப்போகும் பலன்களையும்,எளிமையாகச் சொல்லலாம்

No comments:

Post a Comment