Saturday, 31 October 2020

சுக்ரன்+கேது சேர்க்கை பாசான யோகம் ஆகும்

சுக்ரன்+கேது சேர்க்கை பாசான யோகம் ஆகும்,,

 இந்த சேர்க்கை ராசியில் இருந்தால் chemical , மருந்து, உரம், சம்பந்த பணி அல்லது chemical புகை, மருந்து தொழில் சாலை, மெடிகல் கடை, சம்பந்த மான இடங்களில் தொழில் சார்ந்து அமைகிறது,,

இதே சுக்ரன்+கேது சேர்க்கை நவாம்சத்தில் இருப்பின் தற்கொலை எண்ணங்கள் வரும்,

 அல்லது குடும்ப ரத்த உறவுகளில் யாரேனும் தற்கொலை செய்கிறார்கள்,, 

சுக்ரன் கேது சேர்க்கை நவாம்ச லக்னத்தில் இருந்து 7இல் இருந்தால் வாழ்க்கை துணை தற்கொலை எண்ணம், 
அல்லது நெருங்கிய நண்பர் தற்கொலை,

,5 இல் இருந்தால் குழந்தைகள் எதேனும் விசதை விளையாட்டாக வாயில் வைக்கும் நிலை, அல்லது பெற்ற தாயே குழந்தைக்கு விசம் ஊட்டும் நிலை,

2 இல் இருப்பின் குடும்பத்தில் யாரேனும் தற்கொலை,,

6 இல் இருப்பின் நமது எதிரி யாரேனும் திடீர் தற்கொலை, அல்லது chemical, மருந்து துறையில் பணி, இப்படி ஒவ்வொரு பாவத்திற்கு பாஸான யோகம் அளித்து வருகிறது,,

இந்த பாஷாண யோகத்தை முறியடிக்கும் பரிகாரம் ஒன்றே ஒன்று,, யானை கோமியம் வீட்டை சுற்றி 6 வருடத்திற்கு ஒரு முறை யாவது தெளிக்க வேண்டும்,, 

அதே போல ராசி கட்டத்தில் 4 இல் மாந்தீ இருந்தாலும் இந்த பரிகாரம் செய்வது நல்லது,,

 பதிவு மனதை சுடும் பதிவு தான் என்பதை நான் அறிவேன்,, இனிமேல் தற்கொலை யாரும் செய்ய கூடாது என்ற அடிப்படை இல் பரிகாரதுடன் பதிந்து இருக்கிறேன்,, 

இந்த சேர்க்கை எப்போது பாஷாண யோகமாக வெளிப்பட்டு தற்கொலைக்கு தூண்டுகிறது என்றால் முக்கியமாக கேது புத்தி சுக்ர புத்தி காலங்களிலும் நடக்கிறது,, மற்றும் அஷ்டம அதிபதி தசயில்  தசை நாதன் இருக்கும் வீட்டில் இருந்து எண்ணி வர கேது அல்லது சுக்ரன் 6,8,12, இல் இருப்பின் சம்பவம் நிகழ்த்துகிறது,,(ராசி கட்டம்)

விருச்சிக நவாம்சத்தில் சுக்ரன்+கேது சேர்க்கை இருப்பின் தற்கொலை எண்ணம் எளிதில் வருகிறது,,

மற்றும்

தற்கொலை செய்ய மனம் தூண்ட படுகிறது எனில் மிருத்யுஞ்ச மந்திரத்தை படியுங்கள்,,அல்லது பாடல் இருப்பின் ஒலிக்க விடுங்கள்,, எமன் தூரமாக போய்விடுவார்,,

அதிவேக வாகனம் இயக்கும் நண்பர்களும் இதை ஒலிக்க செய்வது நல்லது விபத்துகள் மட்டு படும்,,

மற்றும் இந்த பிறப்பில் தற்கொலை செய்தால் மீண்டும் மனித பிறவி கொடுப்பார்,,அதில் மீண்டும் தற்கொலை செய்ய மனம் தூண்டும் என செய்வது,, எப்போது பிறவியை முடிப்பது ,, தற்கொலை ஒரு முட்டாள் தனம்,,

இறைவன் கொடுத்த மூச்சு காற்று அவனே நிறுத்த வேண்டும் தவிர நமக்கு உரிமை இல்லை,,

ஒரு கிரகம் நம்மை பிரச்சினைக்கு தள்ளுகிறது எனில் இன்னொரு கிரகம் காப்பாற்ற ரெடியாக இருக்கும்,,, அது வரை பொறுமை வேண்டும்,

கிரகங்களுக்கு பகை நட்பு என்று எதற்கு இருக்கிறது,, இதற்குத்தான்,,,

காப்பாற்றும் காப்பாற்றும் என்று நினைத்தால் கை விட படார்,,,

நாம் என்ன நினைக்கிறோமோ அதை தான் இந்த பிரபஞ்சம் கொடுக்கிறது,, இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,,,,,

ஓம் நீல லோகிதாய நமக சதிஷ் குமார்

No comments:

Post a Comment