Saturday, 31 October 2020

பரிகாரம் பற்றிய சிறிய விளக்கம்

பரிகாரம் பற்றிய சிறிய விளக்கம்:

சாதாரணமாக கோவில் சென்று வழிபடுவது வேறு ,,,

பரிகாரம் பரிகாரதிற்காக கோவில் சென்று வழிபாடு செய்வது வேறு,,,

, பரிகாரம் என்று செய்தால் அதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க வேண்டும்,,

(மீண்டும் மீண்டும் என்றால் நிறைய கேள்விகள் வரும்,)

புரியும் விதமாக 

அதாவது உதாரணமாக துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடுங்கள் என்போம் 48 நாள் ஒரு மண்டலம் செய்யுங்கள் என்போம்,, ஜாதகரும் செய்வார் கொஞ்சம் பிரச்சனையில் இருந்து விடுபடுவார் விடுபட்ட பின்னர் துர்க்கை அம்மனை மறந்து விடுவார்,,, 

மறந்த பின்னர் என்ன ஆகும் மறுபடியும் பிரச்சினை கொடுக்க ஆரம்பிக்கும்,, அந்த சமயத்தில் மீண்டும் 48 நாள் பூஜை ஆரம்பிக்க வேண்டும்,,

பரிகாரம் என்பது நம்மை கடிக்க வரும் சிங்கத்திற்கு போடும் இறைச்சி துண்டு,,, மாதிரி

சிங்கம் இறைச்சியை தின்று பசியாரி ஓய்வு எடுக்கும்,, மீண்டும் சிங்கம் பசிக்கும் போது நம்மை கடிக்க வரும்,, கையில் இறைச்சி இருந்தால் போடலாம் இல்லை எனில் அட்டாக் பண்ணிரும்,, அது போல தான்,, பரிகாரம் என்பது தற்காலிகமாக தப்பிக்க உதவும் ஓரு இறை வழி.,, பிரச்சினைகள் ஓயாது கிரகங்கள் ஓய்வது இல்லை,

உதாரணமாக காளகஸ்தி  கோவில் சென்று பரிகாரம் செய்வது,, அல்லது 
ஒரு சர்ப்ப பிரதிஷ்டை பரிகாரம் செய்வது இதெல்லாம் ராகு கேது  கொஞ்ச நாள் கொஞ்ச வருடம் நிம்மதியாக விட்டு வைகும்,, பின்னர் பிரச்சினை கொடுக்க ஆரம்பிக்கும்,, மீண்டும் சர்ப பிரதிஷ்டை செய்ய வேண்டுமா என்றால் இல்லை,, அந்த சிலை இருக்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று பூஜை செய்வது போதும்,, அதாவது அந்த பிரதிஷ்டை செய்த சிலை குல தெய்வத்திருக்கு சமம் ஆகும்,
 

ஒரு குழுவில் கேட்க பட்ட கேள்வி :

எனக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம்.தயவு செய்து ஆசான்கள் யாரும் குதர்கம் என்று எண்ண வேண்டாம்..
ஜாதகத்தில் தோஷ பரிகாரம் செய்கிறோமல்லவா,உதாரணத்திற்கு ஜனன ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரம் செய்கிறோம் என்று வைத்து கொள்வோம்..பரிகாரத்திற்கு பின்பும் அதே கிரகங்கள் அதே இடத்தில்தானே ஜாதகத்தில் இருக்கும்..பரிகாரம் பலனளித்ததா என எங்கனம் அறிந்து கொள்வது..
தயவு செய்து தவறாக எண்ணாமல் பதிலளிக்கவும,,

பதில்:

சுய ஜாதகத்தில் இருக்கும் கிரகம் மீது கோட்சார கிரகங்கள் சஞ்சரிக்கும் போது தான் பிரச்சினை வரும்,,, கோட்சார கிரகங்கள் பயணம் செய்யும் போது தான் உங்கள் சுய ஜாதக பலன் வேலை செய்யும்,, சுக்ர தசை உங்கள் லக்னத்திற்கு நன்மை செய்யும் என்று எடுத்து கொள்வோம் 20 வருடமும் நன்மை செய்கிறதா இல்லயே கோட்சார சுக்ரன் சஞ்சரிக்கும் வீடு பகை நீசம் உச்சம் என்று மாறி மாறி பயணம் செய்யும் போது தான் நன்மை தீமை செய்து வருகிறது, 

எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்ய போகிறோம் அந்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய போகிறோம் அந்த பாவத்துக்கு அந்த கிரகம் கோட்சாரதில் நல்ல இடத்தில் இருக்கிறதா என்பதை பொறுத்தே பரிகாரம் வேலை செய்யும் ஒரு ஜோதிடர் ஒரு பரிகாரம் சொன்னார் பரிகாரம் செய்தும் மாற்றம் இல்லை என்று சொல்வதுண்டு அது இதனால் தான் ,,

பரிகாரம் செய்யாமல் கூட சில பிரச்சினைகள் தானே மறைந்து போகிறது அதுவும் எதனால் கோட்சார கிரகம் சஞ்சரிக்கும் வீடு சாதகமாக அமைவதால் தான்,

உதாரணமாக தற்போது கால புருசனுக்கு 2,8, இல் சார்ப்பங்கள் இருக்கிறது இந்த கால கட்டத்தில் மேஷம், ரிஷபம், விருச்சிகம், துலாம், லக்ன ராசி காரர்களுக்கு சர்ப்ப தோசம் பரிகாரம் செய்ய நிவர்த்தி அடையும்,, அதே போல குரு தனுசில் இருந்து மிதுனம் சிம்மம் பார்வை செய்கிறார் குழந்தை வேண்டி பரிகாரம் செய்ய இந்த லக்ன ராசிக்கு அது வேலை செய்யும்,,

ஒரு கிரகம் நமக்கு யோக தசை நடத்தும் போது நல்ல பலன் வந்து கொண்டே இருக்கும் அஸ்டமசனி, அர்த்தாஷ்டம சனி என்று கோட்சார சனி சாதகமிலா பலனை கொடுக்க தான் செய்கிறது,,

பரிகாரம் செய்த பின்னரும் சுய ஜாதக அமைப்பு இல் கிரகம் மாறுவது இல்லை ஆனால் கோட்சார கிரகம் தினம் மும், மாத மாதமும், வருட வருடமும், மாரத்தான் செய்கிறது,,,,

No comments:

Post a Comment