Friday, 27 November 2020

தர்மம் பெறுவதால் கர்மம் சேருமா...!

தர்மம் பெறுவதால் கர்மம் சேருமா...! மனிதர் தர்மம் செய்வது கர்மத்தை கழிக்கவே எள்ளளவும் இதில் சந்தேகமில்லை, ஆனால் தர்மமாக இடும் பொருள் எதிராளிக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டியது அவசியம், அதாவது பசித்தவனே புசிப்பான், இதையே பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பார்கள், தர்மத்தால்/தானத்தால் நல் கர்மம் சேரவேண்டுமெனில்/தீய கர்மம் கழிக்கப்பட வேண்டுமெனில், நிச்சயம் நீங்கள் தர்மமாக/தானமாக கொடுக்கும் பொருளை எதிராளி பெற தகுதியானவராக இருக்க வேண்டியது அவசியமாகிறது... இப்படி தகுதியானவருக்கு தர்மம்/தானம் தரும்போதே அது முழுமை பெற்று பலனை வழங்கும், தர்மம்/தானம் வித்தியாசம் என்ன?, தர்மம் என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுப்பது, தானம் ஒரு காரண காரியம் தொட்டு செய்வது, தர்மமோ/தானமோ தகுதியுடையவர் பெரும் போதே அது சமநிலை பெரும், உதாரணமாக 2 நாள் பட்டினி இருப்பவனுக்கு புத்தாடை தர்மம்/தானம் கொடுத்தால் அது சமநிலை அல்ல, அவனுக்கு தேவை உணவு, இப்படி எந்த பரிகாரம் என்றாலும் சமநிலை தத்துவத்தை பின்பற்றி செய்யும்போதே அது முழுமையடையும்... சரி இப்போது தர்மம்/தானம் பெறுபவருக்கு கர்மம் சேருமா என்பது பரவலாக எல்லோரிடமும் எழும் கேள்வி?, இதற்கான பதில், இந்த அகிலமே கொடுக்கல் வாங்கலில் தான் சுழலுகிறது, கடவுளுக்கு பக்தியை அளித்தால் அருளை பெறலாம், சக மனிதனுக்கு அன்பை அளித்தால் ஆதரவை பெறலாம், இப்படி பல வகையில் அகிலமே பரிமாற்றத்தில் தான் இயங்குகிறது, இதில் தானம்/தர்மம் பெறுவதால் கர்மம் எவ்வாறு சேரும்?!, ஆனால் இதில் சில விதிகள் உள்ளன அதை இங்கே தருகிறேன், உங்களுக்கு உபயோகமில்லாத பொருளை தானமாகவோ/தர்மமாகவோ பேரவேண்டாம், இலவசம் வேறு, தானம்/தர்மம் வேறு, இலவசம் என்பது உள்நோக்கம் கொண்டது, தானம் ஒருவரின் கர்ம கழிதலை நிறைவேற்ற உதவுவது, தர்மம் ஒருவரின் புண்ணிய சேர்க்கைக்கு வித்திடும், அதாவது புண்ணியம் சேர்க்க உதவுவது இதனால் உங்களுக்கு புண்ணியம் சேரும், ஆகவே இலவசமாக பெறுவது இதில் அடங்காது, சோதிடத்தில் பரிகாரம் உரைக்கும் போது சில பொருளை அவரவர் ஜாதகத்துக்கு ஏற்றார் போல் தானம் செய்ய சொல்வார்கள், அவ்வாறு தானம் தரும் போது இந்த பதிவில் கூறியவற்றை நினைவில் வையுங்கள், உடனே கேள்வி எழும் நான் தானம் தரும் நபரை சோதித்தா தர வேண்டும்? இது என்ன அறிவுரை நடைமுறை சாத்தியம் அல்லவே என்று விமர்சனங்கள் எழும்?!, ஆம் நிச்சயம் சோதித்தே தர வேண்டும், கடவுளே தன் பக்தனின் நோக்கத்தை பலவகையில் (ஜபம், தவம்) சோதித்தே அருள்வார், அப்படி இருக்கையில் இந்த கலியுகத்தில் தானம்/தர்மம் தரும் முன்பு சோதித்து தருவதே உத்தமம், நீங்கள் ஒருவருக்கு உணவு தானம் தருக்கிறீர்கள், ஆனால் அவரோ ஏற்கனவே நன்றாக உணவருந்தி விட்டார், இப்போது நீங்கள் தருவதை ஒன்று அவர் வேறொருவருக்கு தரவேண்டும், அல்லது கீழே எரிய வேண்டும், இந்த யுகமோ கலி யுகம் மற்றவருக்கு தரவேண்டும் என்கிற எண்ணம் மிக குறைவான யுகம் ஆகவே அந்த நபர் அந்த உணவை வீண் செய்யும் வாய்ப்பு அதிகம், இதனால் உங்களுக்கு தானம் அளித்த பலன் கிட்டாது, இதற்கு என்ன செய்ய வேண்டும் தானம் தரும் முன்பு நீங்கள் தேர்ந்தெடுத்த நபரிடம் அவர் விரும்பும் உணவெது என்பதை கேட்டு அதை வாங்கி கொடுத்து அவர் சாப்பிடுவதை அருகில் நின்று பார்த்து பின்பு நம் பணியை தொடர நகரவேண்டும் இதுவே நான் பின்பற்றுவது, அதே போல் தானம்/தர்மம் பெறுபவர் இவ்வாறு வீண் செய்தால் அவர்களுக்கு கண்டிப்பாக தீய கர்மம் பிடிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன், மேலும் பணம் தானம் தருவது மிக தவறு, அந்த காலங்களில் பொற்காசுகள் இருந்தன அதன் காரகம் தங்கம்(குரு) காலபுருஷ தத்துவத்தில் 9ம் அதிபதி அதாவது தானம்/தர்மத்துக்கு அதிபதி குரு ஆவார், ஆகவே அவரின் காரகமான தங்க காசை தானம்/தர்மம் செய்வதன் வழியே ஒருவருக்கு கர்ம கழித்தல்/நல் கர்ம சேர்க்கையும் கிட்டும், மேலும் தானம்/தர்மம் பெற்றவரும் செழிப்படைந்தார், ஆனால் இப்போது நடப்பது கலியுகம் இதில் நாணயங்கள் பெரும்பாலும் சனியின் உலோகம், பணம் நோட்டு என்றால் சந்திரனின் ஹம்சம் இவைகளே நிரம்பியுள்ளன, இதனால் இதை தானம்/தர்மம் செய்வதால் ஒருவருக்கு வேலை/தொழில் கஷ்டம், மன சஞ்சலமே மிஞ்சும், இப்போது புழக்கத்தில் உள்ள நாணயம்/பணத்தை செய்த காரியத்துக்கு ஊதியமாக தரலாம் ஆனால் தானம்/தர்மம் செய்யலாகாது, இந்த கலியுகத்தில் பொருளை மட்டுமே தானம்/தர்மம் செய்ய வேண்டும், உடனே நண்பர் உதவி கேட்கிறார் அவருக்கு பண உதவி அளித்தல் அது தவறா?!, என்று சில முந்திரிகோட்டை கேள்விகள் முளைக்கும், அவர்களுக்கு நான் கூறுவது நீங்கள் செய்வது உதவி(கடன்) அதை திரும்ப பெற போகிறீர்கள் (ஆமா இப்போலாம் யார் பணத்தை திரும்ப ஒழுங்கா கொடுக்கிறார்கள் என்று புலம்ப வேண்டாம்) தானம்/தர்மம் திரும்ப உங்களிடம் கர்மாவாகவே வரும் ஆகவே அது வேறு, இது வேறு நீங்களும் குழம்பி மற்றவரையும் குழப்பாமல் இருத்தல் அனைவருக்கும் நலம், மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...!

No comments:

Post a Comment