Thursday, 26 November 2020

பிராஸ்டேட்

ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம்

பிராஸ்டேட்  சுரப்பிகள் ஆண்களுக்கே உண்டு. இவை பெரிதானால் பிரச்னைகளை உருவாக்கும். சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும். அதுவும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இது வரக்கூடிய சாத்தியக்கூறும் அதிகம் உள்ளது. மனிதர்களின் சராசரி வயது கூடிக் கொண்டே போக, இந்நோயின் தாக்கமும் அதிகமாகிக் கொண்டு வரும்.

பிராஸ்டேட் சுரப்பி என்றால் என்ன? அதன் செயல்பாடு என்ன?

அது ஒரு மிகச் சிறிய உறுப்பு. பிறப்பைக் கொண்டு வரும் உறுப்புக்களோடு அதுவும் உதவுகிறது

சிறுநீர்ப் பைக்கு சற்று கீழே அது இருக்கிறது. குதத்திற்கு முன் இருக்கிறது. இது யுரீத்ராவின் ஆரம்ப நிலையைச் சுற்றி இருக்கிறது. வேறு விதமாகச் சொன்னால், யுரீத்ராவின் ஆரம்ப பகுதியே பிராஸ்டேட் சுரப்பி மூலமாகத்தான் செல்கிறது.

இது ஆண்களுக்கு இருக்கும் குழந்தை பிறப்புக்கு உதவும் அங்கம். இது ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அந்த திரவத்தோடு ஆண் விந்துக்கள் ஏர்கப் பட்டு யுரீத்ராவுக்குள் உடலுறவின் பொழுது செலுத்தப்படுகிறது.

Benign Prostatic Hyperplasia (BPH) என்றால் என்ன?

பிராஸ்டேட் சுரப்பிக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்னை - இது அபாயமற்றது என்று பொருள். இதனால். இந்த அங்கத்திற்கு புற்றுநோய் இல்லை என்று அர்த்தம்.

Hyperplasia என்றால் பெரிதாகுதல் என்று பொருள்.

இதனால் புற்று நோய் இல்லாத பெருக்கம் என்று பொருள். ஆண்களுக்கு வயதாக ஆக இது ஏற்படுவது சகஜம். அனேகமாக எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தும். வயது ஆக ஆக அதன் பருமன் கூடும்.

இந்த நோய்க்கான அறிகுறிகள்

இந்த நோய்க்கான அறிகுறிகள் பெரும்பாலும் 50 வயது ஆன பிறகே தெரிய ஆரம்பிக்கின்றன. 60 வயதைத் தாண்டியவர்களில் பாதிப் பேருக்கும், 70 களில் இருப்பவர்களில் 90 சதவீத ஆண்களுக்கும் அல்லது 80 களில் இருக்கும் ஆண்களிடமும் இந்த வகை அறிகுறிகள் தென்படும். பெரும்பாலும், இந்த அறிகுறிகள் மெல்லமெல்ல வருடங்கள் ஆக, ஆக மோசமான நிலையைத் தொடும். பெரும்பாலான அடையாளங்கள் கீழ்க் கண்டவாறு இருக்கும்.

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிலும் இரவு வேளைகளில் எழுந்திருக்கக் கட்டுப் படுத்தப்படுதல். இது மிக ஆரம்ப கால அறிகுறிகளாகும்.
  • மிக மெதுவாகவும் மிகவும் நலிந்தும் வெளிவரும் சிறுநீர்ப் போக்கு.
  • சிறுநீர் போக ஆரம்பிக்கும்பொழுது சற்றே வலி எடுத்தல், அப்பொழுது சிறுநீர்ப் பையில் நிரம்ப சிறுநீர் பெருகியிருக்கும் உணர்வு இருந்தாலும் அப்படி வலி எடுக்கும்.
  • உடனுக்குடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் மிகவும் கஷ்டப்படுத்தும் அறிகுறி.
  • சிறுநீர் கழித்துமுடிந்த பிறகு, சொட்டு சொட்டாக சொட்டுதல் அல்லது கசிதல். சிறுநீர் வெளிவந்து முடிந்ததும் கூட ஒரு சில சொட்டுக்கள் வெளியேறுதல். உள்ளாடை நனைதல்.
  • சிறுநீர்ப்பை எப்பொழுதும் முழுமையாக காலியாக்கப்படாமல் இருத்தல்.

இந்த நோயினால் எழும் சிக்கல்கள்

காலம் செல்லச் செல்ல, ஒரு சில நோயாளிகளுக்கு இந்த நோய் தீவிர பிரச்னைகளைக் கொண்டு வரும். அதுவும் சிகிச்சை அளிக்காமலேயே தொடர்ந்தால் சிக்கல்கள் எழும். பொதுவாக எழும் சிக்கல்கள் ஆவன:

கடுமையான சிறுநீர் தேக்கம்: சிகிச்சையே அளிக்கப் படாமல் நிற்கும் இந்த நோய் ஒரு நாள் திடீரென்று தாங்கமுடியாத வலியோடு சிறுநீர் வெளியேறுவதை தடுத்து விடும். இவ்வகை நோயாளிகளுக்கு கதீட்டர் எனும் குழாய் சொருகப்பட்டு சிறுநீரை அந்தப் பையிலிருந்து வெளியேற்ற நேரிடும்.

நாள்பட்ட சிறுநீர் தேக்கம்: நீண்ட நாட்களுக்கு சிறுநீர் ஒரு அளவில் தடுக்கப் படுவது மிக மோசமான ஒரு தேக்கத்தைக் கொண்டு வரும். இப்படி ஏற்படும் தேக்கத்தினால் வலி எதுவும் இருக்காது. மீதமுள்ள சிறுநீரின் அளவு அதிகமாக இருப்பதை இது காண்பிக்கும்.

வழக்கமாக முழுமையாக சிறுநீர்ப்பை காலி செய்யப்படவில்லை என்பதைக் காண்பிக்கும். அல்லது சிறு சிறு அளவு மெல்ல மெல்ல வெளிவரும் சிறுநீர் உபரியாக வெளிவருவது.

சிறுநீர்ப்பைக்கு அல்லது சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுதல்: மிக மோசமாக தேக்கமடையும் சிறுநீர், சிறுநீர்ப் பையின் வெளிப்புறச் சதைகளை நீட்டிக்கச்செய்கிறது, அகலப்படுத்துகிறது. நெடுநாட்களுக்குப் பிறகு சிறுநீர்ப்பை நலிவடைகிறது. அதற்குப் பிறகு அது சுருங்குவதே இல்லை.

அதிக அளவில் சிறுநீர் தேக்கமடைவது சிறுநீர்ப்பைக்கு மேலும் மேலும் அழுத்தத்தைக் கொண்டு வருகிறது. இதனால் யுரீட்டரில் இருக்கும் சிறுநீரின் மீது அழுத்தம் அதிகரிக்கும். அதன் மூலம் சிறுநீரகங்களுக்குச் செல்லும் சிறுநீரிலும் அழுத்தம் அதிகரிக்கும். அதன் காரணமாக யுரீட்டரில் நிரம்பி வழிவதும் சிறுநீரகங்கள் நிரம்பி வழிவதினாலும் சிறுநீரகங்கள் செயலிழக்கும்.

சிறுநீர்ப் பாதை தொற்று மற்றும் சிறுநீர்ப்பை கற்கள் : சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்ற முடியாத நிலை நாளுக்கு நாள் தொற்றுதலின் சாத்தியக்கூற்றை அதிகரிக்கச் செய்யும். அதன் காரணமாக சிறுநீர்ப் பையில் கற்கள் உருவாகும் சாத்தியக் கூற்றையும் அதிகரிக்கச் செய்யும்.

குறிப்பு - இந்த நோய் பிராஸ்டேட்டில் உருவாகும் புற்று நோயின் சாத்தியக் சுற்றை அதிகப்படுத்துவதில்லை.

BPHன் அறிகுறிகளை எப்படிக் கண்டறிவது.

மேற் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை காணும்பொழுது, கீழ்க்கண்ட சோதனைகளைச் செய்து பார்த்து நோயைக் கண்டறிய வேண்டும். அதன் மூலம் பிராஸ்டேட் சுரப்பி பெரிதாகிவிடவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

டிஜிட்டல் ரெக்டல் சோதனை (DRE) இந்த சோதனையின் முலம் நன்றாக குறிப்பிட்ட திரவத்தால் கழுவப் பட்டு கையுறைகள் அணிந்து நோயாளியின் மலவாயுக்குள் நுழைக்கப்படுகிறது. இதை அந்த சதைச் சுவர்களின் மூலமாக நுழைக்கப் படுகிறது. இந்த சோதனை மருத்துவருக்கு பிராஸ்டேட் சுரப்பியின் அளவையும் நிலைமையையும் எடுத்துக் காண்பிக்கும்.

இந்த நோயினால் பிராஸ்டேட் சுரப்பி பெரிதாகி இருப்பதும் மிருதுவாகவும் உறுதியாக இருப்பதும் தெரிய வரும். அதை விட்டு தடிமனாகவோ அல்லது ஒழுங்கற்ற நிலையிலோ அது இருப்பதாகத் தெரிந்தால், பிராஸ்டேட் சுரப்பியை புற்று நோய் தாக்கி இருக்கக் கூடிய சாத்தியக்கூற்றைச் சொல்லும் அல்லது அது கால்சிஃபிகேஷன் ஆகி இருக்கிறது என்று அர்த்தம்.

Ultrasound and post-void residual volume test

இந்த சோதனை ஒரளவுக்கு பிராஸ்டேட்டின் அளவை தீர்மானிக்கிறது. அத்துடன் புற்று நோய்க்கு உண்டான தடயங்கள் இருந்தால் தெரிவிக்கும். யுரீட்டர் தொய்ந்த நிலையில் காணப்படுகிறதா என்பதையும் தெரிவிக்கும். அல்லது சிறுநீரகத்தில் புண்கள் இருந்தால் எடுத்துக் காண்பிக்கும்.

இந்த சோதனை சிறுநீர்ப்பையில் வெளியிடப்படாமல் தங்கி விடும் சிறுநீரின் அளவைத் தீர்மானிக்கும். தேங்கி விடும் சிறுநீரின் அளவு 50 மி.லி.க்கும் குறைவாகவே இருந்தால், சிறுநீர்ப்பை போதுமான அளவு காலிசெய்யப்பட்டு விட்டது என்று அர்த்தம். அந்த கனஅளவு 100 லிருந்து 200மி.லி. ஆனாலே குறிப்பிடத்தக்கது என்று பொருள். பரிசோதனைகள் மேலும் தொடர்தல் வேண்டும்.

பிராஸ்டேட்டின் அறிகுறிகளின் அளவு

International Prostate symptom score (IPSS) or AUA (American Urological Association) விதித்திருக்கும் அளவு இந்த நோயின் தீவிரத்தைக் கண்டறிய உதவுகிறது. இந்த சோதனையில் நோய்க்கு பொதுவான கேள்விகள் பதிலளிக்கப்படுகின்றன. ஆண்களுக்கு என்று வகுக்கப்பட்ட கேள்விகளாகும் அவை.

ஆய்வக சோதனைகள்

ஆய்வகங்களில் செய்யப்படும் சோதனைகள் இந்த நோயைக் கண்டறிய அவ்வளவு பிரயோஜனமாக இருப்பதில்லை. ஆனால் இந்த நோயினால் வரும் சிக்கல்களை அறிய உதவுகிறது. அதே போன்ற அறிகுறிகள் தென்பட்டால், வரும் பிரச்னைகளை அறிய உதவும். தொற்றுதல் இல்லையா என்பதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுநீரகம் செயல்பாட்டையும் அதன் மூலம் அறியலாம்.

Blood PSA சோதனை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதுவே பிராஸ்டேட்டில் கான்சர் உள்ளதா என்பதைச் சொல்லும்,

இதர சோதனைகள் urofilometry, urodynamic studies, cystoscopy, prostate biopsy, intravenous pyelogram or CT urogram and retrograde pyclography போன்ற இதர சோதனைகள் செய்யப்பட்டு இந்த நோயின் குணங்களைக் கண்டறிய உதவுகின்றன.

இந்த நோயின் அடையாளங்கள் உடையவருக்கு பிராஸ்டேட் கான்சர் இருக்க முடியுமா? அந்த புற்றுநோய் இருப்பதை எப்படிக் கண்டறியலாம்?

ஆமாம். புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகளும் கிட்டத் தட்ட அதே போல் இருக்கும். ஆகவே மருத்துவரின் அறையில் காணப்படும் அறிகுறிகளினால் மட்டுமே இரு வேறு நிலைகளை அறிய முடியாது. ஆனால் இந்த நோய்க்கும் பிராஸ்டேட் புற்று நோய்க்கும் சம்பந்தமே கிடையாது. மூன்று முக்கிய பரிசோதனைகள் இந்த நோயை ஊர்ஜிதப் படுத்திக் காட்டும். அவையாவன: Digital rectal examination, blood test for prostate specific antigen (PSA) and prostate biopsy.

இந்த நோய்க்கான சிகிச்சை

நோயின் தீவிரமே இந்த நோயைக் காட்டிக் கொடுத்து சிகிச்சை செல்லும் வழிமுறையைக் காண்பிக்கும். இந்த அறிகுறிகள் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதைக் காண்பிக்கும். அத்துடன் கூடிய மருத்துவ நிலைகளையும் காண்பிக்கும். அறிகுறிகளை முதலில் குறைப்பதே சிகிச்சையின் நோக்கம். வாழும் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த வேண்டும். சிறுநீர்ப் பையில் தேங்கி விடும் சிறுநீரைக் குறைத்தல் வேண்டும். சிக்கல்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும்.

மூன்று சிகிச்சை முறைகள் இதற்கு என்று இருக்கின்றன.

அ. கவனத்தோடு காத்திருந்து வாழ்க்கை வழி முறைகளை மாற்றிக்கொள்ளுதல்.

ஆ மருத்துவ சிகிச்சை

இ. அறுவை சிகிச்சை

கவனத்தோடு காத்திருந்து வாழ்க்கை வழிமுறையை மாற்றிக் கொள்ளுதல்

இந்த முறையே ஆண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அறிகுறிகள் இலேசாகவோ அல்லது கடுமையாகவோ இருந்தால் அவர்களுக்குக் கவலையில்லை. இந்த கவன நாட்களில் நோயாளி தன் வாழ்க்கை முறையை நிச்சயமாக மாற்றுவதற்கு முயற்சி செய்தல் வேண்டும். அத்துடன் ஒவ்வொரு வருட முடிவிலும் உடலைப் பரிசோதித்துக் கொள்ளுதல் வேண்டும். அறிகுறிகள் மேலும் மோசமாகின்றனவா அல்லது நோயின் தீவிரம் குறைவதை காட்டுகின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும்.

கீழ்க்கண்ட வகையில் வாழ்க்கை முறை மாற வேண்டும்.

  • சிறுநீர் கழிப்பதில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பருகும் திரவங்களின் அளவில் மாற்றங்கள் வேண்டும்.
  • அடிக்கடி சிறுநீர்ப் பையை காலி செய்யக் கூடிய பழக்கம் வேண்டும். சிறுநீரை நீண்ட நேரம் தேக்கி வைக்க வேண்டாம். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் உடனேயே எழுந்து சென்று கழித்து விட்டு வரவும்.
  • இரு முறை தொடர்ந்தாற் போல சிறுநீர் கழிக்க வேண்டும். முதலில் சிறுநீர்ப்பையை காலி செய்து விடவும். ஒரு சில கணங்கள் தாமதிக்கவும். மீண்டும் காலி செய்யவும். அதற்காக மிகவும் சிரமப் படல் வேண்டாம். அல்லது மிக மிக சுத்தமாகக்காலி செய்யும் வரை முயல வேண்டாம்.
  • மது அருந்துவதை கண்டிப்பாக நிறுத்தவும். காஃபின் இருக்கும் திரவத்தை மாலையில் குடிப்பதைத் தவிர்க்கவும். இரண்டுமே சிறுநீர்ப் பையின் தசைகளுக்கு கேடு விளைவிக்கும். இரண்டுமே சிறுநீரகத்தை தூண்டி சிறுநீர் போக வைக்கும். இதனால் இரவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் மேலிடும்.
  • மிகவும் அதிகமாக பருகும் பானங்களைப் பருகுதல் வேண்டாம். ஒரு நாளைக்கு 3 லிட்டர் திரவங்கள் அல்லது அதற்கும் குறைவாகப் பருகலாம். ஒரே முறையில் நிரம்ப குடிப்பதை விட்டு விட்டு பல முறைகளுக்கு அதை நிரவிக் குடிக்கவும். ஒவ்வொரு நாளும் இப்படியே செய்து வரவும்.
  • படுக்கப் போவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குடிக்கும் திரவங்களைக் குடிப்பதை தவிர்க்கவும். அல்லது வெளியே எங்காவது செல்ல நினைத்தால் அதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குடிக்கும் பானம் எதையும் குடிக்க வேண்டாம்.
  • மருந்துக் கடையில் விற்கப்படும் சில மருந்துகளை அப்படியே கவுண்டரில் கொடுத்தவுடன் (நுரையீரலை அழுத்தமில்லாமல் செய்யும் மருந்து ஆஸ்த்மாவுக்காக கொடுக்கப்படுபவை) எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த மருந்துகள் நோயின் அறிகுறிகளை தீவிரப் படுத்தும். அல்லது சிறுநீரை தேங்க வைக்கும்.
  • மருத்துவத்தின் கால நேரங்களில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அந்த மாற்றங்கள் வெளியேறும் சிறுநீரின் அளவை அதிகரிக்கும். (உதாரணம்; டையூரெடிக்ஸ்)
  • எப்பொழுதுமே உடலை வெதுவெதுப்பான நிலையில் வைத்து முறையாக தேகப் பயிற்சி செய்து வரவும். குளிர்ந்த வானிலையும் தேகப் பயிற்சி இல்லாமல் இருத்தலும் நிலைமையை அல்லது அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.
  • அடிவயிற்றுப் பகுதிக்கு உரிய தேகப் பயிற்சிகளைப் பயின்று செய்து வரவும். அதனால் சிறுநீர் ஒழுகிக் கசிவது நிற்கும். அப்படிப்பட்ட தேகப் பயிற்சிகள், அந்த உடல் பாகத்தில் இருக்கும் சதைகளுக்கு வலுவூட்டுகிறது. அதுவே சிறுநீர்ப் பையை தாங்குகிறது. மீண்டும் மீண்டும் அடிவயிற்று சதையை இறுக்கவும் பின்பு தளர்த்தவும் செய்கிறது.
  • சிறுநீர்ப்பைக்கு கொடுக்கப்படும் தேகப் பயிற்சி முறையாகவும் முறையான கால இடைவெளிகளிலும் முழுமையாகவும் காலி செய்யப் பயிற்சி தருகிறது. முறையான நேர இடைவெளிகளில் சிறுநீர் கழிக்கவும்.
  • மலச்சிக்கல் இருந்தால் அதிலிருந்து விடுபட வழி தேடுங்கள்.
  • மன அழுத்தங்களைக் குறையுங்கள். பதைபதைப்பையும் தவிருங்கள். அது தொடர்ந்தால், சிறுநீர் கழிப்பது மேலும் பெருகும்.

மருத்துவ சிகிச்சை

மருத்துவம் என்பது மிகவும் பொதுவாக மற்றும் உடனடியான அணுகுமுறையாக அனுசரிக்கப் பட வேண்டியது.

மருத்துவத்தின் மூலம் இந்த நோயின் சாதாரண அல்லது ஆரம்ப கால அறிகுறிகள் அகற்றப் படும். அத்துடன் மருத்துவமே மேலும் வலுவான அறிகுறிகளை எல்லாம் குறைக்கும். இது சிகிச்சை அளிக்கப் பட்ட ஆண்களில் 2/3 என்ற விகிதத்தில் குறைக்கிறது. பிராஸ்டேட் பெரிதாகி விட்ட நிலையை இரண்டு பிரிவான மருந்துகளால் தடுத்து நிறுத்தலாம். ஒன்றுக்கு alpha blockers என்று பெயர். மற்றொன்றுக்கு anti androgens என்று பெயர்.

alpha blockers. (tamsulosin, alfuzosin, terazosin and dexazosin) போன்றவை அந்த மருந்துகளாகும். இவை பிராஸ்டேட் சுரப்பிகளுக்கு சுற்றி இருக்கும் தசைகளை தளரச் செய்து சிறுநீர்ப் பாதையில் இருக்கும் தடைகளை அகற்றுகிறது. அப்படி அகற்றி சிறு நீரை எளிதாக தடையின்றி செல்லச் செய்கிறது. மிக மிகப் பொதுவாக இந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவு, சற்று தலை இலேசாக இருப்பதாக உணர ஆரம்பித்தல், மயக்கமும் வலியும் தெரியும்.

5-alpha-reductase inhibitors (finasteride and dutasteride) போன்ற மருந்துகளே பிராஸ்டேட்டின் அளவைக் குறைக்கும். இந்த மருந்துகள் வெளியேறும் சிறுநீரின் அளவும் அதிகரிக்கும்.

ஆல்ஃபா ப்ளாக்கர்ஸ் போல் அவை அவ்வளவு விரைவாக வேலை செய்வதில்லை. ஒரு ஆறு மாத காலம் காத்திருந்தே எந்த அபிவிருத்தியும் காண்கிறது. பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த சிகிச்சை நன்றாக வேலை செய்கிறது. அதுவும் பிராஸ்டேட் சுரப்பிகள் மிக மோசமாக பெரிதாகி இருக்கும் ஆண்களுக்கே நன்றாக வேலை செய்கிறது. இவற்றினால் வரும் பொதுவான பக்க விளைவுகள் - ஆண்குறி விரைத்து எழுந்து நிற்க முடியாமல் போதல், உடலுறவில் நாட்டமில்லாமல் போதல் மற்றும் ஆண்மையின் மையும் ஆகும்.

கலவையான சிகிச்சை மேலே சொல்லப்பட்ட ப்ளாக்கரையும் இன்ஹிபிட்டரையும் கலந்து சில சமயங்களில் மருத்துவம் செய்வதுண்டு. இந்தக் கலவை நன்றாகவே வேலை செய்யும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக கொடுப்பதை விட கலந்து கொடுத்தால் விளைவுகள் பயனுள்ளவையாக இருக்கும். மிக மோசமாக நிலைமையைக் கொண்ட ஆண்களுக்கு இந்தக் கலவை பரிந்துரைக்கப்படுகிறது. ஆல்ஃபா பிளாக்கரை மாத்திரம் கொடுத்தால், போதுமான குணம் தெரியாத பொழுது இந்தக் கலவையை பயன்படுத்தலாம்.

அறுவை சிகிச்சை

கீழ்க்கண்ட நிலைகளில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

  • மருத்துவ சிகிச்சைக்குக் கட்டுப்படாத மிக அதிக வீரியத்துடன் பிராஸ்டேட் சுரப்பிகள் அறிகுறிகளைக் காட்டினால்
  • மிக மோசமான அளவு சிறுநீர் தேக்கமடைந்தால்
  • மீண்டும் மீண்டும் சிறுநீர்ப்பாதையில் தொற்று தோன்றினால்
  • தொடர்ந்து சிறுநீரோடு இரத்தம் கலந்து போனால்
  • BPH சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்தால்
  • இந்த நோயுடன் கூடவே சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால்
  • சிறுநீர்ப்பையில் சிறுநீர்கழித்து முடிந்தவுடன் கொஞ்சம் தேங்கி விடுதல்

அறுவை சிகிச்சையை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அடிவயிற்றுப் பகுதியை மிதமான அளவே கீறி உள்ளே சிகிச்சையை மேற்கொள்ளுதலும், முழுமையான அளவு மேற்கொள்ளுதலும் இரு வகைகளாகும்.

மிகப் பொதுவாக மேற்கொள்ளப்படுவது Trans urethral resection of the prostate எனும் முறையாகும். இப்பொழுது எல்லாம் புதுப்புது முறைகள் வந்து விட்டன. அவற்றின் மூலம் சிறியதும், நடுத்தர அளவுள்ள சுரப்பிகளுக்கு எல்லாம் நிவாரணம் கொடுக்க முடிகிறது.

அறுவை சிகிச்சைகள்

மேலே சொல்லப்பட்ட அறுவை சிகிச்சையே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. அல்லது உடலை அறுத்து பாகத்தை முழுமையாக வெளிப்படுத்திச் செய்யப்படும் சிகிச்சையே மிகவும் பொதுவானது.

Transurethral resection of the prostate

இந்த சிகிச்சையே காலம் காலமாக செய்து வரப்படும் மிகச் சிறந்த வழிமுறையாகும். இது வெறும் மருத்துவத்தைக் காட்டிலும் சிறப்பானது. சிறு நீர்ப் பாதையில் இருக்கும் தடங்கல்களை 85 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் அகற்றி விடுகிறது. கிடைக்கும் உடல் செளகரியம் மேம்பாடு நாள்பட்டு நிற்கிறது. இது மிகக் குறைவாகவே உடலைக்கீறி செய்யப்படும் சிகிச்சையாகும். இதன் மூலம் சுரப்பியின் ஒரு சிறு பகுதி அறுக்கப்பட்டு வெளியே எடுக்கப் பட்டு சிறுநீர் செல்ல ஏற்பட்ட தடையை நீக்குகிறது. இந்த சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் நோயாளியைச் சேர்த்தே ஆக வேண்டும்.

அறுவைக்கு முன்

  • நோயாளியின் உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பது ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளப்படுகிறது.
  • நோயாளி புகைபிடிப்பதை நிறுத்தல் வேண்டும். புகைபிடிப்பது மார்பில் காயங்கள் ஏற்படும் சாத்தியக்கூற்றை அதிகப்படுத்துகிறது. அதனால் குணமாவது தாமதப்படும்.
  • இரத்தத்தின் திண்மையைக் குறைக்கும் மருந்துகளை நோயாளி நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார். (Warfarin, aspirin and clopidogrel) போன்றவை அந்த மருந்துகளாகும்.

அறுவையின் பொழுது

  • இந்த சிகிச்சை பொதுவாக 60 நிமிடங்களிலிருந்து 90 நிமிடங்கள் நீடிக்கும்.
  • முதுகுத்தண்டில் கொடுக்கப்படும் மருந்தே இந்த சிகிச்சைக்கு முன் கொடுக்கப் படுகிறது. தொற்றுதல் வராமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படும்.
  • ஒரு சிறப்பான ஆயுதத்தை ஆண்குறியின் நுனி மூலம் உடலுக்குள் செலுத்தி பிராஸ்டேட் அகற்றப்படுகிறது.
  • அந்த நுண்ணிய ஆயுதத்தில் ஒரு வெகு நுண்ணிய கேமராவும் பொருத்தப் பட்டிருக்கிறது. அறுப்பதற்கும் வெட்டுவதற்கும் நுண்ணிய கத்திகள் இருக்கின்றன. அத்துடன் இரத்த நாளங்களை சீல் செய்து மூட வசதிகள் உண்டு.
  • இந்த சிகிச்சையில் வெளியே அறுத்து எடுக்கப்பட்ட சதைத் துண்டு, சோதனைச் சாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது.

அறுவைக்குப்பின்.

  • வழக்கமாக அறுவைக்குப் பின் ஆஸ்பத்திரியில் நோயாளி 2 அல்லது 3 நாட்கள் தங்க வேண்டும்.
  • கதீட்டரை உள்ளே நுழைத்து இந்த வழிமுறையின் இதர செயல்பாடுகள் நடக்கின்றன.
  • சிறு நீரில் எந்தவித இரத்தக் கலப்பும் இல்லாத பொழுதோ இரத்தம் உறையாமல் இருந்தாலோ கதீட்டர் வெளியே எடுக்கப் படுகிறது.

அறுவைக்குப்பின் சொல்லும் அறிவுரை.

சீக்கிரம் குணமடைய கீழ்க்கண்ட அறிவுரைகள் சொல்லப் படுவது உண்டு.

  • நிரம்ப குடிநீர் பருக வேண்டும். சிறுநீர்ப்பை காலியாக வேண்டும்.
  • மலச் சிக்கலை முழுக்க தவிர்க்க வேண்டும். மலம் கழிக்கும்பொழுது வலி இருத்தல் கூடாது. அப்படி வலிக்க வலிக்க மலம் கழித்தால் இரத்தக் கசிவு கூடும். மலச் சிக்கல் ஏற்பட்டால் ஒரு சிலநாட்களுக்கு மலமிளக்கி சாப்பிடவும்.
  • இரத்தத்தில் திண்மை குறைக்கும் மருந்துகளை டாக்டரின் சிபாரிசு இன்றி துவங்க வேண்டாம்.
  • அதிக எடையைத் தூக்குவதோ அல்லது தீவிர உடலுழைப்போ 4-6 வாரங்களுக்கு வேண்டாம்.
  • அறுவைக்குப்பிறகு உடலுறவு கொள்வதை 4-6 வாரங்களுக்குத் தள்ளிப் போடவும்.
  • மதுவோ காப்பியையோ அல்லது காரசாரமான உணவையோ தவிர்க்கவும்.

சாத்தியக் கூறுகள் கொண்ட சிக்கல்கள்.

  • உடனடியாக சம்பவிக்க கூடியது இரத்தப் போக்கும் சிறுநீர் பாதையில் வரும் தொற்றுக்களும் ஆகும்.
  • அதற்கு அடுத்து யுரீட்டரின் குறுக்களவு மேலும் குறையும். சிறுநீர் சொட்டுதலும், ஆண்மைக் குறைவும் ஏற்படும்.
  • ஆண் விந்து சிறுநீர்ப்பைக்குள் ஒழுகி விடுதல் பொதுவாக நடக்கும். இது 70 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படக்கூடியது. இது பாலியல் இயக்கத்தை தடுப்பதில்லை அல்லது மகிழ்ச்சியைக் கெடுப்பதில்லை. ஆனால் குழந்தைப்பேற்றைக் கொடுக்காது.
  • இவற்றுடன் உடல் பருமன், புகைப்பது, மது அருந்துவது சத்தில்லாத உணவு சாப்பிடுவது, நீரிழிவு நோய் போன்றவைகள் மேலும் அபாயத்தை அதிகரிக்கும்.

ஆஸ்பத்திரியிலிருந்து வெளிவந்த பின் கீழ்க்கண்ட நிலைகள் ஏற்பட்டால் மருத்துவரைக் கூப்பிடவும்.

  • சிறுநீர் கழிப்பதில் சிரமம். அல்லது சிறுநீர் போக முடியாது போதல்.
  • மருத்துவத்தால் கட்டுப்படாத மோசமான வலி
  • இரத்தம் வெகுவாக உறைந்து போய் இரத்தம் சிறுநீரோடு கசிதல், இரத்தம் கதீட்டரில் தடைப்பட்டுப் போதல்,
  • தொற்றுதலின் அடையாளங்கள் காய்ச்சல் அல்லது உடல் சில்லிட்டுப் போதல்

Transurethral incision of the prostate (TUIP)

மேலே கண்ட சிகிச்சையானது ஆண்களுக்குச் செய்யப்படும் TRUP க்கு மாறுதலான ஒன்று. மற்றும் மிகவும் மோசமான ஆரோக்கியத்தைக் கொண்ட மிகச் சிறு பிராஸ்டேட்டுக்களுக்கு உதவும் சிகிச்சை இது. ஆகவே மேற்கண்ட TRUP க்கு இது உதவாது.

மேலே கண்ட சிகிச்சை TRUP யைப் போன்றே செய்யப்படும். ஆனால் தசையை பிராஸ்டேட்டிலிருந்து அகற்றுவதற்கு பதில் இரண்டு அல்லது அதிகமானதும் ஆழமானதுமான வெட்டுக்கள் பிராஸ்டேட்டில் உண்டாக்கப்பட்டு விடும். இந்த அறுவை சிறுநீர் செல்லும் பாதையை அகலப்படுத்தி, யுரீத்ராவில் பாயும்பொழுது அழுத்தத்தை நீக்கி விடும். அதனால் சிறுநீர் எளிதாக வெளியே செல்ல ஆரம்பிக்கும்.

மேலே கண்ட சிகிச்சையின் மூலம் இரத்தம் குறைவாகவே இழக்கப் படும். அறுவை மூலம் எழக் கூடிய சிக்கல்கள் குறைவு. மேலும் குறைவான காலத்திற்கே ஆஸ்பத்திரியில் தங்கிச் செல்ல வேண்டும். குணமாகும் காலமும் குறையும். TURP சிகிச்சையை விட சிக்கல்கள் குறைவு. பிராஸ்டேட்டின் அளவு மிகப் பெரிதாக இருந்தால், இந்த சிகிச்சை அதற்கு ஏற்றதல்ல.

திறந்த நிலையில் செய்யப் படும் prostatectomy

இந்த முறையில் செய்யப்படும் அறுவையில், அடிவயிற்றைக்கீறி, பிராஸ்டேட் முழுவதுமாக வெளியே எடுக்கப்படுகிறது. இதைவிட மேலும் மிக திறன்மிக்க அறுவை சிகிச்சைகள் இன்றைய அளவில் வந்து விட்டதால், மேற்கண்ட சிகிச்சை அவ்வளவாக பயன்படுத்தப் படுவதில்லை.

மிக மோசமான அளவில் மிகப் பெரிதாகி விட்ட பிராஸ்டேட்டுக்களுக்குத் தான் திறந்த நிலையில் அறுவை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் வேறு சில பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எங்கெல்லாம் உடனடியான சிகிச்சையும் குணமும் தேவைப்படுகிறதோ அங்குதான் மேற்கண்ட திறந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மிகக் குறைவான அளவு உடலைக்கிழித்துச் செய்யப்படும் அறுவை

மேற்கண்ட முறைகள், மிகக் குறைவான அளவே உடலுக்கு பாதிப்பையும் வலியையும் கொண்டு வரும் வகையில் செய்யப்படுபவை. இன்றைய தொழில் நுணுக்க முறைகளினால், மற்றும் ஆராய்ச்சிகளின் பயனாக, மேலும் எளிதாகச் செய்ய முடியும்.

பெரும்பாலும், வெப்பம், மற்றும் லேசர் அல்லது electrovaporization முறைகளினாலேயே மிகுதியான சதைப் பகுதி பிராஸ்டேட்டிலிருந்து அகற்றப் படுகிறது. மேற்கண்ட முறைகள் யாவும் ஆண்குறியின் நுனி மூலமாக குழாயை உள்ளே விட்டு செய்யப்படுவதாகும்.

இந்த முறையால் வரும் நன்மைகள் யாவை என்றால், ஆஸ்பத்திரியில் தங்க வேண்டிய நாட்கள் குறைவு, மயக்க மருந்தின் குறைவான தேவை, அபாய சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு மற்றும் சிக்கல்கள் குறைவு. விரைவிலேயே முழுமையான குணத்தைக் கொடுக்கக் கூடியது.

இந்த முறையில் உள்ள எதிர் விளைவுகள் என்னவென்றால், திறன்குறைவான சிகிச்சை மேலும் 5 அல்லது 10 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படும். பரிசோதனைக்காக பிராஸ்டேட் தசை கிடைக்காமல் போவது (மறைந்திருக்கும் புற்றுநோய் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்ய), நெடுநாளைக்கு அதை மீண்டும் பரிசோதித்து பாதுகாப்புக்காகவும் திறனுக்காகவும் அறிய வகையில்லாமல் போகும். மிகவும் மோசமான நிலைமை என்னவென்றால் இம்முறைகள் (குறைவாக உடலைக் கிழித்துச் செய்யப்படுபவை) முன்னேறி வரும் நாடுகளில் இன்னமும் செய்வதற்கு வசதியில்லை.

Transurethral microwave thermotheray, transurethral needle ablation, waterinduced thermotherapy, prostatestents and transurethrallaser therapy போன்ற சிகிச்சைகள் ஒவ்வொன்றும் மற்றதை விட சற்றே வேறுபட்ட சிகிச்சைகள்,

Transurethral microwave thermotherapy இந்த முறையில் மைக்ரோவேவ் அலைகளால் எழும் வெப்பத்தைக் கொண்டு, உபரியாக வளர்ந்து விட்ட பிராஸ்டேட் தசைகள் (சிறு நீர் வெளிப்பாட்டை தடுத்துக் கொண்டிருப்பவை) அகற்றப் படுகின்றன.

transurethral needle ablation இந்த முறையில் ரேடியோ அலைகளைக் கொண்டு உபரியான பிராஸ்டேட்தசைகள் அகற்றப் படுகின்றன.

water induced thermotherapy, இந்த முறையில் வென்னீரைக் கொண்டு பிராஸ்டேட்டின் உபரியான தசைகள் அகற்றப்படுகின்றன.

prostate sents யுரீத்ராவின் குறுக்களவு குறைந்திருக்கும். அதில் ஒரு ஸ்டென்ட் வைக்கப்படுகிறது. அதன் மூலம் அந்த வாய்க்கால் அகலப் படுத்தப் பட்டு சிறுநீர் எளிதாக வெளியேறுகிறது. அவை வளைந்து கொடுப்பவை. தனக்குத் தானே நீண்டு கொடுக்கும் தன்மை பெற்றவை. சிறுசிறு கம்பிச்சுருளைப் போன்று உருவாக்கப்பட்டவை.

transurethrallaser therapy இந்த முறையில் லேஸர் அலைகள் மூலம் தடுக்கும் தசைகள் நீக்கப்படுகின்றன. லேஸரின் வெப்பச் சக்தியே இதைச் செய்கிறது.

இந்த நோய் இருக்கும் நோயாளி எந்த நிலையில் மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்?

  • முழுவதுமாக சிறுநீர் கழிக்க முடியாவிட்டால்
  • சிறுநீர் கழிக்கும்பொழுது வலி ஏற்பட்டால், நாற்றமடித்தால், அல்லது உடல் சில்லிட்டுக் காய்ச்சல் வந்தால்
  • சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தால்
  • வெளியேறும் சிறுநீரை அடக்க முடியாமல் உள்ளாடைகள் நனைந்தால்

No comments:

Post a Comment