Thursday, 19 November 2020

இஞ்சி... #இடுப்பழகு 💃

#இஞ்சி... #இடுப்பழகு 💃

#இஞ்சி நம் உடல் நலம் காக்கும் உன்னத உணவுப் பொருள். இஞ்சிச்சாற்றை, காலையில் தினந்தோறும் பருகிவந்தால் வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சதையைக் குறைத்துவிடும். இடுப்பிலுள்ள தேவையற்ற சதைகள் குறையும்போது இடுப்பு அழகாக இருக்கும். தோள்பகுதி அகன்றும் இடுப்புப் பகுதி சுருங்கியும் இருப்பதுதான் உடல் நலத்தின் அடையாளம்; உடல் அழகின் அடையாளம். அதை இஞ்சி செய்வதால், இஞ்சி இடுப்பழகு என்றனர்.

இஞ்சி உண்ணும்போது, அதன் மேல் தோலை நன்கு அகற்றிவிட்டு அதன்பின் அதன் சாற்றையெடுத்துப் பருக வேண்டும். அல்லது தோல்நீக்கிய இஞ்சியை மென்றும் சாப்பிடலாம். பெரியவர்கள் ஒரு நெல்லிக்காய் அளவிற்கும், சிறியவர்கள் அதில் பாதியளவிற்கும் சாப்பிடவேண்டும்.

காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் தின்றால்
கோலை யெறிந்து
குலாவி நடப்பர்

என்கிறது சித்தர் பாடல். கோல் ஊன்றி, குனிந்து நடந்த முதியவர்கூட காலை இஞ்சியும், பகலில் சுக்கும், மாலையில் கடுக்காய்த் தோலும் சாப்பிட்டால், கோலை எறிந்துவிட்டு வாலிபன்போல் நடப்பர் என்கிறது இப்பாடல். அப்படியாயின், சிறுவயதுமுதல் இப்படிச் சாப்பிட்டால் என்றும் இளமையாகவும் வளமையாகவும் இருக்கலாம் அல்லவா?

No comments:

Post a Comment