Tuesday 24 November 2020

குதி கால் வலி...

1.முதலில் நேராக நின்று சப்போர்ட் க்கு ஜன்னலை பிடித்து கொள்ளவும்...முதலில் இரு முன் பாதங்களையும் தரையில் பதித்து பின்குதிகால்களை ஒருசேர உயர்த்தவும்..இதையொரு 20 அல்லது 30 முறை செய்து பின்னர் குதி கால்களை பதித்து முன் பாதங்களை மட்டும் உயர்த்தவும்....எத்தனை முறை முன்பாதங்களை உயர்த்தினீர்களோ அத்தனை முறை சரியாக குதிகால்களை உயர்த்தவும்....இது பார்க்க தையல் மிஷினில் கால்கள் ஆக்சன் போல் இருக்கும்....இதைநீங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் 20 or 30 முறை செய்து கொண்டே இருங்கள்....20 அல்லது 30 நாட்களுக்குள் உங்களை அறியாமலேயே வலி நின்று போகும்...ஒரு ஆர்தோ டாக்டர் கூறியது .ஒரு பைசா செலவில்லை...
2.குழாங்கல்லை  அல்லது செங்கல் சூடுடேற்றி கால் சூடு தாங்கும் அளவு அதன் மேல் நிற்க்கவும். இரண்டு மூன்று முறை இப்படி செய்தால் சரியாகிவிடும்.
3.இஞ்சி சார் குடிக்கவும்.
4.இரவு படுக்குமுன் இளசூட்டில் நல்லெண்ணெய் சுட வைத்து வலிக்கின்ற இடத்தில் தடவிட்டு காலையில் சுடுநீரில் ஒருஸ்பூன் உப்புக்கல்லு போட்டு அந்த நீரில் கால்பாதத்தை பத்து நிமிடம் வைத்திருங்கள் இதை தொடர்ந்து செய்து வர நாளடைவில் மாறும் இது நான் கண்ட பலன் .
5.நடை பயிற்ச்சி மேற்கொள்ளுங்கள்.
6.கால் வலி ஆர்தோ சப்பெல் அணியவும்.

No comments:

Post a Comment