Tuesday, 24 November 2020

ரொம்ப நாளா தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், சளி இருக்குதா?

ரொம்ப நாளா தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், சளி இருக்குதா? இந்த 3 பிரச்சனையும் டக்குனு சரியாயிடும். இத மட்டும் 1 ஸ்பூன் குடிச்சி பாருங்களே...

நிறைய பேருக்கு கிளைமேட் மாறிய உடனேயே தொண்டையில் பிரச்சனை வந்துவிடும். தொண்டை கரகரப்பாக மாறும். தொண்டையில் சளி இருப்பது போல உணர்வு ஏற்படும். பேசினாலே வரட்டு இருமல் வந்து தொல்லை கொடுக்கும். 
இப்படியாக சளி சம்பந்தப்பட்ட, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக நீங்கள் அவதிப்பட்டு வந்திருந்தால், இந்த கை வைத்தியத்தை ஒரே ஒருநாள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள். 

இயற்கையான 2 பொருட்களை வைத்து தான் இந்த வைத்தியம் சொல்லப்பட்டுள்ளது. அந்த இரண்டு பொருட்கள் என்னென்ன? அதை எப்படி மருந்தாக நாம் பயன்படுத்த போகின்றோம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சுத்தமான தேன், ஏலக்காய் இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் இந்த வைத்தியம் சொல்லப்பட்டுள்ளது. சர்க்கரை தண்ணீர் கலக்காத சுத்தமான தேன், இந்த வைத்தியத்திற்கு மிக மிக அவசியம். முதலில் ஏலக்காய்களை நன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால், அந்த ஏலக்காய் பொடியை சல்லடையில் போட்டு சலித்து விட்டு, நைஸாக ஏலக்காய்தூளை எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்தபடியாக 1 ஸ்பூன் சுத்தமான தேனை, ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்பாக இந்த தேனை நேரடியாக ஒரு ஸ்பூன் அளவு நாம் சாப்பிட வேண்டியது தான்.

இவ்வளவு சுலபமான குறிப்பில், நீண்ட நாட்களாக கஷ்டப்படுத்தி வரும் இருமல் குணமாகிவிடுமா? என்று சந்தேகப்படாதீர்கள். இது ஒரு சுலபமான குறிப்பு தான். இதை சாப்பிட்ட 15 நிமிடத்திற்கு தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கலாம். 
கண்ணுக்குத் தெரியாத நச்சுக் கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தி தேனுக்கு உள்ளது. இருமலை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி ஏலக்காய்க்கு உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக சேரும் போது, நமக்கு நல்ல பலனைத் தரும் என்பதில் சந்தேகமே கிடையாது.

பெரியவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு நான்கு முறை கூட ஒரு ஸ்பூன் அளவு தேன், ஏலக்காய்தூள் கலந்த கலவையை சாப்பிடலாம். சிறிய குழந்தைகளாக இருந்தால் அதாவது 3 வயதிற்கு மேல், உள்ள குழந்தைகளாக இருந்தால், 1/2 ஸ்பூன் அளவு தாராளமாக கொடுக்கலாம். 8மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் இந்த மருந்தை நாம் கொடுக்கலாம்.

ஏலக்காயை ரொம்ப நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் நன்றாக அரைபடா விட்டால், குழந்தைக்கு தொண்டையில் போய் சிக்கிக்கொள்ளும். நைஸ் ஏலக்காய் தூளுடன், தேன் கலந்து, உங்கள் விரல்களால் தொட்டு சிறிய குழந்தைகளது நாவில் கூட மூன்று சொட்டு தடவலாம். தவறொன்றும் கிடையாது.

சில பேருக்கு இரவு நேரத்தில் தூங்கவே முடியாது. படித்த பின்புதான் இருமல் அதிகமாக வரும். இப்படிப்பட்ட சமயங்களில் ஒரு ஏலக்காயை எடுத்து உங்களது கடவா பல்லில் கடித்து கொள்ளலாம். அதிலிருந்து வரக்கூடிய உமிழ் நீரை விழுங்கினால் இருமல் சட்டென்று ஒரே நிமிடத்தில் நின்றுவிடும். 

இயற்கையான முறையில் இப்படிப்பட்ட விஷயங்களை திரும்பத் திரும்ப செய்யும்போது, நம் தொண்டையில் இருக்கும் கிருமிகள் தானாக அழிந்து, இருமல் சளி தொண்டை கரகரப்பு கொஞ்சமாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டாயம் குறையும்.

No comments:

Post a Comment