Monday, 23 November 2020

புதுமண தம்பதிகளுக்கு சொல்லுங்கள்

புதுமண தம்பதிகளுக்கு சொல்லுங்கள் 

விரத நாட்களில் உணர்ச்சிகள் குறைவாக இருக்கின்றன.கிரக பலம் ஆத்ம பலம் பலவீனமாக இருக்கின்றன.சஷ்டி ,கிருத்திகை,ஏகாதசி,அஷ்டமி,அமாவாசை ,பெளர்ணமி மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில் உடல் உறவை தவிர்த்து விடுங்கள்.

காரணம் இந்நாட்களில் உடல் உறவு கருவாகும் குழந்தைகள் எளிதில் உணர்ச்சிவசபடுவார்கள் தாழ்வு மனப்பான்மை,பயம் ,அதிகம் கொண்டிருப்பார்கள் எந்த பிரச்சினையையும் எதிர்த்து போரிடும் குணம் மிக குறைவாக இருக்கும் அம்மா அப்பா பின்னால் ஒளிந்து கொள்ளும் சுபாவத்துடன் இருப்பார்கள்.இந்நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த குணம் இருப்பதை சற்று கவனித்தால் அறியலாம்.

விரத நாட்களில் மந்திர ஜெபம் ,வழிபாடு செய்வது உங்கள் மனதையும் ,உடலையும் வலுப்படுத்தும்.அமாவாசை ,பெளர்ணமியில் உணர்ச்சிகள் தாறுமாறாக இருக்கும் என்பதால்தான் அந்நாளில் கோயில் செல்கிறோம்.

ஆரோக்கியமான ,வீரியமான குழந்தைகள் மாதவிலக்கான 5 ஆம் நாள் முதல் 16 ஆம் நாள் வரையே உண்டு முக்கியமாக 15,16 ஆம் நாள் ஆரோக்கியமான ,வீரியமான ,புத்திசாலியான குழந்தைகள் பிறக்கும்.

அதன் பின்னர் அடுத்து மாத விலக்காகி 5 ஆம் நாள் வரை ஆண்கள் கணவன் தன் உயிரணுவை வெளியேற்றாமல் பொறுமை காக்க வேண்டும்.

ராமஜெயம் ,ராம் ராம் மந்திரங்களை லட்சம் முறை கோடி முறை ஜெபம் செய்தபின் கணவன் மனைவி சேரும்போது நல்ல மனம் கொண்ட ஒரு மகான் பிறக்கிறான் .பூர்வ புண்ணியம் பெற்ற கரு உருவாகிறது.

No comments:

Post a Comment