Wednesday, 18 November 2020

சாத்வீக, ராஜஸ,தாமஸகுணம்

உறங்கையிலே பானைகளை
உருட்டுவது #பூனைக்குணம் _ காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே #குரங்குக்குணம் _ ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் #முதலைக்குணம் _ ஆனால்
இத்தனையும் #மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா..!

ஒருவருடைய ராசி, ராசியாதிபதி, லக்கினம், லக்கினாதிபதி, நட்சத்திராதிபதி இவர்களோடு,சேர்ந்த, பார்த்த கிரகங்களே, ஆண்-பெண்களுடைய #குணத்தை தீர்மானிக்கின்றன.

அமைதியான, நிதானமான மனமும், பெருந்தன்மையான எண்ணங்களும், நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களது குணம் #சாத்வீக குணமாகும்.

ஆத்திரம், ஆவேசம், ஆக்ரோஷம், சுயநலம், அதீத காமம் போன்றவற்றை கொண்டவர்களது குணம் #ராஜஸ குணமாகும்.

சோம்பேறித்தனம், காலதாமதம், சுருசுருப்பில்லாதது, மந்த தன்மை ஆகியவை #தாமஸ குணமாகும்.

வாளர்பிறை சந்திரன்,குரு - சாத்வீகம்.
செவ்வாய்,சுக்கிரன்,சூரியன்-ராஜஸம்.
சனி,புதன்,தேய்பிறைசந்திரன்-தாமஸம்.

ஒரு ஜாதகத்தில் குருவும், வளர்பிறைசந்திரனும் பலம் பெற்றிருந்தால், அவர்களிடத்தில் சாத்வீக குணம் மேலோங்கியிருக்கும். ஆனால் அந்த சந்திரனோடு செவ்வாயும், சுக்கிரனும் பலமாக சம்பந்தப்பட்டிருந்தால் சாத்வீக குணம் மறைந்து, ராஜஸ குணம் வெளிப்பட்டு விடும். இதைவிட சனி பலமாக சம்பந்தப் பட்டிருந்தால், தாமஸ குணமே ஜாதகரிடம் அதிகம் வெளிப்படும்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது ராஜஸ குணத்தை அதிகம் வெளிப்படுத்தும். இவர்களில் ஒருவர் ராசி அதிபதியாகவோ, நட்சத்திர அதிபதியாகவோ, வந்து, இவ்விருவரும் சேர்ந்திருப்பார்களானால், நிச்சயம் அளவுக்கு மீறிய காம உணவுர்கள் ஜாதகரை ஆட்டிப் படைக்கும். காமம் சார்ந்த தவறு, பாலியல் தவறுகள் செய்வதற்கு இந்த கிரக அமைப்பு அதிகம் தூண்டும். ஆனால் இந்த இருவருக்கும் குருவின் பலமான பார்வை, அல்லது குரு, லக்கினத்தோடு சம்பந்தப்பட்டிருப்பது இந்த ராஜஸ குணத்தை கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

சந்திரனோடு சேர்ந்த கேது, ஞானகாரகன் என்ற அடிப்படையில், ஞானத்தை #கொடுக்கவும் செய்வார். பாவக்கிரகம் என்ற அடிப்படையில் குணத்தை #கெடுக்கவும் செய்வார். இது மற்ற கிரகங்களின் அமைப்பை பொறுத்து சரியாக தீர்மானிக்க வேண்டும்.

(பிற கிரகங்களின் நிலை பொறுத்து,
பலன் வேறுபடும்)


No comments:

Post a Comment