Wednesday, 18 November 2020

சந்தோஷமான.. திருமணவாழ்க்கைக்கு...

அன்பான மனைவி..
    அழகான துணைவி..
        அமைந்தாலே பேரின்பமே...!

சந்தோஷமான..
       திருமணவாழ்க்கைக்கு...

ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் அல்லது,  
குரு, சுக்கிரன்சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை அமையும்.

3 ம் அதிபதி 7 ல் இருந்தாலும்,7 ம் அதிபதி 3 ல் இருந்தாலும் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகும்.

குரு சுக்கிரன் அல்லது சந்திரன் ராகு சேர்ந்து இருந்தாலும், அது காதல் திருமணம்.

ஆண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில், செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.

5ல் சனி இருந்தால் கடுமையான திருமணத்தோஷம். 

2 ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தாலும், 2  ல் அஸ்தமன கிரகம் இருந்தாலும், குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். 

12 ல் செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால், துரதிஷ்ட நிலையை ஏற்படும்.

சனி மிதுனம்,மீனம் இராசியை பார்தால் திருமண வாழ்க்கை இயந்திர வாழக்கை போன்றது.

களத்திர தோஷம்: 

ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2வது இடத்திலும் 7வது இடத்திலும் சூரியன் இருந்தால் அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் உண்டு. 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7வது வீடு 8 வது வீடு இவற்றில் ஒன்றில்  சூரியன் இருந்தால் அந்த ஜாதகிக்கு சூரியன்  களத்திர தோஷத்தைத் தருகிறது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியனுடன் சுக்கிரன்  எந்த வீட்டில் சேர்ந்திருந்தாலும் அந்த அமைப்பு களத்திர தோஷத்தைத் தருகிறது என்பது ஜோதிட விதி.

7 ம்  இடத்ததிபதியோ அல்லது சுக்ரனோ, சுக்ரன் நின்ற ஸ்தானாதிபதியோ ஆட்சி, உச்சம், பெற்று சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ திருமணம், மனதுக்குப் பிடித்தவாறு கால தாமதமின்றி நடந்து இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக
அமையும். அதாவது 7ம் வீட்டதிபரும், களத்திரகாரகன் சுக்கிரனும் கெட்டிருக்கக்கூடாது.

7ல் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருந்தால், திருமணப்பிரிவு வழக்கு, விவாகரத்து ஏற்படும்.

சுக்கிரனுக்கு 4 ல் சனி அல்லது ராகு இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.

சுக்கிரனுக்கு 10ல் சனி இருந்தால் கணவனுடன் ஒத்துபோகாத பெண்களாகவும் விதண்டா வாதம் பேசுவதும், கணவனின் உறவுக்காரர்களை மதிக்காத பெண்களாகவும் இருக்கிறார்கள்.

செவ்வாய் மற்றும் கேது 4,8,12 ல் இருந்தால், கணவனுடன் மனக்கசப்பு உண்டாகி, வழக்கு போடுவதும், பிரிவினையும் உண்டாகும்,

பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்து இருந்தால் வழக்கு விவாகரத்து, மற்றும் செவ்வாய் இராகு சேர்ந்து இருந்தால் திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது போன்றவை ஏற்படும்.

பெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால் கணவனிடம் சுகம் பெறமுடியாது.

ஆண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனியும், பெண் ஜாதகத்தில்  செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனியும் இருந்தால் அது சிறப்பில்லை.

பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்தும் இருந்தால், திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து ஏற்படும்.

பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்தும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்தும் இருந்தால், திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு, விபத்து, ஆகியன நடக்கும்.

பெண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதன் ஆண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருந்தால் மனப்போராட்டம், மற்றும் மணவாழ்க்கை பிரிவினையை தருகிறது.

ஆண் ஜாதகத்தில் பெண்ணின் 10 ம் அதிபதி நீசம் பெற்றால் திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு தருவதும்,  கணவனை உதாசீனப்படுத்துவதும், புரிந்துணர்வு இல்லாமல் இருக்கும் நிலையும் ஏற்படுகிறது.

ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன்  தொடர்புடையவன்.(பொதுப் பலன்)

நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள். 

ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் மிகவும் பாக்கியசாலி..!

1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம், நற்குணம் உடையவளாகவும் இருப்பாள். 

7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து,  குருவினுடைய  பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான். 

கன்னி லக்கின பெண்ணிற்கு, லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான். 

மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான். 

கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்  மனைவியாவாள். அதாவது பெரிய அரசியல்வாதியின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான். 

(பிற கிரகங்களின் நிலை பொறுத்து
  பலன்கள் நிச்சயம் மாறுபடும்)


No comments:

Post a Comment