Wednesday, 4 November 2020

கைலாய மலையும் ராவணனும்

கைலாய மலையும் ராவணனும் :
.
இலங்கையின் மன்னனாக இருந்தவர் மன்னர் ராவணன். இவன் ஒரு அசுரன். ஆனால், அவர் சிவபெருமானின் தீவிர பக்தராக இருந்தான். நாள் தோறும் சிவபிரானை வழிபாடும் பழக்கம் கொண்டிருந்தான்.
சிவபெருமானை நேரில் காணவும், அவரிடம் வரங்களை பெறவும் இலைங்கையில் இருந்து கைலாய மலைக்கு தனது வான் ரதத்தில் புறப்பட்டு வந்தான்.
கைலாய மலையில் காவலுக்கு இருந்த நந்தி, ஆகாயமார்கமாக ரதத்தில் வரும் இலங்கை வேந்தன் ராவணனிடம் "சிவனும், பார்வதி தேவி அவர்களும் மகிழ்வுடன் வாழ்ந்து வருவதால் இங்கு ஆகாய மர்க்கமாக பயணிக்க அனுமதி இல்லை" என்று கூறினார்.
இதை கேட்டு கோபமுற்ற ராவணன் "நான் சிவனின் தீவிர பக்தன் என்றும் எனது தேரை அனுமதிக்க மறுப்பது "குரங்கு தனமான புத்தி" என்று நந்தியை பார்த்து வசை பாடினான். இதை கேட்ட நந்தி உடனே கோபமுற்று அடக்கமில்லாமல் "குரங்கு தனமான புத்தி" என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் நீயும், உன் சகாக்களும் குரங்கால் அழிவு பெறுவீர்கள் என்று சாபமளித்தார்.
.
சிவபெருமானை நோக்கி தவம் செய்ய வேண்டி கைலாய மலைக்கு தென் புறமுள்ள அழகிய மானசரோவர் ஏரிக்கு அருகிலுள்ள ஏரியை தேர்ந்தெடுத்து சிவனை நோக்கி கடும் தவம் செய்ய ஆரம்பித்தான். (ஏன் மானசரோவர் ஏரியை தேர்வு செய்யவில்லை என்றால், மானஸரோவரில் முனிவர்கள் தவம் செய்து கொண்டு இருந்தார்கள். ஆகவே அவர்களை தொல்லைபடுத்த விரும்பவில்லை).
.
ராவணனின் கடும் தவம் புரிவதை கண்ட அந்த ஏரி, ராவணனின் தவத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க தனது (ஏரியில்) நீர் பரப்பில் அலைகள் வராமல் பார்த்துக்கொண்டது. பறவைகளும், புழு மற்றும் பூச்சிகளும் இராவணன் தவம் செய்யும் ஏரியின் பக்கம் செல்வதை தவிர்த்து கொண்டன. (இன்றளவும் இந்த ஏரியில் அலைகள் வருவதில்லை & பறவைகள் இந்த ஏரியில் நீர் அருந்துவதில்லை).
.
ராவணனின் கடுமையான தவத்தையும் தன் மீதான பக்தியையும் கண்ட சிவபெருமான், ராவணனுக்கு காட்சியளித்தார். பின் ராவணன் கோரிய வரங்களுடன் யாராலும் வெல்ல முடியாத "லிங்கா" என்று அழைக்கப்படும் ஒரு வாளையும் ராவணனுக்கு கொடுத்தார்.
.
சிவ பெருமானை கண்டு வரங்களை பெற்ற ராவணன் கைலாய மலையை சுற்றி பரிகர்மா செய்து முடித்து கைலாயத்தின் வடக்கு பகுதியில் கைலாய மலைக்கு மிக அருகில் சரண்பர்சி எனும் இடத்தில் சிவனை நோக்கி தியானத்தில் இருக்க ஆரம்பித்தான்.
.
ராவணன் தியானம் செய்வதை பார்த்த சிவபெருமான் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
சிவபெருமான் மற்ற வேலைகளில் கவனமாக இருப்பதை உணர்த்த ராவணன் ( கைலாய மலையை இலங்கைக்கு கொண்டுசெல்ல எண்ணி ) உடனடியாக தியானத்தில் இருந்து எழுந்து தனது இரு கைகளாலும் கைலாய மலையின் அடிப்பகுதியில் வைத்து கைலாய மலையை தூக்க ஆரம்பித்தான்.
ராவணன் கைலாய மலையை தூக்க ஆரம்பித்தவுடன் கைலாய மலை தனது அடித்தளத்தில் இருந்து வானத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.
பூமியில் இருந்து சுமார் 2.5 அடி அளவிற்கு கைலாய மலை பூமியை விட்டு சாய்வாக சாய துவங்கியது.
பூமியில் சில மாற்றங்கள் ஏற்பட துவங்கியது. மற்ற வேலைகளில் இருந்த சிவபெருமான் கைலாய மலை சாய துவங்கும் நிகழ்வை பார்த்தவுடன் ஏன் இப்படி நிகழ்கிறது என்று யோசித்து கண்டறிந்தார். பின் கைலாய மலை தடம் மாறுவதை நிறுத்தவும் ராவணன் கைலாய மலையை பெயர்ப்பதை தடுக்கவும் தனது இடது காலிலுள்ள கட்டைவிரலை பூமியை நோக்கி ஒரு அமுக்கு அமுக்கினார்.
சிவனின் அபார பலத்தால் கைலாய மலை மீண்டும் பூமியில் அமுங்கி நிலை கொண்டது.
தனது பேராசை தவறை உணர்த்த ராவணன் ஒரு லிங்கத்தை கைலாயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கைலாய மலையை தூக்கியதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிகொண்டான் (ராவணன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை கைலாய முதலாம் நாள் நடை பயணத்தின் போது தரிசிக்கலாம்).
.
.
கைலாய மலையை தரிசிக்கவும், கைலாயத்தினை சுற்றி பரிகர்ம செய்யவும் முயற்சி செய்யுங்கள்.
.
இணைப்புக்கள் :
1). ராவணன் ஏரி - ராவணன் தவம் செய்த ஏரி.
2). ராவண லிங்கம் - ராவணனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்.
3). சரண்பர்சி செல்லும் பாதை (வீடியோ) - ராவணன் கைலாய மலையை தூக்க முயற்சித்த இடம்.

No comments:

Post a Comment