Wednesday, 4 November 2020

சந்திரனும் தெய்வ வழிபாடும்.

சந்திரனும் தெய்வ வழிபாடும்..!

சந்திரன் கிரகங்களில் சூரியனின் ஒளியை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பவர், நவகிரகங்களில் 28 நாளில் முழு ராசியையும் சுற்றி முடிப்பவர், ஒரு மாதத்தில் 14 நாள் அசுபராகவும், 14 நாள் சுபராகவும் தன்னை வெளிப்படுத்தி கொள்பவர், சந்திரன் என்னதான் தேய்பிறையில் அசுபராக இருந்தாலும் அவர் முழுவதும் கெடுவதில்லை, இதனால் தான் எவ்வளவு கொடூரமான மனம் படைத்தவனுக்கும் உள்ளே சில சுப காரகங்கள் இருக்கவே செய்யும், சந்திரனின் அதிதேவதை: நீர், பிரத்யத் தேவதை: கௌரி/பார்வதி, பரிகார தேவதை: பார்வதி, ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் மறைவிடங்களில் நின்றாலோ, ராகு/கேதுவால் கிரகனம் செய்யபட்டாலோ, சனியுடன் இணைந்தாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ, சாரம் பெற்றாலோ, லக்னம்/ராசி/இயற்கை அசுபர் சேர்க்கை/பார்வை சாரம் பெற்றாலோ, நீச்சமடைந்தாலோ, அந்த ஜாதகரின் மனம்/உடல்/உயிர் காரக உறவுகள் பாதிக்கபடும், இவ்வாறான பாதிப்பு உள்ளவர்கள் சந்திரனின் தெய்வங்களை வழிபடுவதன் மூலம் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறலாம், முழு பௌர்ணமி நிலவு மனதை தெளியவைக்கும் என்றாலும், ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் பெற்ற ஜாதகர் பௌர்ணமி நிலவை வெறும் கண்ணால் காண்பதை தவிர்க்கவும், ஏனெனில் இது எங்கே நீச்சம் பெற்றதோ அங்கேயே நீச்ச பங்கப்படும் இதனால் ஜாதகருக்கு கடுமையான மன அழுத்தம் அல்லது திடீர் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு ஜாதகரை நிலைகுலைய வைக்கும், நீச்ச சந்திரன் உள்ள ஜாதகர் பௌர்ணமி சந்திரனை பார்க்காமல் தன் உடலை மட்டும் சந்திரனின் வெளிச்சத்தில் செலுத்தினால் அதிக நன்மை கிட்டும், எப்போதுமே ஒரு வழிபாடு சரியான முறையில் செய்யும் போதே பலன் பெற இயலும்...

ஜாதகத்தில் சனியுடன் சந்திரன் இணைவு/சமசப்தம பார்வை/சாரம் பெற்ற ஜாதகர் கிணறு வெட்ட பணம் தானம் தரலாம், இந்த இணைவு/பார்வை புனர்பூ தோஷம் என்பார்கள் இதற்கு சரியான பரிகாரம் மேலே கூறியது...

சந்திரன் கிரகண தோஷம் செய்யப்பட்டால் அதிகம் நீராகாரம் எடுத்து கொள்ள வேண்டும், எப்போதுமே சந்திரன் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டால் உடலில் நீர் சத்து குறைபாடு இருக்கும், அல்லது அதிக நீர் உடலில் இருக்கும் இதை சீதள உடம்பு என்பார்கள், இவ்வாறான ஜாதகர் பௌர்ணமி சந்திரனை தரிசிப்பதும், பௌர்ணமி அன்று அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்வதும் மிக உகந்தது...

சந்திரன் ஜாதகத்தில் கெட்டு போனால் அந்த ஜாதகர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும், நீர் நிலைகள், நீராகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், அம்மாவுடன் அதிக மனவருத்தங்கள் எழும், அவ்வாறு எழும்போதெல்லாம் அம்மாவை அனுசரித்து செல்வது நலம், பெண்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும், சந்திரனின் அசுப ஆற்றலை எதிர்கொள்ள சந்திரனின் அதிதேவதை நீர் தானம் செய்யலாம், பால் தானம் செய்யலாம், கோயிலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யலாம், அம்பாளை வீட்டில் பூஜிக்கலாம், இவ்வாறு சந்திரனை எதிர்கொள்ளும் ஆற்றலை பெறலாம், சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் அதி வலுப்பெற்றால் அந்த ஜாதகருக்கு சந்திரனின் காரகங்கள் கிடைக்காமல் போகலாம், அவ்வாறான ஜாதகர் திங்கள் கிழமையில் மாலை வேளையில் ஈசனை தரிசித்து அம்பாளை தரிசிக்க எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும், சந்திரன் ஜாதகத்தில் சுபராகி நின்றால் அவரை தூண்டுவதன் வழியே அவரின் ஆற்றலை பெற்று வாழ்வில் வளம் பெறலாம், அசுபராக நின்றால் வழிபாட்டின் வழியே அசுப ஆற்றலை எதிர்கொள்ளும் வலிமையை பெறலாம், சிலருக்கு சந்தேகம் எழும் சந்திரன் அசுபராக இருக்கும் போது அவரை வழிபட்டால் அசுப காரகங்கள் தூண்டபடாத என்று, பரிகாரம் என்பதே சந்திரனின் ஹம்சம் தான் ஆகவே சந்திரனை வழிபடுவதால் அசுபம் குறையுமே தவிர அதிகரிக்காது, மேலும் அவரவர் ஜாதகம் பொறுத்தே வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும், 

No comments:

Post a Comment