Thursday, 19 November 2020

கோவிலின் கும்பாபிஷேகம் எப்படி நடைபெறுகிறது

கோவிலின் கும்பாபிஷேகம் எப்படி நடைபெறுகிறது
*****
1. ஆவர்த்தனம்
ஒரு ஊரில் கோயில் கட்டப்பட்டு அந்த கோவிலில் பிரதிஷ்டை செய்த சாமிக்கு கும்பாபிஷேகம் செய்வது.

2. அனாவர்த்தனம்
************
சிதிலடைந்து கிடக்கும் கோவிலை புது நிர்மாணம் செய்து அங்கு பிரதிஷ்டா தேவனுக்கு கும்பாபிஷேகம் செய்தல்

3. புனராவர்த்தனம்
******* பிரகாரம், கருவறை, கோபுரங்கள் பழுதடைந்து விட்டதால், அவைகள் புதுப்பித்து அஷ்ட பந்தனம் செய்து தேவனை பிரதிஷ்டா செய்வது

4. அந்தரிஷ நேர்ச்சா
********
கோவிலுள்ளில் ஏதேனும் கெட்டது நடந்து அதற்கு பரிகார சாந்தி செய்தல்

கும்பாபிஷேகம் செய்யும் போது விக்ரகம் பிரதிஷ்டையில்  செய்யப்படும் கிரியா***
******

அனுக்ஞை(அனுமதி வாங்கல்)
ஒரு பிராமண ஆச்சாரியனை தேர்ந்தெடுத்து அவரை வைத்து  கும்பாபிஷேகம் நடத்த  அனுமதி வாங்குதல்

சங்கல்ப பிரார்த்தனை
*******
தெய்வத்திடம் கும்பாபிஷேகம் செய்யப்போகும் கோரிக்கைகளை
வைத்தல்

பாத்திரங்கள் பூஜா
*********
இறைவனுக்கு படைக்கப்படும் பாத்திரங்களின் அதி தேவதைகள் கண்டறிந்து அவர்களை பூஜைகள் செய்வது

கணபதி பூஜா
******
எடுத்த காரியங்கள் இனிதே நிறைவேற்ற சர்வ விக்ன தடைகளும் நீங்க கணபதிக்கு பூஜை செய்வது

வருணபகவான் பூஜை
*********
அந்த கோவிலை சுத்தீகரணம் ( சுத்தப்படுத்தல்) செய்ய வருணபகவானையும், ஸப்த நதி தேவதைகளையும் பூஜை செய்வது

பஞ்ச கவ்யம்
*******
ஆத்ம சுத்தீகரணம்
பால்,தயிர், நெய், பசுங்கோமியம், பசு சாணம் இப்படி ஐந்து பசுவின் உடலிலிருந்து வரும் பொருளை வைத்து செய்தல்

வாஸ்து  ஸாந்தி நிவர்த்தனம்
*********
வாஸ்து தேவனை வழிபாடு செய்து அனுமதி பெறுதல்

பிரவேஸ பலி
*******
அஷ்டதிக்கு பாலகர்களை   பூஜித்து துர்தேவதைகள் தடை செய்யமலிருக்க செய்யப்படும் பூஜை

மிருத் சங்கிரணகம்
******
கோவில் கட்ட பூமாதேவியிடம் அனுமதி வாங்கல்
பள்ளம் தோண்டி அபிஷேகம் செய்வது
அஷ்டதிக்கு பாலகர்களிடம் அனுமதி பெறுதல்

அங்கூரார்ப்பணம்
***** 
பூமியிலிருந்து மண்ணை எடுத்து அந்த மண்ணில் முளைகள் வரவைப்பது
சூரியாதி தேவர்களான
வைகர்த்தன்
விவஸ்தன்
மார்த்தாண்டன்
பாஸ்கரன்
ரவி,
திவாகரன்
லோகபிரகாஸன்
திரிவிக்ரமன்
ஆதித்யன்
அம்ஸு மாரி

இவர்களையும் சந்திராதி தேவர்களையும் வணங்கி அனுக்ரகம் வாங்குதல்

ரக்ஷா பந்தனம்
********
 கிரியைகள் செய்யும் பண்டிதனுக்கு எந்த  ஒரு தடையும் வராமல் இருக்க அவர் கையில் கட்டப்படும் ரக்க்ஷ காப்பு

கும்ப அலங்காரம்
*******
கும்ப கலஸங்களை தேவனின் ஸரீரமாக பாவித்து அவைகளை  அலங்காரப்படுத்துதல்

கலாகர்ஷணம்
******
விக்ரத்தில் இருக்கும் தேவ ஸக்தியை கும்பங்களில் மாற்றுதல்

யாஹஸாலா பிரவேஸனம்
******* 
தேவ கலஸங்களை
யாக ஸாலையில் கொண்டு வருவது.

ஸூர்யஸோமன் பூஜை
**** யாஹஸாலைக்கி ஸூரியனையும் ஸந்திரனையும் அழைத்தல்

மண்டப பூஜை
************
யாஹஸாலையை ஸுத்திகரண பூஜை செய்தல்

பிம்ப சுத்தீகரணம்
*************
விக்ரங்களை  மந்திரங்களால் சுத்தீகரணம் செய்தல்

நாடீ சந்தானம்
********
யாஹஸாலைக்கும் தேவனுக்கும்
இணைப்பை ஏற்படுத்துதல்
தர்ப்பை கயிறு, தங்க கம்பி,வெள்ளிகம்பி, பட்டு கயிறு இவற்றால் தேவனின் சக்தியை விக்ரகங்களுக்கு கொண்டு வருதல்

விஸேஷ ஸந்தி
******
முப்பத்தியாறு தத்துவதேவதைகளுக்கும்
சகல ஆத்மாக்களுக்கும்
மறைந்த ஆத்மா பித்ருக்களுக்கும்
ஆர்க்கையம் தருதல்
திருப்தியளித்தல்

பூத சுத்தி
*********
மனுஷ ஸரீரத்தை தேவ ஸரீரமாக மாற்றுதல்

இஸ்பர்ஷா ஹீதி
************
முப்பத்தியாறு தத்துவங்கள்  யாஹத்திலிருந்து மூல விக்ரங்களுக்கு மாற்றுதல்

அஷ்ட பந்தனம்
************"
எட்டு பொருள்களை கொண்டு ஔஷதம் செய்து மூர்த்தியையும்,பீடத்தையும் ஓன்று சேர்த்தல்

பூர்ண ஹீதீ
*********
 யாஹத்தை பரிபூர்ணம் செய்தல்

கும்பாபிஷேகம்
****************
யாக சாலையில் மும்மூர்த்தி களாக வைத்து பூஜிக்கப்பட்ட கும்ப கலஸ நீரை அந்தந்த விக்ரங்களுக்கு அபிஷேகம் செய்து
அந்தந்த தேவர்களை எழுந்தருளச் செய்தல்

மஹாபிஷேகம்
***************
கும்பாபிஷேகம் முடித்தபின்
மூலஸ்தானத்தில் விக்ரங்களை முறைப்படி பூஜை செய்தல்

மண்டலாபிஷேகம்
********* 
விக்ரகத்தில் வீற்றிருக்கும்
தேவனை பாலகனாக பாவித்து ஒரு மண்டலம் நாற்பத்திஓரு நாட்கள் பூஜைகள் விக்கிரகங்களுக்கு முழுசக்தியையும் வரவைப்பது

ஏக குண்டம்
********
ஒரே குண்டத்தை அமைப்பது

பஞ்ஹாக்னி
************
ஐந்து குண்டம் அமைப்பது

நவாக்னி
***********
ஒன்பது குண்டம்

உத்தம பக்ஷம்
************
முப்பத்திமூன்று குண்டங்களை அமைத்தல்

குறிப்புகள்
******
கும்பாபிஷேகம் செய்யும் யாஹங்களை இரண்டு காலம்
நாலுகாலம்
எட்டு காலம்
பன்னிரண்டு காலம் என முறைகள் உள்ளது

கும்ப குடம்  சரீர இறைச்சி,
கும்ப நீர் இரத்தமாகும்
கும்பத்தில் போட்ட ரத்தினங்கள் சுக்லம்
கும்பத்தில் உள்ளே தர்ப்பைகளால் செய்யப்படும் கூர்ச்சம் நாடியாகும்
குடத்தின் மேல் முப்பரிமாணத்துடன் சுற்றபட்ட நூல்கள் நரம்புகளாகும்
கும்பத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கும் வஸ்திரம் தோலாகும்
கும்ப குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசு,முகமாகும்

தேங்காய் மேல் உள்ள தர்ப்பைகளால் செய்யப்படுள்ள லம்ப கூர்ச்சம் தலைகுடிமியாகும்

தேங்காய் அடியில் போடப்படுள்ள மாலைகள் தேவனின் ஜடாபாரங்கள்

தேவனின் ஜடாபாரங்கள் உச்சரிக்கும் மந்திரங்கள் பிராணனாகும்


No comments:

Post a Comment