Monday, 16 November 2020

திருமணப் பொருத்தம் பார்க்கும் வேறு சில நுட்பங்கள்

நட்சத்திர பொருத்தம் அல்லாமல் திருமணப் பொருத்தம் பார்க்கும் வேறு சில நுட்பங்கள்.

ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசியில் பெண் ஜாதகத்தில் செவ்வாய் நிற்பது.

ஆண் லக்னாதிபதியும் பெண் லக்னாதிபதியும் சேர்க்கை பெற்று சுபர் தொடர்பில் நிற்பது. 

ஆணின் லக்னத்திற்கு பெண்ணின் லக்னம் ஏழாக வந்தாலும் ஓரளவு பொருந்தும்.

ஆணின்/பெண்ணின் ஜாதகத்தில் தோஷம் பெற்ற கிரகத்தை அல்லது ஸ்தானத்தை பெண்ணின்/ஆணின் ஜாதகத்தில் உள்ள குரு சுக்கிரன் போன்ற சுபர் பார்ப்பது.

ஆணின் ஜாதகத்தில் ராகு நின்ற ராசியில் பெண் ஜாதகத்தில் கேது நிற்பது.

ஆணின் லக்னத்திற்கு பெண்ணின் லக்னம் 5,9 ஆக இருப்பினும் சிறப்பு.

ஆணின் லக்னாதிபதி பெண் ஜாதகத்தில் பலமாக இருந்தாலும் பெண்ணின் லக்னாதிபதி ஆணின் ஜாதகத்தில் பலமாகவும் சுபர் பார்வையில் இருந்தாலும் சிறப்பு. 


No comments:

Post a Comment