Monday, 16 November 2020

ஜாதக ரீதியாக கல்வி...

ஜாதக ரீதியாக கல்வி

எல்லா பெற்றோர்களின் கனவும் தான் படிக்காத கல்வியையும் தன் குழந்தை கற்க வேண்டும் என்பதே ஆகும்.

அத்தகைய கல்விக்கு அதிபதியாக வித்யா காரகனாகவும் புத்தகம் நூல்கள் முதலான ஏட்டுக் கலைகளுக்கும் புத்திக்கும் காரகராக திகழும் புத பகவான் உள்ளார்.

கல்வியை கற்பிக்கும் ஆசிரியரை குறிப்பவராகவும் வேத ஆகமங்களை குறிப்பவராகவும் அறிவிற்கு காரகனாகவும் திகழுபவராக குருவும் உள்ளார்.

லக்ன ராசிக்கு 2ம் இடம் ஆரம்ப கல்வியையும், 4ம் இடமான சுகஸ்தானம் கல்வியின் நிலையையும் அதன் மூலம் ஜாதகர் அடையும் பயனையும், 5ம் இடம் ஞாபக சக்தி, புலமை திறமையை
யும், 9ம் இடம் மேல் படிப்பு, பட்டபடிப்பையும் குறித்து நிற்கும்.

லக்ன ராசிகளின் இரண்டாம் அதிபதி ஆட்சி உச்சமாகியோ, கேந்திர திரிகோணங்களில் நின்றாலோ, இயற்கை சுபர்களின் பார்வை பெற்றாலோ சேர்க்கை பெற்றோலோ, சாரமேறினாலோ, சுபர் வீடுகளில் நின்றாலோ சுயவர்க்கத்தில் 3க்கு மேற்பட்ட பரல்களை பெற்றாலோ ஆரம்ப கல்வியில் தடை இருக்காது. நன்றாக படிப்பார்.

2ம் அதிபதி இயற்கை பாபர்களுடன் சேர்ந்தாலோ பார்த்தாலோ, பாபர்களின் வீடுகளில் அமர்ந்தாலோ, சாரமேறினாலும் 6,8,12மிடத்தில் அல்லது அதன் அதிபதிகளுடன் அவர்களது சாரத்திலோ அஸ்தங்கம் வக்ரமாகினாலோ சுயவர்க்க பரலில் 3க்கு குறைவான பரல்கள் பெற்றாலும் ஆரம்ப கல்வி தடைப்படும். 

 4ம் அதிபதி ஆட்சி உச்சமாகியோ, 1,4,5,7,9,10 நின்றாலோ, இயற்கை சுபர்களின் பார்வை பெற்றாலோ சேர்க்கை பெற்றோலோ, சாரமேறினாலோ, சுபர் வீடுகளில் நின்றாலோ சுயவர்க்கத்தில் 3க்கு மேற்பட்ட பரல்களை பெற்றாலோ கற்ற கல்வியினால் பலனடைவார். தடையில்லாத கல்வியை பெறுவார்.

நான்காம் அதிபதி இயற்கை பாபர்களுடன் சேர்ந்தாலோ பார்த்தாலோ, பாபர்களின் வீடுகளில் அமர்ந்தாலோ, சாரமேறினாலும் பாதகாதிபதி தொடர்புற்றாலோ  6,8,12மிடத்தில் அல்லது அதன் அதிபதிகளுடன் அவர்களது சாரத்திலோ அஸ்தங்கம் வக்ரமாகினாலோ சுயவர்க்க பரலில் 3க்கு குறைவான பரல்கள். தான் கற்ற கல்வியினால் பயனில்லை. கல்வி கற்பதில் ஜாதகனுக்கு ஈடுபாடு இருக்காது.
அக்கறை இன்மை. மந்தமான படிப்பு.

ஐந்தாம் அதிபதி ஆட்சி உச்சமாகியோ, கேந்திர கோணங்களில் நின்றாலும், இயற்கை சுபர்களின் பார்வை பெற்றாலும், சேர்க்கை பெற்றோலும், நட்சத்திரமேறினாலும், சுபர் ராசிகளில் நின்றாலும் சுயவர்க்கத்தில் 3க்கு மேற்பட்ட பரல்களை பெற்றாலோ நல்ல கற்பனை திறன் உடையவராவார், திறமைசாலியாகவும் தான் கற்ற கல்வியினால் புகழ்ச்சியும் பேரும் புகழும் அடைவார். 

ஐந்தாம் அதிபதியை இயற்கை பாபர்களுடன் சேர்ந்து, பார்த்து, பாபர்களின் வீடுகளில் அமர்ந்து, நட்சத்திரத்தில் இருந்தாலும் 6,8,12மிடத்தில் அல்லது அதன் அதிபதிகளுடன் அல்லது அவர்களது சாரத்தில் இருந்தாலும், அஸ்தங்கம் வக்ரமாகினாலும் சுயவர்க்க பரலில் 3க்கு குறைவான பரல்கள்  பெற்றாலும் கல்வியில் பிரச்சினை, படிப்பை விட்டு இடையில் விலகுவது, ஞாபக சக்தி இன்மை, புத்தி தடுமாற்றம் என கல்வி சார்ந்த பிரச்சினையை கொடுக்கும்.

9ம் அதிபதி ஆட்சி உச்சமாகியோ, கேந்திர கோணங்களில் நின்றாலும், இயற்கை சுபர்களின் பார்வை பெற்றாலும், சேர்க்கை பெற்றோலும், நட்சத்திரமேறினாலும், சுபர் ராசிகளில் நின்றாலும் சுயவர்க்கத்தில் 3க்கு மேற்பட்ட பரல்களை பெற்றாலும் மேற்படிப்பு, உயர்கல்வி, பட்டபடிப்பு, வெளிநாட்டு கல்விகள் கற்பார். கல்வியால் வெற்றியடைவார். அல்லது தனது சுய அறிவால் திறமைகளை வளர்த்துக் கொள்வார். அதிபுத்திசாலிகள். இத்தகைய அமைப்பு  மட்டும் இருந்து இரண்டு நான்காம் இடம் பாதித்தவர்களும் கல்வி  கற்மாலே  திறமைசாலிகளாக இருப்பர்.

ஒன்பதாம் அதிபதியை இயற்கை பாபர்களுடன் சேர்ந்து, பார்த்து, பாபர்களின் வீடுகளில் அமர்ந்து, நட்சத்திரத்தில் இருந்தாலும் 6,8,12மிடத்தில் அல்லது அதன் அதிபதிகளுடன் அல்லது அவர்களது சாரத்தில் இருந்தாலும், அஸ்தங்கம் வக்ரமாகினாலும் சுயவர்க்க பரலில் 3க்கு குறைவான பரல்கள்  பெற்றாலும் ஜாதகனால் உயர்கல்வியை தொடர முடியாது. வறுமையினால் அல்லது சில பிரச்சனைகளால் உயர்கல்வி மேல்படிப்பு பாதிக்கப்படும். மற்ற அமைப்பு இருந்து ஒன்பதாம் இடம் அதன் அதிபதி பாதிக்கப்பட்டால் திறமை இருந்தும் படிக்க முடியாமல் போகும்.

வித்யாகாரன் புத பகவானும், அறிவிற்கு அதிபதி குரு பகவானும் ஆட்சி உச்சமாகியோ, கேந்திர கோணங்களில் நின்றாலும், இயற்கை சுபர்களின் பார்வை பெற்றாலும், சேர்க்கை பெற்றோலும், நட்சத்திரமேறினாலும், சுபர் ராசிகளில் நின்றாலும் சுயவர்க்கத்தில் 3க்கு மேற்பட்ட பரல்களை பெற்றாலும் ஜாதகனின் கல்வி சிறப்பாக இருக்கும். சிறந்த புத்தி ஞானம் கொண்டவராகவும் பக்தி கொண்டவராகவும் திகழ்வார். நல்ல ஆசிரியர்கள் அமைவார்கள். வியாபார தந்திரங்கள் தெரிந்தவராகவும் இருப்பார்.

புதன், குரு இயற்கை பாபர்களுடன் சேர்ந்து, பார்த்து, பாபர்களின் வீடுகளில் அமர்ந்து, நட்சத்திரத்தில் இருந்தாலும் 6,8,12மிடத்தில் அல்லது அதன் அதிபதிகளுடன் அல்லது அவர்களது சாரத்தில் இருந்தாலும், அஸ்தங்கம் வக்ரமாகினாலும் சுயவர்க்க பரலில் 3க்கு குறைவான பரல்கள்  பெற்றாலும் ஜாதகனின் கல்வி சிறப்பில்லை, சிறந்த ஆசிரியர்கள் அமையாமை, கல்வி சார்ந்த தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.

இவை அனைத்துடன் லக்னமும் லக்னாதிபதியும் பலம் பெறுவது அவசியும்.

கல்வியில் சிறக்க ஞாபக சக்தி பெற வழிபாட்டு முறைகள்:

* தினமும் அல்லது நவமி திதியில் சரஸ்வதி வழிபாடு.

* சரஸ்வதி காயத்ரி மந்திரம் தினமும் காலை சூரிய உதயத்தின் போது ஓன்பது முறை சொன்னால் கல்வி அறிவு பெறுகும்.
"ஓம் வாகாதேவ்யை வித்மஹே
வ்ருஞ்சி பத்தின்யை ச தீமஹி
தந்நோ சரஸ்வதி ப்ரசோதயாத்"

* ஹயக்ரீவரை தினமும் அல்லது புதன்கிழமை அல்லது ஏகாதசி அன்று வழிபட்டால் ஞானம் கிடைக்கும்.
"ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்"

* அபிராமி அந்தாதியின் 69வது பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!

* கல்வி கற்கும் இடத்தில் அல்லது பார்வை படும் இடத்தில் சிங்கத்தின் படம் அல்லது சிங்கத்தின் உருவ சிலைகளை வைத்தால் ஞாபக சக்தியும் கல்வியறிவும் கிடைக்கும்.

* கல்வி அறிவை தரும் திருப்புகழ் - 923
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.

* சதுர்த்தி அன்று அல்லது திங்கட்கிழமை அன்று அரசமரத்து விநாயகரை வழிபட கல்வி சித்திக்கும்.

* துளசி செடிக்கு கீழ் அல்லது புண்ணிய நதிகளுக்கு அருகில் இருந்து மந்திர ஜபம் செய்தால் கல்வி அறிவு பெருகும்.

* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருப்பதும் சிறப்பு
நன்றி

No comments:

Post a Comment