Thursday, 19 November 2020

நெற்றியில் மத குறி தரித்தல்.

நெற்றியில் மத குறி தரித்தல்.
.....................



குளித்து முடித்து விட்டால் நெற்றியில், ஒரு சந்தனக்குறியோ! குங்கும குறியியோ, பஸ்மம் குறியையோ! வைக்க வேண்டும்,

நீர் இல்லா நெற்றி பாழ்,,

குளித்து முடித்தவன் குறி தொடவில்லை என்றால் அவனை அவ்விதம் பார்ப்பவர்கள் குளிக்க வேண்டும் என்கின்ற சொல்லும் உண்டு,

நெற்றியின் மத்யபாகத்தில் திலகம் என்கின்ற குறி வைத்து கொள்வார்கள்,
மாலை நேரங்களில் நெற்றியில் பஸ்மம் இட்டுகொள்வது தீய சக்திகள் அண்டாது பார்த்து கொள்ளும்.

ஞாயிற்றுக்கிழமை, ஒரு காரணத்தாலும் குங்கும குறி திலகம் தரிக்க கூடாது,
காரணம் சூர்யபலம் கொண்டு கிட்டும் அனுகூலங்கள் கிட்டாது போகும்,

நெற்றியின் மத்யபாகத்தில் சந்தனக்குறி தரிப்பது உத்தமம்,

திங்கள்கிழமை பஸ்மக்குறி தரிப்பது மிகவும் உத்தமம்,
பஸ்மக்குறி தரித்து சிவனை திங்கள் தோறும் ப்ரார்த்திக்கும் ஸ்த்ரீமார்கள்கு மாங்கல்ய பாக்கியம் விரைவில் உண்டாகும்,

செவ்வாய்கிழமை நெற்றியில் சந்தனகுறி சார்த்தி, அதன்மத்ய பாகத்தில் குங்கும திலகம் இட்டால் சகல ஐஸ்வர்யமும் வீடு தேடி வரும்,
அதுமட்டுமல்ல நல்ல சந்தானபாக்கியம் உண்டாக்கும்

புதன்கிழமை
குங்கும திலகம் நெற்றியில் தரிப்பது சுகமான சங்கதிகள் செவியில் வந்து சேரும்,

வியாழக்கிழமை 
நெற்றியின் மத்யபாகத்தில் குங்குமம் அல்லது சந்தனக்குறி கட்டாயமாக தரிக்க வேண்டும்

வெள்ளிக்கிழமை,
தேவியின் சான்னித்யம் கொண்ட நாள் வெள்ளிக்கிழமை, ஆதலால் கட்டாயமாக குங்கும திலகம் நெற்றியில் தரிக்க வேண்டும்.

சனிக்கிழமை,
ஹனுமான் ப்ரார்த்தனை சனிக்கிழமை தான் கை கொள்வார்கள்,
அனுமனுக்கு பிடித்த வர்ணம் சிகப்பு,
ஆதலால் அன்று நெற்றியில் குங்கும திலகம் சார்த்தி, அனுமனை வணங்கினால் வேண்டிய காரியம் சித்தியாகும்.

No comments:

Post a Comment