Tuesday, 24 November 2020

Polycystic Ovarian Disease

பிசிஓடி (PCOD) என மிகச் சாதாரணமாக அழைக்கப்படும் `பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்'(Polycystic Ovarian Disease)  நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன்   ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. இந்த நோயை அசோக மரப்பட்டை உள்ளிட்ட சில மூலிகைகளால் குணப்படுத்த முடியும்'' என்கிறார் இயற்கை மருத்துவர் ரேவதி பெருமாள்சாமி.

``பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்... இந்நோய் பெரும்பாலும் பூப்பெய்திய பெண்களையே பாதிக்கிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால்,  15 வயதுக்குமேல் 45 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு வருகிறது. இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 

பெண்களுக்கு வழக்கமாகச் சுரக்கும் `ஈஸ்ட்ரோஜென் 'மற்றும் `புரொஜெஸ்ட்ரோன்' ஆகிய  ஹார்மோன்கள் குறைவாகச் சுரப்பதாலும், `ஆன்ட்ரோஜென்' ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதாலும்தான் பெண்களின் சினைப்பையில் சிறு  சிறு நீர்க்கட்டிகள் உண்டாகின்றன.  `ஆன்ட்ரோஜென்' ஹார்மோன் ஆண்களுக்கு சுரக்கக்கூடியது. இதன் காரணமாக முகம், உடல்,  வயிறு ஆகிய இடங்களில் அதிக அளவில் முடி வளரும். தலைமுடி உதிர்தல் ,பருக்கள், மன அழுத்தம், கருத்தரிக்காமை, கருத்தரித்தலில் தாமதம், முறையற்ற மாதவிடாய், மாதவிடாய் வராமல் இருப்பது, உடல் எடை அதிகரிப்பது, களைப்பு, உடலுறவில் நாட்டமின்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

இந்நோயைக் குணப்படுத்தும் வழி தெரியாமல் பலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அலோபதியில் நீண்டகாலம் சிகிச்சை

 பெறவேண்டும்.  ஆனால், இயற்கை மூலிகைகளைக் கொண்டு இந்நோயை முழுமையாகச் சரி செய்யலாம். அழகுக்காக வளர்க்கப்படும் அசோகா மரப்பட்டைப் பொடி ஐந்து கிராம் எடுத்து, அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து அடுப்பில் ஏற்றி கொதிக்க வைக்க வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலை, மாலை சாப்பிட வேண்டும். இதை இரண்டு மாதம் தொடர்ந்து  அருந்தினால் `பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்' சரியாகும். அத்துடன் கருப்பை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் இது சரி செய்யும். இது, கருப்பைக்கு டானிக் போன்றது. எனவே இதை, 'பெண்களின் மருந்து' என்றும்  அழைக்கிறார்கள். 

கழற்சிக்காய் சூரணம் ஐந்து கிராம் எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை, மாலை என தொடர்ந்து 2 மாதம் குடித்தால் சினைப்பையில் காணப்படும் நீர்க்கட்டிகள் கரையும். அசோகமரப்பட்டைப் பொடியும் கழற்சிக்காய் சூரணமும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மருந்துகள் மட்டும் இல்லாமல் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சில பொருள்களாலும் பழங்களாலும் இந்நோய்க்குக் காரணமான ஹார்மோன் குறைபாடுகளைச் சரி செய்யலாம். வாழைப்பூ, வெங்காயப்பூ, முடக்கத்தான் கீரை ஆகியவற்றைச் சமைத்துச் சாப்பிடலாம்.  செம்பருத்திப் பூவில் தேநீர் வைத்துக் குடிப்பதும் நல்லது. கற்றாழை ஜூஸ், வேப்பம் பூ ரசம் அல்லது பச்சடி, அத்திப் பழம், மாதுளம்பழம், பப்பாளிப் பழம், எலுமிச்சை, முருங்கைக் கீரை, பசலைக்கீரை, செலரி, ஸ்ட்ராபெரி, சோயாபீன்ஸ், பூசணி விதை, வெள்ளரி விதை, பருத்திக்கொட்டை, ஆளி விதை, எள், சீரகம், வெந்தயம், கருஞ்சீரகம், ஆலிவ் எண்ணெய், பாகற்காய், இலந்தை இலை, வெங்காயம், பூண்டு, கைக்குத்தல் அரிசி, பாதாம் பருப்பு, முழு தானியங்கள், முழு பயறு வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது. இந்த உணவு வகைகளைச் சேர்ப்பதன்மூலம் `ஈஸ்ட்ரோஜென்' மற்றும் `புரொஜெஸ்ட்ரோன்' ஹார்மோன்களின் குறைபாடுகளைப் போக்க முடியும். தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி, மூச்சுப்பயற்சி மற்றும் எளிய யோகாசனங்களைச் செய்து வருவது நல்லது

No comments:

Post a Comment