Saturday, 5 December 2020

தனிஷ்டா பஞ்சமி: மரணத்திற்குப் பின் உயிர்கள் கஷ்டப்படாம எமலோகம் போக முடியுமா?

உயிர் உடலை விட்டு பிரிவது மரணம். அந்த மரணம் சிலருக்கு இயற்கையாக அமையும். வயது மூப்பு ஏற்பட்டு மரணமடைவார்கள். சிலருக்கு நோயினால் மரணம் வரும். சிலரோ விபத்துக்கள் மூலம் மரணமடைவார்கள். இயற்கையாக மரணமடைந்தவர்களில் சிலர் முக்தியடைந்து இறைவனின் பாதத்தை அடைவார்கள். சிலரது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கும்.


இறந்த திதி, நட்சத்திரங்களின்படி அந்த உயிர்கள் எமலோகத்தை அடைகின்றன. ஒருவர் பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறக்கும் போது திதியையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வோம். நம் ராசி பார்த்து கோவில்களில் அர்ச்சனை செய்வோம். ஆனால் இறக்கும் போது திதி மட்டுமே பார்த்தால் மட்டுமே போதாது நட்சத்திரமும் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணமடைந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.



27 நட்சத்திரங்களில் தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ரோகிணி,கார்த்திகை, உத்திரம்,மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிபடுத்துகின்றது.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களை செய்யாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்சத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். எனவேதான் கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். நல்ல முறையில் மரணமடைந்தவர்கள் பற்றியும் தனிஷ்டா பஞ்சமியில் மரணமடைந்தவர்கள் படும் கஷ்டங்களையும் பார்க்கலாம்.


முக்தியடைந்த உயிர்கள்
வைகுண்டம் செல்பவர்கள்

மரணத்திற்குப் பிறகு முக்தி பெற்றவர்கள் கபாலம் மூலம் உயிர் பிரிந்து சூரியன் வழியாக இறைவனின் பாதங்களை அடைகின்றன. இதனைத்தான் கயிலாய பிராப்தி, வைகுண்ட பிராப்தி என்பார்கள். முக்தி நிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன. மன்னிக்கத் தகுந்த, மிகக் கொடிய பாவங்களைச் செய்யாதவர்களின் உயிர்கள் யம தூதர்களால் நேரடியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. பூமிக்கும் எமலோகத்திற்கும் இடையே 27 நட்சத்திரங்களின் வழியாகச் செல்லும் 27 பாதைகள் உள்ளன. இதில் அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் பாதைகளைத் தவிர மற்ற 14 நட்சத்திரங்களின் வழியாகச் செல்பவர்கள் விரைவாக எமப்பட்டினத்தை அடைந்து விடுவார்கள்.

MOST READ: மகாளய அமாவாசையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?


இறந்தவர்களுக்கு பிண்டம்
எமலோகத்தில் கணக்கு

அங்கு எமன் அவ்வுயிர்களுக்கு சித்திரகுப்தன் மூலம் பாவ, புண்ணியங்களை கணக்கு பார்த்து அவற்றைப்பற்றி பற்றி உபதேசித்து பிறகு யம தூதர்களை அழைத்து மீண்டும் கொண்டு போய் அவர்கள் உடலிருக்கும் இடத்தில் விடச் சொல்லுவார். உடலானது மாந்தியால் சவமாக மாற்றப்பட்டு விடும். அங்கு வந்து சேரும் உயிரானது தங்கள் உறவினர்கள் அந்த உடலுக்கு நடக்கும் சடங்குகளையும் பார்த்துக் கொண்டே இருக்கும். பிள்ளைகள் 12 தினங்களுக்கு அன்புடன் தரும் பிண்டங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கும். அதற்குப் பிறகு மீண்டும் அவ்வுயிரை யமதூதர்கள் கவர்ந்து சென்று எமனின் முன் நிறுத்துவார்கள். அங்கு அவர்களின் மறுபிறவி பற்றி தீர்மானிக்கப்பட்டு, அவ்வுயிர்கள் சந்திர மண்டலத்திற்கு வரும்.



எமலோகம் செல்ல தடை
தடையான நட்சத்திரங்கள்

அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் வழியாக எமப்பட்டினம் செல்ல தூரமும், காலமும் அதிகமாகும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல ஆறு மாதங்கள் அதிகமாகும். ரோகிணி வழியாகச் செல்ல நான்கு மாதங்கள் அதிகமாகும். கார்த்திகை, உத்திரம் என்ற இரண்டு நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல மூன்று மாதங்கள் அதிகமாகும். மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல இரண்டு மாதங்கள் அதிகமாகும்.

Advertisement

Advertisement

கருடபுராணத்தில் விளக்கம்
உயிர்களுக்கு பிண்டம்

அடைப்பு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு கால தாமதம் ஆவதற்கான காரணம் என்ன என்பதற்கான தெளிவான விளக்கம் கருட புராணத்தில் உள்ளது. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தில் இறப்பதே தண்டனையாக அமைகிறது. இவ்வுயிர்கள் எமலோகம் செல்வதற்கு முன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு ஸ்தூல சரீரம் வழங்கப்படும். அந்த உடம்பை பெற்ற தனிஷ்டா பஞ்சமி உயிர்கள் நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான காத தூரம் கல்லிலும், முள்ளிலும், காட்டுப் பாதையிலும் நடந்து செல்ல வேண்டும். அவை உடம்பை ரணமாக்கி விடும். தண்ணீரும், உணவும் கிடைக்காது. வெளிச்சமே இருக்காது. இதனால்தான் அடைப்பு காலங்கள் முழுவதும் தினந்தோறும் உணவும், தண்ணீரும், விளக்கும் வைத்து கற்பூரம் ஏற்றி, அவை அந்த உயிர்களைப் போய்ச் சேர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள். இவர்களுக்குப் போடும் பிண்டங்களைத் தட்டிப் பறிக்க தலைக்கு மேல் பைசாசங்கள் வேறு பறந்து கொண்டேயிருக்கும். நடக்க முடியாமல் துன்பப்படும் பொழுது கூட யம கிங்கரர்கள் அடித்து, உதைத்து நடக்க வைப்பார்கள். என்ன பாவம் செய்ததற்காக இப்படி உன்னைத் துன்புறுத்துகிறோம் என்று சொல்லிச் சொல்லி அடிப்பார்கள்.

MOST READ: சந்திராஷ்டமம் : இந்த வாரம் மவுன விரதம் இருக்க வேண்டியவங்க இந்த 4 ராசிதான்


பரிகாரம் என்ன
தீபம் ஏற்றுங்கள்

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்களை கொண்டு செல்ல வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அணையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த அதற்கான பயிற்சி பெற்ற பிரமாணர்களைக் கொண்டு செய்ய வேண்டும்.


மறு ஜென்மம்
மறுபிறவி

ஒருவர் தற்பொழுது பிறந்துள்ள நட்சத்திரத்தை வைத்தே அவர் சென்ற பிறவியில் அடைப்புள்ள நட்சத்திரத்தில் இறந்தவரா இல்லையா என்று கண்டுபிடிக்கலாம். சென்ற பிறவியில் ஒருவர் இறக்கும் பொழுது எந்த நட்சத்திரத்தில் சந்திரன் எத்தனை நாழிகை சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாரோ, அதே நட்சத்திரத்தில் மீதமுள்ள நாழிகையில் மறுபிறவியில் அவதரிப்பார். இதைத்தான் ஜாதகத்தில் திசை கணக்கிடும் பொழுது கர்ப்ப செல் நீக்கி என்று போடுவார்கள்.

MOST READ: நவராத்திரி புராண கதை: ஒன்பது நாட்கள் அசுரர்களை போரிட்டு அளித்த அம்பிகை


பாவத்திற்கு பரிகாரம்
சாபத்தினால் தோஷம்

அடைப்பு உள்ள நட்சத்திரத்தில் மரணமடைவதால் ஏற்படும் கொடுமையான தோஷம் அவர்கள் செய்த பாவத்தினால் மட்டும் வருவதில்லை. அவ்வுயிர்கள் பிறந்த ஏழு தலைமுறைகளில் ஏற்பட்ட பாவம் அல்லது சாபத்தினாலும் வரும். எனவே அதற்குரிய பூஜை, பரிகாரங்களைச் செய்தால் சரியாகி விடும். தனிஷ்டா பஞ்சமி மரணங்கள் தொடராமல் இருக்க இறைவனை வணங்க வேண்டும். தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் இறக்காமல் இருக்கவும், நமது இறப்பும், அதற்கடுத்த பயணமும் துன்பமின்றி அமையவும் இறைவனை வேண்டுவோம்.



1 comment:

  1. Dear friend,
    Who had seen these all those things? Don't say believes.The only reason behind this is fear.

    ReplyDelete