Saturday, 5 December 2020

இறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள்

இறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள்

இந்த அடைப்பு வருவது எதனால்?

இந்த அடைப்பு வருவது எதனால் என்றால் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்தை ஒட்டி வருவதுதான் கர்ம வினைப்பயன் என்பார்கள். பலர் இயற்கைக்கு மாறாக இறப்பவர்களுக்குத்தான் இந்த அடைப்பு ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.

அதாவது தூக்கு மாட்டிக் கொண்டு இறப்பது, சாலை விபத்து மூலம் இறப்பது, இன்னும் சிலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வது, மேலும் கொலையானவர்களுக்கு எல்லாம் இந்த அடைப்பு ஏற்படும் என்று நினைக்கின்றனர். நிச்சயம் அதுவல்ல! இந்த ஜென்மத்தில் நன்மைகள் செய்திருந்தாலும் முன்வினைப்பயன் மூலம் இந்த அடைப்பு ஏற்படுகிறது.

அதாவது, இறக்கும் நாளில் இந்த அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா, எந்த நட்சத்திரங்கள் வந்தால் அடைப்பு ஏற்படும், வெறும் நட்சத்திரங்கள் வந்தால் மட்டும் அதனை அடைப்பில் சேர்க்க இயலுமா என்பதை இங்கு விளக்குகின்றேன். இந்த அடைப்பு நட்சத்திரங்கள் எவை எவை என்பதை கீழே கொடுத்துள்ளேன்.

அடைப்பு நட்சத்திரங்கள்

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் அடைப்பு நட்சத்திரங்கள் மொத்தம் பதிமூன்று ஆகும். இதில் தனிஷ்டா என்றால் அவிட்டம் என்பது பொருள்.  

இந்த அவிட்டம் முதல் சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு என்றும் ரோகிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு என்றும் கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு என்றும் மிருகசீருஷம், சித்திரை, புனர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்த நேரத்தில் இந்த நட்சத்திரங்கள் இருந்தால் இந்த அடைப்பு ஏற்படும். தனிஷ்டா பஞ்சமி திதி அன்று மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வந்தால் அடைப்பு உண்டு என அறுதியிட்டு சொல்லலாம்.

பரிகாரம்

இதற்கு பரிகாரமாக இறந்தவர்களின் வீட்டில் அந்த குறிப்பிட்ட காலம் வரை இறந்த இடத்தில் செங்கற்களால் ஆன கற்களால் வீடு மாதிரி சிறியதாக கட்டிக் கொள்ள வேண்டும். அதற்குள் வென்கல சொம்பில் தண்ணீர் ஊற்றி நிரப்பிக் கொள்ள வேண்டும். காலை, மாலை நேரத்தில் காமாட்சியம்மன் விளக்கில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்யம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து வரவேண்டும். இறந்தவரின் ஆன்மாவுக்கு நாம் இவ்வாறு செய்ய வேண்டும்.

அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்

வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு வெண்கல பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு .குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக முகத்தைப்

பார்த்து விட்டு முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தை பார்த்து விடவேண்டும். அதன் பிறகு ஒரு அந்தணரை வரவழைத்து அவர்களிடம் அந்த வெண்கல பாத்திரத்தை எண்ணெயுடன் கொடுத்து விடவேண்டும். பின்பு அந்த ஆன்மாவிற்கு படைத்தல் வேண்டும்.  

ஆதலால், இறந்தவர்களுக்கு நட்சத்திரம் பார்ப்பது நல்லது.



No comments:

Post a Comment