Thursday, 3 December 2020

சுக்கிரன் எங்கே வாசம் செய்கிறார்...

சுக்கிரன் எங்கே வாசம் செய்கிறார்...!

சுக்கிரன் நவகிரகங்களில் 2ம் நிலை முழு சுபர், ஆன்மீக பயணத்தில் மட்டுமே சுக்கிரனை அசுபர் என்கிறோம் அதனால் தான் ஆன்மீக காரகர் குருவுடன் பகை பாராட்டுகிறார் சுக்கிரன், சோதிடத்தில் சுக்கிரன் 2ம் நிலை சுப கிரகமாகவே கூறப்பட்டுள்ளது, சுக்கிரனை சாராத மனித வாழ்க்கையே கிடையாது என்பதே உண்மை நிலை, சுக்கிரன் லக்னம்/ராசிக்கு 4ல் திக் வலு பெறுகிறார் இதன் பொருள் சுகத்துக்கு காரகம் வகிக்கும் சுக்கிரன் சுக ஸ்தானத்தில் உச்சத்துக்கு இணையான வலுவான திக் வலுவை பெறுகிறார், ஆனால் இவ்வாறு 4ல் திக் வலுப்பெறும் சுக்கிரன் கரோக பாவ நாஸ்தி எனும் நின்ற வீட்டை கெடுக்கும் செயலை செய்வதாக சோதிட முன்னோர்கள் கணித்துள்ளார், இதன் பொருள் என்ன?, 4ல் சுக்கிரன் திக் வலுப்பெரும்போது அந்த ஜாதகருக்கு அவரின் கர்மவினைக்கு ஏற்ப சுகத்தை கொடுத்தாலும் போதவில்லை என்றே ஜாதகர் அலைவார், சிலருக்கு அளவுக்கு மீறிய சுகத்தை கொடுத்து அதில் மயக்கி கட்டிப்போட்டு விடும், சிலரை இந்த அமைப்பு பிச்சை எடுக்கவும் வைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், சோதிடத்தில் எந்த கிரகமானாலும் கர்மாவின் வழியே தான் செயல்பட்டாக வேண்டும் என்பதே விதி, சுக்கிரன் ஒருவர் வாழ்வில் எங்கெல்லாம் தன் பணியை செய்கிறார் பார்ப்போமா...!

சுக்கிரன் வாசனை திரவியங்கள், ஆடம்பரமான வாழ்க்கை, வாகனம், புத்தாடை, அழகு சாதன பொருள்கள், செயற்கையான ஆபரணங்கள், அலங்காரம், பகட்டு, பிரபலத்துவம், எந்த பொருளிலும் மேன்மையை எதிர்பார்ப்பது, மனைவி, கல்யாணம் செய்த சுமங்கலி பெண்கள், தெய்வம் லக்ஷ்மி, பூஜையில் வாசனை பொருள்கள், பூ, இப்படி சுக்கிரன் வாழ்வில் பின்னிப்பினைந்து உள்ளார், இங்கெல்லாம் சுக்கிரன் வாசம் செய்கிறார், சுக்கிரன் எப்போதுமே எதிலுமே மேன்மை நிலையை மட்டுமே விரும்புவார், இதனால் தான் வீட்டை சுத்தமாக வாசனையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள் முன்னோர்கள், அதே போல் சுக்கிரனுக்கு சண்டை பிடிக்காது, சுக்கிரனுக்கு ஆண்மைத்தன்மை பிடிக்கும், சுக்கிரனுக்கு இனிப்பு இஷ்டம் ஆகும், சுக்கிரனை இனிப்பு தானம் வழங்கி தூண்டலாம், சுக்கிரனுக்கு அமைதி பிடிக்கும், சுக்கிரனுக்கு சுத்தம், சுகாதாரம் பிடிக்கும், சுக்கிரனுக்கு பெண்களை அவமதிக்கும்/இழிவாக நினைக்கும் நபர்களை பிடிக்காது, உடல் பாகத்தில் சுக்கிரன் உள்ளங்காலில் உச்சம் பெறுவதன் சூழ்ச்சமம் கால்களை சுத்தமாக வைத்திருந்தால் சுக்கிரன் அங்கே குடிக்கொள்வார், பெண்களின் கால்களில் சுக்கிரன் வாசம் செய்கிறார், இதனால் தான் பெண்ணை திருமணம் செய்து கணவர் வீட்டுக்கு வரும் நிகழ்வில் வீட்டின் தலைவாசலில் அரிசி ஆழக்கை வைத்து அதை தட்டிவிட்டு உள்ளே அழைக்கிறார்கள், அதாவது கல்யாணம் செய்து முழு சுக்கிரன் என்கிற அந்தஸ்து பெற்ற பெண், வீடு எனும் சுகஸ்தானத்தில் தன் காலில் உச்சம் பெரும் சுக்கிரனை கொண்டு 4ல் காரகத்துவம் வகிக்கும் அரிசி எனும் தானியத்தை சுகஸ்தானத்தில் இறைகிறாள் இதன் வழியே அந்த வீட்டில் செல்வம்/சுபிக்ஷம்/சுகம் தழைத்து ஓங்கும் என்பது ஐதீகம்/நம்பிக்கை, பெண்களின் வாக்கில் சுக்கிரன் வாசம் செய்கிறார், பெண்களின் மர்ம உறுப்பு சுக்கிரன் இருப்பிடம், இந்த உடல் பாகங்களை பெண்கள் சுத்தமாக பேணி பாதுகாத்து வர அவர்களுக்கு சுக்கிரன் வசியமாவார், சுக்கிரன் எப்போதுமே நிறைவை விரும்புபவர் ஆகவே சுக்கிரனை வசீகரிக்க மனதில் உள்ள பேராசையை அழிக்க வேண்டும், மனைவியை மதிக்க வேண்டும், அன்பாக நடந்து கொள்ள வேண்டும், சுக்கிரன் கால புருஷ லக்னத்துக்கு 6ல் நீச்சம் பெறுவதன் அர்த்தம் பெண்ணின் தொப்புள் பாகம் சுக்கிரன் நீச்சம் ஆகும் இடம் இதில் தான் புதன் உச்சம் பெறுகிறார், தன் இடையை வெளிக்காட்டும் பெண் அவமானம்/நீச்ச நிலை சகவாசம்/நோய்/கடன் இவைகளை நிச்சயம் பெற்றே தீருவார், அதுசரி உடனே சினிமாவில் எத்தனையோ நடிகைகள் தங்கள் இடையழகை காட்டி தானே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார்கள் என்கிற கேள்வி எழும்?, ஐயா உங்கள் மனசாட்சியை தொட்டு கூறுங்கள் அந்த நடிகைகள் அத்தனை பேரையும் ஒருநொடியாவது தவறான கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்து ரசித்ததில்லை?, அதுவே அவர்களுக்கு கிடைக்கும் அவப்பெயர்/நீச்ச நிலை தானே, இதை சிந்திக்க வேண்டும், அடுத்து சுக்கிரன் 4ல் திக் வலுபெருக்கிறார் 4 உடல் உறுப்பில் மார்பை குறிக்கும், இதை வெளிக்காட்ட கூடாது என்றே உடை தரிகிறோம், ஆனால் இன்றை பிரபலங்கள் எத்தனை பேர் இதை வெளியில் விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள் 90% பேர் அவ்வாறே உடை உடுத்தி அதன் வழியே தனம்/பிரபலத்துவத்தை சம்பாதிக்கிறார்கள், இதனால் தான் சமீப காலங்களில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகமாக தாக்குகிறது, இப்படி சுக்கிரனை தவறாக உபயோகப்படுத்துவதை எவ்வளவோ வழியில் சுட்டிக்காட்டலாம், சுட்டி காட்டும் போதே எது தவறு என்பது தெளிவடையும் என்பதால் தான் தவறுகளையும் சுட்டிக்காட்டினேன், ஒரு சிறிய யோசனை உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த பாவத்தில் நின்றுள்ளாரோ அந்த பாவத்தின் உடல் உறுப்பு/பொருள் காரகங்கள்/உயிர் காரங்களை மேலே கூறிய எச்சரிக்கை உணர்வுடன் சுத்தமாகவும்/மரியாதையாகவும்/பேராசை இல்லாமல் இருந்தால் சுக்கிரனின் நல் பலன்களை பெறலாம், சுய ஜாதகம்/கிரக நிலை பதிய வேண்டாம், மீண்டும் சந்திப்போம்...!

No comments:

Post a Comment