Thursday, 3 December 2020

பானக நரசிம்மர் மங்களகிரி குண்டூர் விஜயவாடா

பானக நரசிம்மர் மங்களகிரி குண்டூர் விஜயவாடா
            இங்கு மூன்று நரசிம்மர் கோயில் உள்ளது மலையடிவாரத்தில் லஷ்மி நரசிம்மர்  மலையில் பானக நரசிம்மர் மலை உச்சியில் கண்டல நரசிம்மர் இந்த மலை யானை வடிவில் காணப்படும்
              பானக நரசிம்மர் கோவிலில் வேறு சிற்பங்கள் கிடையாது சங்கு சக்கரம் கையில் ஏந்தி  முகம் மட்டுமே கொண்டு 15 செமீ திறந்த வாய்  பல்வரிசை தெரியும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
            கோவில் படியேறும் இடத்தில் உள்ள துவஜஸ்தம்பத்தில் 365  திரிகள் இருப்பதால் ஒரு முறை ஏற்றினால் ஒரு வருடம் விளக்கு ஏற்றிய பலன் கிடைக்கும்
           தீப ஒளி வீசும் குகை சன்னதியில் கருவறை சுவற்றில்    மேற்கு நோக்கிய ஸ்வயம் மூர்த்தி  நரசிம்மர் நகங்கள் சுதர்சன சக்கரம் அம்சம் கொண்டது இரவிலும் இந்த கோவில் திறந்து இருக்கும் தேவர்கள் வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம்
            800 படிகள்  படியேறும் இடத்தில் பானகம் நைவேத்தியம் செய்ய அர்ச்சனை சீட்டு வாங்கும் இடத்தில் நம் வேண்டுதல் அளவுக்கு பானக  நைவேத்தியம் செய்ய பணம் காட்டினால்  மலையில் நீர் வசதி இல்லை
     மலைக்கு கிழக்கே உள்ள கல்யாணஸரஸ்  சுனை நீர்  காவடியாக எடுத்து வந்து பானகம் செய்து தருவார்கள் இங்கு எவ்வளவு வெல்லம் சிதறினாலும் பானகம் சிதறினாலும் ஈ எறும்பு வராது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது தேவர்கள்   உருவாக்கிய சுனை நீர் அது மிகவும் சிறப்பானது
    இலங்கையில் ராவண யுத்தம் முடிந்து வந்த போது ராமன் இங்கு வந்து வழிபட்ட தலம்
            நாம் எவ்வளவு பானகம் நைவேத்தியம் செய்ய கொடுத்தாலும்    அதை வலம்புரிச் சங்கில் எடுத்து புருஷசூக்தம் சொல்லிய படி நரசிம்மர் வாயில்  ஊற்றும் போது மடக் மடக் என்று ஓசை நன்கு கேட்கும்    எவ்வளவு கொடுத்தாலும் சரிபாதி அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளும்  நரசிம்மர்  அதோடு ஏப்பம் வரும் ஓசையோடு மீதம் வெளியே வந்து விடும் அந்த பானகம் அந்த பக்தருக்கு வழங்கி விடுவார்கள்  அண்டா முழுவதும் நைவேத்தியம் செய்தாலும்   சரிபாதி அளவு எடுத்து கொள்ளும் துலாகோல் நரசிம்மர் பீமன் தான் இங்கு முதலில் பானகம் நைவேத்தியம் செய்து பூஜித்தாக வரலாறு!
      ராமானுஜர் மத்வாசாரியார் பூஜித்த ஸ்தலம்
   கிருஷ்ணதேவராயர் போருக்கு போகும் முன் இங்கு வந்து வழிபாடு செய்து கொண்டபள்ளியை ஜெயித்து வந்து காணிக்கை மும் பொன்னும் நிலமும் அளித்தார்
   இங்கு வைகானஸ் சம்பிரதாயம் அனுஷ்டிக்க படுகிறது 
      பங்குனி ஆவணி பெளர்ணமி  மாசி பீஷ்ம ஏகாதசி மில் பிரம்மோற்சவம் தெப்பம் நவராத்திரி கார்த்திகை பெளர்ணமி முக்கிய விழா
           இங்கிருந்து 50 படி யேறினால் வைர கண்டவர் வைர பிறை சந்திரன் கொண்ட மகாலக்ஷ்மி ராஜலெஷ்மி என்ற திருநாமம் கொண்ட ஸ்வயம் மூர்த்தி யை தரிசனம் செய்யலாம்
     ராஜலெஷ்ம்மா என அன்புடன் அழைக்கும் ராஜலெஷ்மியை தரிசனம் செய்யும் சன்னதிக்கு செல்லும் வழியில் அனுமான் ஷேத்ரபாலராக நின்ற கோலத்தில்  ஆந்திரப் மக்களின் வண்ண விருப்பங்களாக கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாக காட்சி தருகிறார் 🙏
  ராஜஸ்தான் காஷ்மீர் ஹரியானா  மத்திய பிரதேசம் என வடநாட்டில் இந்து மத தர்ம சித்தாந்தம் எடுத்து உரைத்த வல்லபாசாரியர் பீடம் உள்ளது .
         ரங்க நாதர் சன்னதி உள்ளது ஆனால் அங்கு நித்ய பூஜை எதுவும் கிடையாது (காரணம் தெரியவில்லை)
    இங்கு  சுற்றுவட்டார பகுதிகளில் கன்று போட்ட  முதல்பாலில் நெய் எடுத்து இங்கு விளக்கு ஏற்றுவது முக்கிய நம்பிக்கை அந்த தீபத்தை நாம் காணுவதும்  மிகவும் சிறப்பானது 🙏

No comments:

Post a Comment