Sunday, 13 December 2020

பழங்களின் ராணி ---மங்குஸ்தான் பழம்🏈🏈

🏈🏈பழங்களின் ராணி ---மங்குஸ்தான் பழம்🏈🏈
             
⚾“பழங்களின் ராணி” என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது.

⚾“பழங்களின் ராணி” என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது. 

⚾ தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், தொற்று நோய் கிருமிகளையும், காளான்களையும் அழிக்கவும் பயன்படுத்தினர். கம்ப்யூட்டரில் வேலை செய்பவர் களுக்கு, கண்கள் வறட்சி அடைந்து எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

⚾மங்குஸ்தான் பழத்தில், எலும்புகளை பலப்படுத்தக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பழம், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாக விளங்குகிறது. எலும்புகள் பலவீனம், எலும்புகள் பலம் குன்றி காணப்படுவது, எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

⚽ வயதானவர்களுக்கு முழங்காலுக்கு கீழே ஏற்படும் பலவீனத்தை, பலப்படுத்துவதற்கு மங்குஸ்தான் உதவி செய்கிறது. கால்களில் ஜீவனற்று இருப்பவர்களுக்கும், இது சிறந்த தீர்வாக இருக்கும். நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்ச்சல், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, உடல் மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.

⚽ வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், தோல் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா மற்றும் வைரசுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. உடல் சூட்டைத் தணித்து, தேகத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சீதபேதி, ரத்தக் கழிச்சல் உள்ளவர்கள், மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடனே குணமாகும்.

🏉மங்குஸ்தான் பழத்தை சுவைத்து சாப்பிட்டு அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து, சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமடையும். கிருமிகளைக் கொல்லும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.

🎱மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை குறைக்க உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment