Sunday, 13 December 2020

ஒருவரி பலன்கள்...

ஒருவரி பலன்கள்...

சூரியன் கெட்டால் அதிகாரம் செய்ய இயலாது..!

சந்திரன் கெட்டால் மனதை கட்டுப்படுத்த இயலாது..!

செவ்வாய் கெட்டால் முயற்சிகள் வீணாகும்..!

புதன் கெட்டால் புத்தி உதவ வேண்டிய நேரத்தில் உதவாது..!

சுக்கிரன் கெட்டால் சுகம் பத்தாது..!

குரு கெட்டால் ஆன்மீகம் சித்திக்காது..!

ராகு கெட்டால் பொருளாசை விடாது..!

கேது கெட்டால் எதிலும் விழிப்புணர்வு கிட்டாது..!

சனி கெட்டால் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காது..!

ராசி பலன்..!

மேஷம்: எதையும் அதிகாரமாக கேட்டு பழக்கம்...!

ரிஷபம்: சூழ்நிலைக்கு ஏற்றாற்போல செயல்பட்டு காரியத்தை சாதிப்பார்...!

மிதுனம்: எல்லோரையும் அனுசரித்து போவார் தன் காரியம் ஆனால் சரி...!

கடகம்: எதையும் உணர்ச்சிகரமாக அணுகுவார்..!

சிம்மம்: எனக்கு என்ன குறைச்சல் எல்லாம் என்னால் இயலும் என்பார்..!

கன்னி: எல்லோரையும் அரவணைத்து செல்வார், எல்லோரும் முக்கியம், அதே நேரத்தில் தன் காரியமும் ஆகணும்..!

துலாம்: உழைக்காமல் மேன்மை பெற இயலாது என்பதை அறிந்தவர்கள்..!

விருச்சிகம்: என்ன கஷ்டமானாலும் சொல்லு நான் ஆறுதல் சொல்கிறேன், ஆனால் என் கஷ்டம் எனக்கு என்னுடன்..!

தனுசு: நான் யார் எனக்கு என்ன தேவை அதுவே என் இலக்கு, மற்றவர் பற்றிய கவலை எனக்கு எதுக்கு..!

மகரம்: எல்லாம் விதிபடிதான் நடக்கும் ஆனாலும் நான் என் முயற்சியில் சற்றும் பின்வாங்க மாட்டேன்..!

கும்பம்: நான் என்ன செய்வேன், எப்படி செய்வேன் யாருக்கும் தெரிய வேண்டாம், எனக்கு தெரிந்தால் போதும்..!

மீனம்: என்னதான் சுகமா படுத்தாலும் இன்னும் கொஞ்சம் வசதியா இருந்தா நல்லா இருக்கும், இதை சொன்ன பேராசை என்கிறார்கள்..!

குறிப்பு: அனைத்தும் பொது பலனே அவரவர் ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகம்/பாவத்தில் சுபர்/அசுபர் தொடர்பை பொறுத்து பலன் வேறுபடும்...!

No comments:

Post a Comment