Tuesday, 12 January 2021

அஸ்தம் நட்சத்திரம்

அஸ்தம் நட்சத்திரம்.

அஸ்தம் சந்திரனின் நட்சத்திரம் புதனின் வீட்டில் இருக்கின்ற ஒரு முழுமையான நட்சத்திரம்.

அஸ்தம் என்றால் அழகு, சாமர்த்தியமான திறமை, எதிலும் ஒரு ஆராய்ந்து பேசக்கூடிய தன்மை (Calculated mind) .

புதனின் ராசியில் இருப்பதால், இயல்பிலேயே இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு ஒரு கூட்டத்துடன் எப்படி தனித்துவமாக தெரிதல், போன்ற உணர்வுகள் இயல்பிலேயே இருக்கும்.

மிதுனத்தில் இருக்கின்ற புதனைப் போல் அல்லாது கன்னி புதன் அதிகமான வியாபார நோக்கத்துடனும், கூர்மையான புத்திசாலித்தனமும் இருக்கும். கன்னி ராசியில் புதன் உச்சம் அடைகிறார். புதன்  உச்சம் அடைதல் முதல் 15 பாகைக்குள் அஸ்த நட்சத்திரம் வந்துவிடும் .இங்கே சுக்கிரன் நீசம் ..இந்த உச்ச நீசத்தில் இன்னொரு விசேஷமான அமைப்பு என்னவென்றால் சரியாக 180-ஆவது டிகிரியில், மீனத்தில், புதன் அங்கே நீச்சம் அடைவார் ரேவதி நட்சத்திரத்தில், சுக்கிரன் அங்கே உத்திரட்டாதியில் உச்சம் அடைவார் இவை இரண்டும் சரியாக 180-ஆவது டிகிரியில் நடைபெறுகிறது.

அஸ்தம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு, பெரும்பாலும் சொந்தத் தொழில் அமைந்துவிடுகிறது. வங்கி சார்ந்த தொழில், ஆராய்ச்சித்துறை, (Biotechnology, biochemistry,microbiology) போன்ற துறைகள் இவர்களுக்கு உகந்தவை. அஸ்தம் சந்திரனின் நட்சத்திரம் என்பதால், உணவு சார்ந்த துறைகளிலும் இவர்கள் இருக்கிறார்கள்.

அஸ்தம் என்பது உள்ளங்கையை குறிக்கும். கூட்டமாக இருப்பது புதனின் தன்மை. அதனால் தனது நட்பு கிரகம் என்று சொல்கிறோம் புதனின் ராசியில் வருவதால் மனித உறுப்புகளில் கைகளை குறிப்பாக உள்ளங்கையை குறிப்பது அஸ்தம் .

லக்னம் அல்லது அதிபதி சந்திரன், லக்னம் விழுந்த புள்ளி அஸ்தம் நட்சத்திர காலில் நின்றால்,நிச்சயமாக அவர்களுக்கு ஆராய்ச்சித்துறை, சாஃப்ட்வேர்,  துறைகளில் வங்கி சார்ந்த துறைகளிலும் எளிதாக வேலை அமைந்துவிடுகிறது.

கேரளாவில் பாலக்காடு பக்கத்தில் அமைந்துள்ள உலவுகோடு அருகில் உள்ள ஒரு அம்பிகை உள்ளங்கையில் தன்னுடைய ரூபமாக அருள்பாலிக்கிறார். அங்கே சென்று அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வழிபடுதல் அவர்களுக்கு நல்ல பரிகாரமாக அமையும்.

இவர்கள் பெரும்பாலும் கொழுப்பு கட்டிகள் போன்ற நோய்களினாலும் சரும நோய்களும் ,இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவன.அஸ்த நட்சத்திரத்தில் பிறந்து கொழுப்பு கட்டிகள் போன்றவற்றினால் அவதியுறுபவர்கள் குருவாயூர் கோவிலில் சென்று சன்னிதானத்தில் இருந்து குன்றிமணியை இரைத்து விடுவதன் மூலம் சிறந்த பரிகாரமாக அமையும்.

இது ஒரு பெண் நட்சத்திரம். பெண் தெய்வ வழிபாடு இவர்களுக்கு நன்மை தரும். குருவின் கர்ம பலனை இவர்கள் அனுபவிப்பதால், புதனின் ராசியில் உள்ள நட்சத்திரமாக அமைவதாலும்,ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுத்தல் அல்லது அவர்களுடைய படிப்பிற்கு ஏதேனும் ஒரு சிறு தொகையை உதவி செய்தல் இவர்களுக்கு ஆகச் சிறந்த பரிகாரம் ஆகும். 

No comments:

Post a Comment