Monday, 11 January 2021

ராம பக்தி....




ராம பக்தி செலுத்துவதில் தன்னை மிஞ்சியோர் யாருமில்லை என உணர்த்தியவர் ராம பக்த அனுமன். இதை உணர்த்தும் விதமாக தன் இதயத்தில் ராமனும், சீதா தேவியும் இருப்பதை தன் நெஞ்சப் பிளந்து காட்டிய அற்புத நிகழ்வு குறித்து இங்கு பார்ப்போம்.
​ராம பட்டாபிஷேகம்:

14 ஆண்டு கால வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராமனின் பெயரில் 14 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த பரதனின் ஆட்சியின் கீழ் மக்கள் எந்த ஒரு குறை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றாலும், ராமன் பட்டாபிஷேக தினத்தில் தான் மக்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியும் ஆனந்தமும் வந்தது.

பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரம்: கிரக தோஷங்கள், பீடைகள் கெட்ட கனவுகள் நீங்க படிக்க வேண்டிய மந்திரம்

வேதங்கள் முழங்க, மங்கல கீதங்கள் இசைக்கப்பட்டு, புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. மக்கள் ஆனந்த மழையில் நனைந்தனர்.

ராமனும், சீதா தேவியும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து நாட்டு மக்களும், முனிவர்களும், தேவர்களும் கூட பூமாரி பொழிந்தனர்.

அனுமனைத் தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களும், பயன்களும் இதோ!


​மகுடம் சூட்டுதல்

ஸ்ரீ ராமனும், சீதா தேவியும் அரியனையில் அமர்ந்திருக்க, ராமனின் பாதத்தில் அடக்கத்தோடு அனுமன் அமர்ந்திருந்தார். அங்கதனோ உடைவாள் ஏந்தியிருந்தார். ராமனுக்கு வெண்கொற்றக் குடையை பரதன் பிடித்திருந்தார். லட்சுமணனும், சத்துருக்கனனும் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.

அனுமனுக்கு வடை மாலை ஏன்…? பரமாச்சாரியாரின் விளக்கம்!

பெரியவர்கள் மகுடத்தை எடுத்து கொடுத்த, ரகு குல குருவான வசிஷ்ட முனிவர் மகுடத்தை ராமபிரானுக்கு சூட்டினார். ஸ்ரீ ராமன் அரசனானதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

சகல மங்கலங்களும் அருளும் அனுமன் ஜெயந்தி விரதம்!


​அனுமனின் உதவியைப் பாராட்டிய ராமன்

தன் காலடியில் இருந்த அனுமனைப் பார்த்து ராமபிரான், ‘உன்னுடைய உன்னத அன்பை நான் எப்படி விவரிப்பேன். உதவி செய்வதில் உன்னைப் போல யாரையும் ஒப்பாக சொல்ல முடியாது. உன்னுடைய அன்பை எதாலும் அளக்க முடியாது. உன்னைப் போல கைமாறு பார்க்காமல் உதவக்கூடியவர் யாரும் இல்லை.

உன் உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன். என் அன்பைத் தவிர விலை உயர்ந்ததை என்னால் தர இயலாது’ என அனுமனை தன் மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்.

ஹனுமானின் வாகனம் ஒட்டகம் என்பது தெரியுமா உங்களுக்கு?... இப்போது எங்கே அந்த வாகனம்... வாங்க தெரிஞ்சிக்கலாம்...


​அனுமனுக்கு பரிசளித்த சீதா தேவி :

அனுமனின் உதவியையும், திறமையையும் பாராட்டி அவருக்கு ஒரு பரிசளிக்கும் விதமாக ஒளி வீசக்கூடிய முத்துமாலை ஒன்றை பரிசாக அளித்தார். ஆனந்தத்துடன் பெற்றுக்கொண்ட அனுமன், முத்துமாலையை ஒவ்வொன்றாகப் பிய்த்து ஒவ்வொரு முத்தாக கடித்து உடைக்கத் தொடங்கினார். இதைப் பார்த்து சபையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ; அப்படி செய்தால் என்ன நடக்கும் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!


​முத்துமாலையில் ஸ்ரீ ராமன்

அனுமனுக்கு பித்துப் பிடித்துவிட்டது என ஒவ்வொருவரும் ஒருவிதமாக பேசத் தொடங்கினர். ஆனால் அனுமன் ஏன் அப்படி செய்தார் என்பதை ராமனுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனின் பக்தியை பறைசாற்ற, அனைவரின் முன்னிலையில் ‘அனுமனே ஏன் இப்படி செய்தாய்?’ என கேட்டார்.



அதற்கு அஞ்சனை மைந்தனோ, ‘பிரபு உங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள சீதா தேவி கொடுத்த முத்து மாலையில் உங்களின் இருவரின் உருவம் இருக்கும் என நினைத்து அதை ஒவ்வொன்றாக உடைத்துப் பார்த்தேன். ஆனால் அதில் ஒன்றில் கூட உங்களின் திரு உருவம் இல்லை. உங்களின் திருவுருவோ, பெயர் சொல்லாத எந்த பொருளும் எனக்கு தேவையில்லை என கூறினார்.



​நெஞ்சைப் பிளந்து காட்டிய அனுமன்

இதைக் கேட்ட சபையில் இருந்தவர்கள், முத்துமாலையை மாசுபடுத்தியதை நியாயப்படுத்த இப்படி ஒரு காரணத்தை சொல்வதாக கூறினர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமனோ, ‘அப்படியானால் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதாக கூறும் நீ, உன்னுள் நானிருப்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா?’ என கேள்வி எழுப்பினார்.

சீதைக்காக மட்டுமா ராமன் ராவணனை கொன்றார்?... உண்மையான காரணம் இதுதான்...

அனுமன் வசமாக மாட்டிக் கொண்டதாக அனைவரும் நினைத்த நிலையில், என்னுள் ஸ்ரீ ராமன் இருப்பதை இப்போதே என நெஞ்சப் பிளந்து காட்டி அதில் ஸ்ரீ ராமனும், சீதா தேவியும் இருப்பதை காட்டினார். அப்போது அனைவரும் அனுமனின் எல்லையற்ற அன்பை கண்டு வியந்தனர்.


​அனுமன் ஜெயந்தி :

ராம பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுமனின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு,கேரளாவில் மட்டும் ஹனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் கூடி வரக்கூடிய சுப தினத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு 2021 ஜனவரி 12 (மார்கழி 28) அன்று ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

பிற மாநிலங்களில் வைகாசி வளர்பிறை, தசமி திதி அன்று அனுமன் ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

அனுமனுக்கு வெண்ணெய், வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்?

அனைத்து வைணவக் கோயில்களில் உள்ள அனுமனுக்கு அன்றைய தினம் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

அனுமனுக்கு பிடித்தவை :

வாயுபுத்திரன் ஆஞ்சநேயர் ஜெயந்தி தினத்தில் பக்தர்கள், விரதமிருந்து துளசி மாலை, வடை மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

1 comment:

  1. ஹனுமனுக்கு பரிசளித்த சீதா தேவி:

    மணி ப்ரவர ஜுஷ்டம் சமுக்தாஹார மநுத்தமம்
    ஸீதாயை ப்ரததெள ராமஸ்"சந்த்ரரஸ்மி ஸமப்ரபம்
    அரஸே வாஸஸீ திவ்யே ஸுபாத்யா பரணாநிச
    அவேஷ மாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸுநவே
    பெளருஷம் விக்ரமோ புத்திர் யஸ்மிந் நேதாநி ஸர்வஸ:
    ததெள ஸா வாயு புத்ராய தம் ஹார மஸிதே௯ஷணா.

    சந்திர கிரகணங்களைப்போல் ஒளிவீசும் ரத்தினங்கள் கலந்த ஒரு முத்தாரத்தை ராமர் ஸீதைக்கு கொடுத்தார். சீதை அந்த முத்தாரத்தை கணவரின் அனுமதியுடன் ஹனுமான் கழுத்தில் போட்டாள். அதோடு இரண்டு உத்தம வஸ்திரங்களையும், அநேக ஆபரணங்களையும் அளித்து கெளரவப் படுத்தினாள்...என்பதே.(சுந்தரகாண்டம் ஸ்லோகம்)

    ReplyDelete