Tuesday, 16 February 2021

மோதிரம் எந்த லக்கினம் எந்த கல்...

அதிர்ஷ்ட ரத்தினம் ராசிக்கு அணிவதா லக்னத்துக்கு அணிவதா என குழப்பம் பலருக்கும் இருக்கும்.புதன் கிரகம்தான் தற்போதைய கலிகாலத்துக்கு வாழ வழிவகை செய்யும் முக்கிய கிரகம் அதாவது புத்தி இருந்தால்தான் வளமுடன் வாழ முடியும் புத்திக்கு அதிபதி புதன்.எனவே மிதுனம் ,கன்னி லக்னத்தில் பிறந்தோர் அவசியம் அணிய வேண்டியது மரகத பச்சைக்கல் பதித்த ஐம்பொன் மோதிரம் ஆகும்.

வெள்ளி மோதிரம் அணியலாமா என கேட்டால் ராசிக்கல் வெள்ளியில் அணியும் அவ்வளவு சிறப்பான பலன் தருவதில்லை.அதனால் ஐம்பொன் மோதிரம் கொடுக்கிறோம்.

இதனை பலருக்கும் செய்து கொடுத்துள்ளேன் .படிப்பதில் தடுமாற்றம் ஞாபக சக்தி குறைவு என குழந்தைகளை நினைத்து வருந்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு மரகதபச்சைக்கல் பதித்த மோதிரம் அணிய செய்வது நல்லது

நான் பல குழந்தைகளுக்கு நல்ல ஜாதிக்கல் வாங்கி ஐம்பொன்னில் பதித்து கொடுத்திருக்கிறேன்...பூஜை செய்து எப்போது எந்த நேரத்தில் அணியனும் என அவர்கள் ஜாதகம் பார்த்து கொடுப்பதால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது

மேசம் ,சிம்மம்,விருச்சிகம் ,தனுசு ,மீனம் லக்னத்தார் புஷ்பராகம்,பவழம் இணைத்து அணியலாம்

ரிசபம் ,துலாம் லக்னத்தார் வைரம் அல்லது ஜிர்கான் கல் அணியலாம்

கடகம் லக்னத்தார் புஷ்பராகம் ,முத்து இரண்டும் இணைத்து அணியலாம்

மகரம் ,கும்பம் லக்னத்தார் மரகத பச்சை அணிவதே சிறப்பு

No comments:

Post a Comment