Wednesday, 31 March 2021

சனிக்கிழமையும்_பெருமாளும்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🍒  #சனிக்கிழமையும்_பெருமாளும்  🍒

⭐ ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🌕 சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.

கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார்.

🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊

“அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சனீஸ்வரன் கேட்டார்.அதற்கு நாரதர், “ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🔥 ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை. தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள். சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!” என்றார்.

அடுத்தநாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள்.

கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன், 

🌺  “சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28-வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.

அதனால்தான் ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன. 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

விஷ்ணு சஹஸ்ர நாமம்".



" போர்க்களத்தில் கிடைத்த புத்திமதி. "

குருஷேத்திரப் போர்முனை.
மாலை நேரம்.
கங்கா புத்திரர் பீஷமர் அம்பு படுக்கையில் தன் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
கர்ணன் போரில் மடிந்துவிட்டான். தாய் குந்திதேவி "என் மகனே போய்விட்டாயா  "என்று உரத்த குரலில் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். கர்ணன் மனைவியும் அழுது கொண்டிருக்கிறாள். சற்று தள்ளி இன்னொரு பெண்மணியும் அழுது புலம்பி கொண்டு இருக்கிறாள். அதைக்கண்ட யுதிஷ்த்திரன் கண்ணனிடம் சென்று "அவள் யார், ஏன் அழுகிறாள்" என்று கேட்கிறான். அதற்கு கண்ணன் " இவள்தான் தர்ம தேவதை. தர்மத்தின் தலைவனான கர்ணன் மறைந்தபின் இந்த பூவுலகில் தனக்கு வேலையில்லை. அதனால் பூமியை விட்டு போவதாக சொல்லி அழுகிறாள்." என்றான்.
யுதிஷ் திரனுக்கு பயம் வந்து விட்டது. தன் நாட்டில் இனி தர்மம் இருக்காதோ? நம் சந்ததியினர் தர்மம் இல்லாத இந்த நாட்டில் எப்படி ஆட்சி செய்ய போகிறார்கள்? என்ற கவலையில் இதற்கு என்ன பரிகாரம் என்று கண்ணனை கேட்க, கண்ணனோ " என்னை கேட்பதை விட ஏதோ அங்கு அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறாரே அந்த பீஷ்மரிடமே கேள் " என்கிறார்.
அப்போது பீஷ்மர் யுதிஷ்திரருக்கு செய்த உபதேசம்தான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் கொண்ட  "விஷ்ணு சஹஸ்ர நாமம்".

மகாபாரதத்தின் 'அனுசாசனிக பர்வ'த்தில் 149 ஆவது அத்தியாயம் இது.' அனுஷ்டுப் ' என்ற சமஸ்கிருத யாப்பிலக்கண முறையில் 107 சுலோகங்களும், அவற்றுக்கு முன் பின்னாக 40 சுலோகங்களும் கொண்டது.
இதை இயற்றிய வேத வியாசர் விஷ்ணுவின் அம்சமாகவே கருதப் படுகிறார்.
" வியாசாய விஷ்ணு ரூபாய, வியாச ரூபாய விஷ்ணவே.. "
என்கிறது விஷ்ணு சஹஸ்ர நாமம்.

பகவத் கீதை கிருஷ்ணன் பகவான் சொன்னது. விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கிருஷ்ணன் பகவானே அருகில் இருந்து கேட்டது. அதனால் கீதையை விட விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மேலானது என்பர்.

இந்த உபதேசம் சத்வ குணவான் பீஷ்மரால், சத்வ குணவான் யுதிஷ்திரருக்கு போதிக்கப் பட்ட சத்வ வழிபாட்டு ஸ்தோத்திரம்.

யுதிஷ்திரன் தன் ஐயங்களை ஆறு கேள்விகளாக பீஷமரின் முன் வைத்து, எவ்வாறு தர்மத்தை மீண்டும் தழைத்து ஒங்க செய்வது என்று வினவுகிறான்.

1. இறைவன் பற்றி கூறும் எல்லா நூல்களிலும் சொல்லப்பட்டுள்ள ஒரே சிறந்த தெய்வம் எது?

2. அதை அடையும் மேலான நிலை என்ன?

3. எந்த தெய்வத்தின் குணாதிசயங்களை புகழ்ந்து பாடினால், தர்மம் தழைத்து மானிடர் நலம் எய்துவர்?

4. எந்த தெய்வத்தை அகத்திலும் புறத்திலும் வழிப்பட்டு முக்தி அடையலாம்?

5. எது எல்லா வழிபாட்டு முறைகளிலும் சிறந்த நெறி?

6. எதனை ஜபித்து மனிதன் பிறவி பெருங்கடலில் இருந்து மீளலாம்?

இந்த ஆறு கேள்விகளுக்கும் பீஷ்மர் அளித்த ஒரே விடை :

" விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் பக்தி செய்தால் நாம் எல்லா துக்கங்களையும் கடக்கலாம்" என்று விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உபதேசிக்கிறார்.

1. விஷ்ணுவின் வடிவத்தை மனதில் நிறுத்து.
2. அவர் திருநாமங்களை வாயாரப் பாடு.
3. விஷ்ணுவை சிரம் தாழ்த்தி வணங்கு.

இதையே தான் ஆண்டாள்
" வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும்.. "
என்கிறாள்.

இந்த 1008 பெயர்களும் விஷ்ணுவின் அனந்த கல்யாண குணங்களை குறிக்கின்றன.

" பேரான், பேராயிரம் உடையான்' பிறங்கு சிறை வண்டு அறைகின்ற,
தாரான், தாரா வயல் சூழ்ந்த சாளகிராமம் அடை நெஞ்சே. "
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

இறைவன் பெயர்களுக்கு அப்பாற்பட்டவன். எந்த பெயர் கொண்டும் அவனை அழைக்கலாம்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் எனப்படும் உரையை முதலில் எழுதியவர் ஆதி சங்கரர். பின்பு ' பராசர பட்டர் ' உரையும் மற்றும் மத்வ பரம்பரை சம்பந்தப்பட்ட ' சத்யசந்தயதி ' போன்ற பன்னிரண்டு உரைகளும் எழுதப் பட்டன.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் சுலோகத்தின் முதல் பெயர் " விஸ்வம் ". நாம் பார்க்கும் இவ்வுலகம்தான் விஸ்வம். இதுவே ஆண்டவன் பெயராக அறிமுகம் ஆகிறது.

இரண்டாம் சொல் " விஷ்ணு ". விஸ்வம் என்ற உலகத்தையும் தாண்டி நிற்பதால் அவன் விஷ்ணு.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் எதிர்மாறு சொற்கள்( oxymoron) அதிகம்:
1. நிமிஷ, அனிமிஷ- கண்களை மூடிய, மூடாத.
2. நைக ரூப, பிருகத் ரூப -ஒன்றானவர், ஒன்றில்லாதவர்.

வைணவர்கள் விஷ்ணுவின் பன்னிரண்டு பெயர்களான கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா,பத்மனாபா, தாமோதரா என்பனவற்றை முறையாக உச்சரித்து கொண்டே உடலின் பன்னிரண்டு இடங்களில் திருமண் காப்பு அணிவதால் அதற்கும் ' நாமம் ' என்று பெயர் வந்தது.

இந்த கருத்தை நம்மாழ்வார் தன் திருவாய் மொழியில் :
" உயர்வற உயர் நலம் உடையவன் எவனவன்,
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்,
துயரறு சுடரடி தொழுதெழு என் மனமே"
 என்கிறார்.

'பலசுருதி' என்பது ஒரு நூலை பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள். விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி கடைசி இருபது சுலோகங்கள் கூறுகின்றன:

1. இம்மை, மறுமையிலும் கெடுதல் அண்டாது.

2. தர்மம், பொருள், காமம், வம்ச விருத்தி உண்டாகும்.

3. ஆரோக்கியம் வாய்க்கப்பெறும்.

4. ஆன்ம சுகம், பொறுமை, மன உறுதி, நினைவாற்றல், புகழ் கைகூடும்.

இந்த நிலையை தான் ஆண்டாள் :

" எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு,
உற்றமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்,
மற்றை நம் காமங்கள் மாற்று "
என்று கண்ணனை வேண்டுகிறாள்.

துளசியின் மஹிமை

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
       🎋சாஸ்திரங்கள் கூறும் 🎋   
                 🌿  துளசியின் மஹிமை:  🌿
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🌿 துளசியின் நிழலும் முக்தியைத் தரும் 

🌿  யமனை ஓதுக்கி விடும்.

🌿 ஜட வாழ்க்கையின் துயரங்களை நீக்கும் 

🌿 துளசியின் நிழல் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் இறப்பில் இருந்து முக்தி கிடைக்கும். 

🌿  எந்த தானத்தாலும் இத்தகைய முக்தியை அடைவது அரிது.

🌿 துளசி வளர்க்கப்படும் வீடு, புனித நீராடும் ஸ்தலம் போல் புனிதமாகிறது.  

🌿 அங்கு யம தூதர்கள் வருவதில்லை.

🌿 ஆயிரம் பாவங்கள் கொண்டவனாக இருந்தாலும், துளசியைக் கையில் வைத்திருந்தவாறு உயிரை விடுபவனை யமனால் காண இயலாது.

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

🌿  1.ஏகாதசி விரதம்   🌿

🌿  2.பகவத் கீதை   🌿

🌿  3.கங்கை நீர்    🌿

🌿   4.துளசியை வாயில் இடல்   🌿

🌿   5.சராணாமிருதம்   🌿

🌿   6.ஹரி நாமம்   🌿
இந்த ஆறும் இறப்போருக்கு முக்தியை அளிக்கும்.
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
( கருட புராணம் ஸரோத்தர 9.6-8, 9.26)
 
         🌿  ஓம் நமோ நாராயணாய  🌿
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Saturday, 27 March 2021

கோவிட் தடுப்பூசி பற்றி விளக்கம்...

காலத்தின் அவசியம் கருதி
அத்தியாவசிய விளக்கம்



கோவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கும் சில நாட்களில் கோவிட் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வருகின்றனவே?

இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது
தடுப்பூசிகள் வேலை செய்வதில்லை என்றா?
தடுப்பூசிகளால் இந்த தொற்று ஏற்பட்டதா?

இது குறித்து எனது
அறிவியல் பூர்வமான விளக்கம்




கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு சில நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டு அதற்குரிய பரிசோதனை செய்தால் கோவிட் பாசிடிவ் என்று சிலருக்கு ஏற்படுகின்றது .

இது குறித்த அறிவியல் பூர்வ விளக்கங்களை அளித்தால் பலரும் புரிந்து கொள்ளக்கூடும்

பொதுமக்களுக்கும் தெளிவாக பல விசயங்கள் சென்று சேரக்கூடும்.

எனது விளக்கத்தை ஆரம்பம் செய்கிறேன்

கோவிட் நோய்க்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கு தடுப்பூசியின் எதிர்பார்க்கப்படும் சாதாரண பக்க விளைவுகளான

காய்ச்சல்
உடல் வலி
தலைவலி போன்ற பக்க விளைவுகள் முதல் 24 மணிநேரங்களுக்குள் தோன்றி அதிகபட்சம் 72 மணிநேரங்களுக்கும் சரியாகி விடும்.

எனவே தடுப்பூசி பெற்றவர்கமிக இருப்பினும் தடுப்பூசி பெற்ற பின் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனே உஷாராகி RTPCR பரிசோதனை எடுக்க வேண்டும்.

காய்ச்சலுடன் இருமல் சேர்ந்தால் இருமடங்கு உஷாராகி மருத்துவர் பரிந்துரையில் சி.டி ஸ்கேன் எடுக்கலாம்.

தடுப்பூசியால் ஏற்படும் சாதாரண பக்கவிளைவுகள் அனைத்தும் பெரும்பாலும் 72 மணிநேரங்களுக்குள் ஆரம்பித்து 72 மணிநேரங்களுக்குள் சரியாகிவிடும்.

கோவிட் நோயை தடுக்கத்தானே தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன? பிறகு எப்படி தடுப்பூசி பெற்றவர்களுக்கும் கோவிட் வருகிறது?

இதற்கு மூன்று அறிவியல் விளக்கங்கள் உள்ளன

1️⃣முதல் விளக்கம்
INCUBATION PERIOD குறித்தது

அதாவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்து/ உடலுக்குள் வந்ததில் இருந்து அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தென்படும் வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் தான்

"Incubation period" எனப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்குபேசன் பீரியட் சராசரி 5 முதல் 6 நாட்கள் அதிகபட்சம் 14 நாட்கள்.

இதன் காரணமாகத் தான் தொற்று கண்ட நபர் இருக்கும் வீடுகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறோம். (QUARANTINE)

இந்த இன்குபேசன் பீரியடில் இருப்பதை நோய் அறிகுறி தோன்றும் வரை அந்த நபரே அறிய இயலாது.

ஒருவர் தடுப்பூசியை வெள்ளிக்கிழமை பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்

அவர் அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை
நண்பர்களுடன் ஒரு கெட் டுகெதர் கலந்து கொண்டு அங்கு கொரோனா தொற்றை பெற்று விட்டால் 

அப்போதிருந்து இன்குபேசன் பீரியட் ஆரம்பமாகும். 

அவருக்கு ஆறாவது நாள் கொரோனா தொற்றின் அறிகுறிகள் தோன்ற காத்திருக்கின்றன என்றால் சனிக்கிழமை காய்ச்சல் அடிக்கும். 

ஆனால் அவர் வெள்ளிக்கிழமை தடுப்பூசி பெற்றிருக்கிறார். 

அடுத்த நாளான சனிக்கிழமை தோன்றும் காய்ச்சல் 
தடுப்பூசியின் சாதாரண பக்கவிளைவால் தோன்றியதா? அல்லது கொரோனாவால் தோன்றியதா? என்பதை எப்படி அறிவது?

தடுப்பூசியின் பக்கவிளைவால் தோன்றியதாக இருந்தால் தடுப்பூசி பெற்ற மூன்று நாட்களுக்குள் சரியாகிவிடும் 

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட அறிகுறியாக இருந்தால் காய்ச்சல் மூன்று நாட்கள் கடந்தும் தொடரும் கூடவே இருமல் தோன்றும். உடனே சுதாரிக்க வேண்டும். 

இது தடுப்பூசியால் ஏற்பட்டதன்று.  மாறாக நாம் ஏற்கனவே பெற்ற தொற்றின் அறிகுறி என்று உணர வேண்டும். உடனே பரிசோதனை செய்து சிகிச்சை எடுக்க வேண்டும். 

2️⃣இரண்டாவது விளக்கம் 

 TIME PERIOD TO REACH MAXIMUM EFFICACY 

கோவிட் நோய்க்கு தடுப்பூசி எடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று ஏற்படுகின்றதென்றால் தடுப்பூசிகள் ஏன் நோயைத் தடுக்கவில்லை???

இந்தியாவில் தற்போது வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிகளான 

கோவேக்சின் 
கோவிஷீல்டு ஆகிய இரண்டில் 

கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் பெற்று அதற்குப்பிறகு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் பெற்று அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே முழு எதிர்ப்பு சக்தியை தரும் நிலையை அடைகின்றது 

கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை 
முதல் டோஸ் பெற்ற 22 நாட்களுக்குப்பிறகு தான் முழு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது.  இன்னும் இரண்டாவது டோஸ் போடப்பட்டு 14 நாட்கள் கழித்தே ஆய்வுகளில் சிறந்த எதிர்ப்பு சக்தி கிடைப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி போட்ட அடுத்த நாளில் இருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்து விட்டது என்று நம்பி மாஸ்க் இல்லாமல் கூட்டங்களில் கலந்து கொண்டால் தொற்றைப்பெறும் வாய்ப்பு அதிகம். 

3️⃣மூன்றாவது விளக்கம் 

INTRINSIC EFFICACY VARIABILITY 

இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்கள் - கழித்தும் கூட சில மருத்துவர்களுக்கு அறிகுறிகளுடைய கொரோனா தொற்று வந்துள்ளதே ? அதைப்பற்றி தங்களின் கருத்து 

இதற்கு என்னுடைய விளக்கம் 

கோவிஷீல்டு தடுப்பூசியின் அறிகுறிகளுடைய நோய் தடுக்கும் திறன் 70% 
கோவேக்சின் தடுப்பூசியின் அறிகுறிகளுடைய  நோய் தடுக்கும் திறன் 
 80% 

அதாவது கோவிஷீல்டு போடப்பட்ட நபருக்கு 70% தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகின்றது 

கோவேக்சின் போடப்பட்ட நபருக்கு 80% தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகின்றது

ஆயினும் எந்த தடுப்பூசியும் 100% நோய் தடுக்கும் திறனுடன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

கோவிஷீல்டு போடப்பட்டவருக்கும் கூட அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட 30% வாய்ப்புண்டு 

கோவேக்சின் போடப்பட்டவருக்கும் கூட அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட 20% வாய்ப்புண்டு 

ஆனால் இதுவரை நடந்த ஆய்வு முடிவில் 
 கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு தீவிர கொரோனா ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தி. 

எனவே தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு  
அறிகுறிகளற்ற கொரோனா ஏற்படலாம். 

போட்டுக்கொண்ட சிலருக்கு அறிகுறிகளுடைய கொரோனாவும் ஏற்படலாம். 
இருப்பினும் பெரும்பான்மை சமூகத்தை அதிலும் VULNERABLE மக்கள் தொகையை தீவிர கொரோனா நோயில் இருந்தும் 
மரணங்களில் இருந்தும் காக்கும் தன்மை தற்போதைய தடுப்பூசிகளுக்கு உண்டு என்பது தற்போது வரை கிடைத்துள்ள ஆய்வு முடிவுகளின் மூலம் கிடைக்கும் உண்மை. 

ஆகவே மேற்கண்ட காரணங்களால் தான் தடுப்பூசி பெற்ற மக்களிடையேவும் சாதாரண கோவிட் நோய் ஏற்படுகின்றது. 

4️⃣நான்காவது விளக்கம்

கோவிட் தடுப்பூசிகளால் தொற்று ஏற்படுத்த இயலாது ? ஏன்? 

கோவிஷீல்டு என்பது சிம்பன்சி இனத்தில் ( மனிதக்குரங்கு) சாதாரண சளி இருமலை உருவாக்கும்  அடினோ வைரஸை வாகனமாக உபயோகித்து அதில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரத மரபணுக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டது. 

இத்தகைய டெக்னாலஜியை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி மற்றும் ஆஸ்ட்ரா செனிகா இரண்டும் மெர்ஸ் கோவி 2012இல் வளைகுடா நாடுகளில் (middle east respiratory syndrome  - MERS COv)  காலத்திலேயே ஆய்வு செய்து வைத்தது. 

அதன் பயனை தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசியாக அறுவடை செய்ய முடிகின்றது. 

அந்த டெக்னாலஜியின் முக்கிய அம்சமே சிம்பன்சி அடினோ வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் பல்கிப்பெருக இயலாது என்பது தான். எனவே கோவிஷீல்டு தடுப்பூசி மூலம் கோவிட் நோய் உருவாக இயலாது. 

கோவேக்சின் தடுப்பூசியைப் பொறுத்தவரை அதன் டெக்னாலஜி- கொரோனா வைரஸ்களை வளர்த்தெடுத்து அவற்றை அதன் அங்கங்கள் சிதையாதவாறு கொன்று
(Inactivating ) அந்த வைரஸ்களின் பிரேதங்களைத் தான் வேக்சினாக செலுத்துகிறோம்.  எனவே கோவேக்சினாலும் கோவிட் நோயை உருவாக்க இயலாது.

TAKE HOME MESSAGES 

💉கோவிஷீல்டு / கோவேக்சின் தடுப்பூசிகளால்  கோவிட் நோயை உருவாக்க இயலாது 

💉 தடுப்பூசி பெற்ற 24 மணிநேரங்கள் முதல் 72 மணிநேரங்களுக்குள் ஏற்படும் காய்ச்சல் தலைவலி போன்றவற்றை தடுப்பூசிகளின் சாதாரண பக்கவிளைவுகள் என்று கொள்ளலாம் 

💉 தடுப்பூசி பெற்று 72 மணிநேரங்களுக்குப் பிறகும் காய்ச்சல் தொடர்ந்தாலோ இருமல் நீடித்தாலோ உடனே RTPCR பரிசோதனை செய்ய வேண்டும். 

💉 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையேவும் அறிகுறிகளற்ற / அறிகுறிகளுடைய கொரோனா ஏற்படும் வாய்ப்பு உண்டு. 

💉 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீவிர கொரோனா ஏற்படும் வாய்ப்பு குறைவு ஆயினும் தொற்றுப்பரவலை தடுக்க தடுப்பூசி பெற்றவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

💉 45+ வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி பெற்றுக்கொண்டு தீவிர கொரோனாவை தடுத்துக்கொள்ள வேண்டும். 

💉 கொரோனா தடுப்பூசி குறித்த இந்த விளக்கம் உங்களுக்கு பயனுள்ளதாய் இருப்பதாகக் கருதினால் அதை இன்னும் பலருக்கு அனுப்பி அவர்களும் தடுப்பூசிகள் குறித்து தெரிந்து கொள்ள உதவுங்கள் 

ஹைஜீனிக் லைஃப்

🌹🌹'ஹைஜீனிக் லைஃப் ஃபாலோ' பண்ணுங்கனு சொல்றாளே ? அது என்ன பாட்டி ?

நகத்த வளர்க்கக்கூடாது அது பீடை, 
தலைமுடிய  விரிச்சுப் போடக் கூடாது அது தரித்திரம். நகத்துல, தலைமுடியிலனு பாக்டீரியா நிறைய இருக்கும். அதனால நகத்த வெட்டி, தலைமுடிய பிண்ணிண்டு, மஞ்சள் தேய்ச்சு குளிச்சு, கற்பூரம், சாம்பிராணி போல கிருமிநாசிகள பயன்படுத்தி, வீட்டு வாசல்ல சாணி போட்டு மெழுகி,  மஞ்சள் தண்ணி, கோமியம்னு தெளிச்சு, நல்ல சத்துள்ள சாப்பாட்ட சாப்டறதுதான் ஹைஜீனிக் லைஃப்டா செல்லம்.

இந்த வைரஸ், பாக்டீரியாலாம், அந்த காலத்துல இருந்துதா பாட்டி ?

ஏன் இல்லாம ? கால காலமா இருக்கே ? இதையெல்லாம்தான் மூதேவினு சொன்னா ? நியமப்படி வாழலேன்னா மூதேவி வருவான்னு சொன்னா.  இப்ப நம்ம அப்படி வாழாதனாலதான் மூதேவி கொரானா வைரஸ்ங்கற பேர்ல வந்து நிக்கறா.

'குவாரண்டைன்னா' என்ன பாட்டி ?

பொம்னாட்டீங்க தூரமாயிட்டா, அவாள தனியா ஒரு அறைல மூனு நாள் இருக்க வெச்சிடுவா, அந்த டைம்ல பாக்டீரியா தொத்து அதிகமா இருக்கும், அது அவாளுக்கும் நல்லதில்ல, மத்தவாளுக்கும் நல்லதில்ல, சொல்லப் போனா மாசா மாசம் அவாளுக்கும் ஒரு 'ரிலாக்சேஷன்' கிடைக்கும். 
ஆத்துல யாராவது செத்துப் போயிட்டா, யாரு காரியம் பன்றாளோ, அவா காரியம் முடிஞ்சதும், சுப ஸ்வீகாரம்கற ,'க்ளீனிங் பிராஸஸ்' நடந்து முடியற வரைக்கும்  ஆத்த விட்டு வெளிய போகக் கூடாது. பத்திய ஆகாரம்தான் சாப்பிடனும். ஏன்னா 13 நாள்ள ஏதாவது வைரஸ் கிருமி இருந்தாலும் அது அழிஞ்சிடும். வெளிய போனா அவாகிட்ட இருக்கற கிருமி மத்தவாளுக்கு போயிடும். இதெல்லாம்தான் வெள்ளைக்காரன் பாஷைல 'குவாரண்டைண்'டா கொழந்த.

'சோஷியல் டிஸ்டென்சிங்'னா என்ன பாட்டி ?

சுத்த பத்தமா இருந்தாதான் ஷேமமா வாழ முடியும்,  நமக்கும் நல்லது, மத்தவாளுக்கும் நல்லது.  இப்படி இப்படி இருந்தா, நோய் தொத்தாதுனு சில 'பேராமீட்டர்ஸ்' வெச்சிருந்தா. அது தான் குல ஆச்சாரம், நியமம்னு பேரு. அந்த நியமத்த :ஃபாலோ' பண்ணாதவாளோட நெருக்கமா பழகுனா நமக்கும் நோய் தொத்திண்டிடும். அததான் தீட்டுனு சொன்னா,  தீட்டுங்கறததான் வெள்ளைக்காரன் பாஷைல 'சோஷியல் டிஸ்டன்சிங்க்'னு பேஷனா சொல்லிக்கறோம்.

பாட்டி அப்ப எல்லாத்தையுமே அந்த காலத்திலயே தெரிஞ்சு வெச்சிருந்தாளா ?

தெரியாம என்னடா கொழந்த ? அவாளுக்கு தெரிஞ்சதுல கொஞ்சமாவது நாம தெரிஞ்சு வெச்சுண்டாலே போதுமே ? 

இஷ்டப்படி வாழ்ந்து நோய் வந்து, நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கறதுல நாம பிஸியா இருக்கறோம், நியமப்படி ஆச்சாரமா வாழ்ந்து, நோயே வராம தற்காத்துண்டு, அந்த காலத்துல ரிலாக்ஸ்டா அவா இருந்தா !! அதுதான் வித்யாசம். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🌹🌹

Thursday, 25 March 2021

வாகன விபத்தைத் தவிர்க்கும் துதிகள்

வாகன விபத்தைத் தவிர்க்கும் துதிகள்;

நெடுந்தூரம் வாகனத்தில் செல்லக் கிளம்புபவர்கள் குலதெய்வத்தை வணங்கி,கீழ்க்கண்ட துதிகளை உச்சரித்து விட்டு கிளம்பினால் மீண்டும் வீடு திரும்பும்வரை..எந்த இடையூறுகளும்,ஆபத்துகளும் இல்லாமல் க்டவுள் காப்பார்!!

ஓம் நமோ அங்காரகாய ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ அங்காரகாய ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ அங்காரகாய ஓம் நமோ வாகனாய

ஓம் நமோ குஜாய ஓம் நமோ வாகனாதிபதியே’
ஓம் நமோ குஜாய ஓம் நமோ வாகானாதிபதயே
ஓம் நமோ குஜாய ஓம் நமோ வாகானாதிபதயே

ஓம் நமோ மங்களாய ஓம் நமோ ராகவே
ஓம் நமோ மங்களாய ஓம் நமோ ராகவே
ஓம் நமோ மங்களாய ஓம் நமோ ராகவே

பங்குனி உத்திரம்

28.3.2021 ஞாயிறு 

பங்குனி உத்திரம் ஸ்பெஷல் !!

பங்குனி உத்திர நாளில் இந்திய  தேசத்திலுள்ள புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியிலுள்ள எட்டு புனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக  
ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

இந்த நாளில் ஸ்ரீ வேங்கடவனை சேவிப்பதும், புனித நீராடுவதும் சிறப்பானவை.

அதுமட்டுமா!

வைணவ தென்கலைப் பிரிவின்  
மஹா ஆசார்யரான ஸ்ரீராமாநுஜர் பெருமாளைத் தொழுது சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம்,  
ஸ்ரீரங்க கத்யம் என்ற மூன்று வசனக் கவிதைகளைப் பாடியதால் 'உடையவர்' என்ற பதவியை திருமாலிடமிருந்து பெற்றார்.

இந்தப் பதவியை ஸ்ரீராமாநுஜர் பெற்ற நாள் பங்குனி உத்திரம்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் 'சேர்த்தி வைபவம்' நடைபெறுவதும் இந்த நாளில்தான்.

ஸ்ரீரங்கநாத பெருமாள் - ரங்கநாயகி தாயார் ஊடல் கொண்டு சண்டையிட்டுக் கொள்வதும், பின்னர் இணைவதும் இந்த நாளின் விசேஷம்.

இந்த வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கத்தைப் போலவே இந்த நாளில் காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், மலையாள நாச்சியார் மற்றும் பெருந்தேவித் தாயார் சமேதராக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

இந்த வைபவம் பங்குனி உத்திரத்தன்று மட்டும்தான் நடைபெறுகிறது.

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பனிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரமாகும்.

நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தை செய்யும்போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த நன்னாளில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வங்களின் திருமணங்கள் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்கு சென்று பெருமாள் ஸ்ரீராமர் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய நாளாக பங்குனி உத்திர நாள் விளங்குகிறது.

விரதம் இருப்பது எப்படி?

பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம்.

பங்குனி உத்திரம் என்பதால் விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.

ஆனால் வயதானவர்கள் மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம்.

எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம்.

பங்குனி உத்திரத்தன்று காலையில் ஸ்நான சங்கல்பம் செய்து கொண்டு விரதத்தை தொடங்கி விட வேண்டும்.

மாலையில் பெருமாள் முருகன், சிவன்,கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும்.

பெருமாள் தாயார் அபிஷேகம் பாருங்கள் மற்றும் சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை பாருங்கள்.

வீட்டில் இருந்து கூட பூஜை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து சிறிய அளவில் முடிக்கலாம்.

இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும்.

பிறகு ஒரு ஸத் பிராம்மண தம்பதியினரை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாத பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து தஷிணை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும். பெருமாள் தாயாரை திருமண கோலத்திலும் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமணக்கோலத்திலும் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

அன்று இரவு முழுவதும் ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் சிவபுராணம், ஸ்கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம்.

வயதானவர்களுக்கு மட்டும் துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.

மற்றவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.

மேலும், 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

பலன்கள் :

பங்குனி உத்திர நாளில் நம்மால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.

இந்த நாளில் திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தால் எப்பேர்ப்பட்ட திருமண தடை நீங்கி திருமணம் கூடி வரும்.

அப்படி கூடா விட்டாலும் வருடா வருடம் நடைபெறும் ஸ்ரீ லஷ்மி நாராயண கல்யாணம் மற்றும் ஸ்ரீ நிவாச திருக்கல்யாணம் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணத்தை தொடர்ந்து பார்த்து கொண்டே வாருங்கள்.

கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.

கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையையும் பெற முடியும்.

உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்

மேலும் நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம்.

எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.  முருகன் கோயில்களான அறுபடை வீடுகளிலும் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.

முருக பக்தர்கள்அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முகப்பெருமானை வணங்க வேண்டும்.

அன்று முழுவதும் ஸகந்த சஷ்டி கவசம்,  
திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் ஸ்கந்த குரு கவசம் போன்ற நூல்களை படிக்கலாம்.  
  
பணியில் உள்ளவர்கள்  
‘ஓம் சரவணபவாய நம’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.

இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும். அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள்,  உடல்,நலம் பாதிக்க பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை  செய்து இரவு கண் விழித்து காலையில் ஸ்நானம் செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

அருகில் உள்ள எந்த கோவிலில் விரதத்தை ஆரம்பித்தீர்களோ அதே கோவிலில் முடித்து கொள்ளுங்கள்

அன்று ஸ்ரீராமர் கோவில் முருகன் கோவில் சிவன், பெருமாள் கோவிலிற்கும் தாராளமாக செல்லலாம்.

கல்யாண வரமளிக்கும் இந்த நாளில்தான் திருமகள் விரதமிருந்து  திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள். அதைப்போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள்.

பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில்  பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான்.  
எனவே, இந்த நாள் லஷ்மி கடாட்சமாக விளங்குகிறது.

உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் இந்த நாளில் களையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான்.

அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு சிறப்படையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில்தான்.

மங்களங்கள் யாவும் பொங்கிப் பெருகும் இந்த இனிய பங்குனி உத்திர நாளில் ஊரெங்கும் திருவிழாக் கோலமாகக் காணப்படும். தெய்வத் திருமணங்கள், திருவுலாக்கள், திருவிளக்கு பூஜை, தீர்த்தவாரி, தேர்த்திருவிழா என தமிழகம் முழுக்க இந்த நாளில்தான் பல விசேஷங்கள் காலம் காலமாக நடைபெறுகின்றன.

பங்குனி உத்திர நாளில் நீர் மோர் பானகம் வழங்குதல், விரதமிருத்தல், தெய்வத் திருமணங்களை தரிசிப்பது,  அன்னதானம் செய்வது போன்றவை மிகப்பெரும் புண்ணியத்தைத் தரும்.

சிவ - சக்தி; ஶ்ரீராமர் - சீதை;  
முருகப் பெருமான் - தெய்வானை; ஆண்டாள் - ஸ்ரீரங்கமன்னார்;  
அகத்தியர் - லோபாமுத்திரை;  
ரதி - மன்மதன்;  
இந்திரன் - இந்திராணி;  
நந்தி - சுயசை;  
சாஸ்தா - பூரணை, புஷ்கலை;  
சந்திரன் - 27 நட்சத்திர மங்கையர் என அனைத்துத் திருமணங்களும் பங்குனி உத்திர நன்னாளில்தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Saturday, 20 March 2021

தூக்கம்

தேங்காய் எண்ணெய் கால் பாதங்களில் இரவில் படுக்குமுன் தடவுங்கள்.
கசகசா வை பொடியாக்கி பாலில் கலந்து குடித்துவிட்டு உறங்கச்செல்லுங்கள். காலையில் நீங்கள் அலாரம் சத்தம் கேட்டால் தான் விழிப்பீர்கள்
தொப்புளில் இரண்டுசொட்டு தேங்காய் எண்ணெயய் இடனும்என்ன வந்தாலும் கவலை விட்டுவிடு. உடம்பு வலிக்க தினமும் உழைத்துபார்கவும் தூக்கம் வரும்.தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்... புத்தகம் படியுங்கள்... நல்ல நண்பர்களுடன் பேசுங்கள்... தியானம் செய்து மனநிறைவு பெறுங்கள்... தனிமையை தவிருங்கள்... வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து மகிழுங்கள்... வெளியூருக்கோ, குலதெய்வம் கோயிலுக்கோ சென்று வாருங்கள்...
என்றும் உங்களுடன்...

கரிநாள்_என்பது_என்ன?:-

#கரிநாள்:-
#கரிநாள்_என்பது_என்ன?:-

கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” ஆகும்.

கரிநாள் தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.

நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. 

கரிநாள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை.  தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் கரிநாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். 

#உதாரணமாக சித்திரை மாதம் 06, 15 ஆகிய நாட்கள் கரிநாட்கள் ஆகும்.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன.

இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபசெயல்கள் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி, ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல. 

#கரிநாட்களின்_விபரம்:-

சித்திரை - 06, 15
வைகாசி - 07, 16, 17
ஆனி - 01, 06
ஆடி - 02, 10, 20,
ஆவணி - 02, 09, 28,
புரட்டாசி - 16, 29,
ஐப்பசி - 06, 20,
கார்த்திகை - 01, 10, 17,
மார்கழி - 06, 09, 11,
தை - 01, 02, 03, 11, 17,
மாசி - 15, 16, 17,
பங்குனி - 06, 15, 19.

இந்த நாட்கள் 60 தமிழ் வருடத்திற்கும் பொருத்தம் தமிழ் தேதி மாறவே மாறாது.

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.


Friday, 19 March 2021

அற்புத நிகழ்வான 60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்?

ல்யாணம், நம் இல்லத்தில் உள்ளவர்கள்  மட்டும் அல்லாமல்  நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி மகிழும் தருணம். ஆனால், அதில் இருந்து இன்னும் மேம்பட்டவிதமாக,  தங்களுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து  திருமணம் செய்துவைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம். தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', 'சஷ்டியப்த பூர்த்தி' என்றெல்லாம் சொல்வார்கள்.    

இந்த நிகழ்வானது 60  வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும்போது நடத்தப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? ஒரு  மனிதரின் பிறந்த தமிழ் மாதம், தேதி, நட்சத்திரம், வருடம் இவையனைத்தும் அவருடைய 60-வது வயது நிறைவு பெற்றதற்கு அடுத்த நாள் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் 60  வருடங்கள்  ஆன பிறகுதான் வரும். அதாவது 120 -வது வயதில்தான். நடைமுறையில் இது சாத்தியம் இல்லை.

ஒருவர் தன்னுடைய குடும்பத் தேவைகளுக்காக பணத்தை சம்பாதிக்கக் கடுமையாக உழைக்கிறார். மேலும் சம்பாதித்த பணத்தை எப்படி சேமிப்பது, தன் குடும்பத்துக்கு எப்படி ஆக்கப்பூர்வமான முறையில் சேமிப்பது, பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றை எப்படி சிறப்பாக அமைத்துக்கொடுப்பது என்கிற சிந்தனையிலேயே காலத்தைக் கடத்திவிடுகிறார்.  

இப்படி 60  வயது வரை தனது கடமைகளை எல்லாம் நிறைவேற்றிய பிறகு, சாதாரண வாழ்க்கையில் இருந்து  விடுபட்டு முழுமையாக தன்னை ஆன்மிகச்  செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளும் வயதாக இந்த 61-ம் வயது பார்க்கப்படுகிறது. 

தங்களின் நலனுக்காக உழைத்த தாய்-தந்தையரின் மனம் மகிழும் வண்ணமாகவும் நன்றி பாராட்டும் விதமாகவும் அவர்களது பிள்ளைகள்

எல்லாம் சேர்ந்து, இந்த மணவிழாவை நிகழ்த்துவார்கள். 

பெரும்பாலும் அறுபதாம் கல்யாணம், கோயில்களிலேயே நடத்தப்படுகிறது.பல்வேறு ஹோமங்களும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. அதிதேவதைகளுக்கு பூரண கும்பங்கள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன .மேலும் கலச பூஜையும் செய்யப்படுகின்றது. தங்கள் வசதிக்குத்  தகுந்தவாறு கலசங்கள் முறையே 16, 32, 64  எண்ணிக்கையில் வைத்து பூஜிக்கப்படுகின்றன.    

பூஜை முடிந்ததும், கலசங்களில்   பூஜிக்கப்பட்டு இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. மணமக்களின் பாதங்களில்  விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது. 

மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வருவோர் அனைவருமே மணமக்களின் மீது கலச நீரை ஊற்றி, ஆசீர்வாதம் பெறலாம்.

மணமக்களும் தங்களிடம் ஆசீர்வாதம் பெற்றவர்களுக்கு  சேலை, ஜாக்கெட், மஞ்சள், மாங்கல்யச் சரடு போன்ற பொருட்களை தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு வழங்குகின்றனர். இத்திருமண  நிகழ்வைக் காண்பது என்பது சொர்க்கத்தைக் காண்பது போன்றது என்பதாலேயே பலரும் இத்திருமண வைபவத்தில் தவறாமல் கலந்துகொள்வார்கள். 

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரில் உள்ள சிவாலயத்தில்தான்  அறுபதாம் கல்யாணம் அதிக அளவில் நடைபெறுகிறது. அங்கு செல்ல முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும்  இடங்களுக்கு அருகாமையில் உள்ள  ஆலயங்களில் செய்துகொள்ளலாம்.

அறுபதாம் கல்யாணம் செய்வதென்பது,ஒரு  மனிதன், தான் இதுவரை தனக்கு  அளிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும், இதுநாள்வரையிலும் யாருக்கும்  ஏதேனும் தெரிந்தோ, தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது.

தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும்   தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது

Wednesday, 17 March 2021

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்.

Tuesday, 16 March 2021

சோம்பின் மருத்துவப் குணங்கள்.:

சோம்பின் மருத்துவப் குணங்கள்.:

நாம் சமையலில் பயன்படுத்தும் சோம்பில் பலவித மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளது. 

👉 பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

👉 சோம்பு, ஈரல் நோயைக் குணமாக்கும் ஒரு இயற்கை மருந்தாகும். சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேன் கலந்து தினந்தோறும் இரு வேளைகளிலும் 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

👉 வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் சரியாகும்.

👉 சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் மற்றும் வறண்ட இருமல் போன்றவை குணமாகும்.

👉 சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

👉 சோம்பின் சூடான கசாயம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கினை கட்டுப்படுத்துகிறது.

👉 சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

👉 சோம்பிற்கு எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மையுண்டு. எனவே உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

👉 அதிகளவு குளிர் காய்ச்சல் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

👉 சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு  தினந்தோறும் வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

காரடையான் நோன்பு விளக்கம்

காரடையான் நோன்பு விளக்கம்
==============================

காரடையான் நோன்பிற்கும் யமனுக்கும் உள்ள சம்மந்தம் என்ன என இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

சத்தியவான் சாவித்திரி பற்றிய கதை மார்கண்டேய முனிவரால் கூறப்பட்டது. இங்கே மார்க்கண்டேயரை நினைவில் வையுங்கள். திரௌபதிக்கு பதிபக்தி பற்றி விவரிக்க சாவித்திரி பற்றி எடுத்துரைக்கிறார். எமனிடம் இருந்து சாவித்திரி சத்தியவானின் ஆன்மாவை திரும்ப பெற்றாள். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக கார அடை செய்து எமனுக்கு படைத்தாள் என்கிறது கதை.

ஜோதிட விளக்கம்

மாசிமாதம் என்பது கும்ப மாதம். கும்பம் என்றால் கலசம் அதாவது மறைபொருள் அல்லது மறைத்து வைக்கப்பட்ட பொருள்கள் கொண்ட ராசி எனவும் கூறலாம். மேலும் பித்ருக்களை குறிக்கும் மகம் இருக்கும் சிம்ம ராசிக்கு சப்தமத்தில் இருக்கும் ராசி கும்பம். இது எமலோகம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இருளை குறிக்கும் சிவராத்திரி, மயான கொள்ளை மற்றும் காரடையான் நோன்பு ஆகியவை கொண்டாடப்படுகிறது.

மாசி மாதத்தில் சூரியன் கும்பத்தில் இருக்கும். பங்குனி மாதம் தொடங்கும் போது சூரியன் மீனராசியில் இருக்கும். சூரியன் மாசியிலிருந்து பங்குனி செல்வதற்குள் இருக்கும் காலகட்டமே காரடையான் நோன்பு. இதை இன்னும் தெளிவு பெற கூறவேண்டுமானால், சதய ராசி மண்டலத்திலிருந்து பத்ரா ராசி (பூர்வ பத்ரா பாதா/பூரட்டாதி) மண்டலத்திற்குள் சூரியன் செல்லும் காலம். ஆக சதயம் இங்கே முக்கியமான நட்சத்திரமாக கவனிக்கப்படுகிறது. 

சதயம் (சதாபிஷா) என்பதன் பொருள் நூறு மருத்துவர்கள் என்பதாகும். மூலிகைகள் ஆன வட்டவடிவான வட்டவடிவமே சதய நட்சத்திர வடிவம். இங்கே கார மற்றும் வெல்லத்தால் ஆன வட்டவடிவ அடைகள் என்பதை சதய வடிவாக கொள்ளலாம். அதுபோல சதய நட்சத்திரத்தின் அதிதேவதை எமதர்மன் என்பதும் குறிப்பிட்டதக்கது. இதை தொடர்புபடுத்தி பார்க்கும் போது சதய நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கையில் விரதம் மேற்கொண்டு சதய நட்சத்திர அதிதேவதை எமனிடமிருந்து சத்தியவானை மீட்டு, அவருக்கு சதய வடிவான கார மற்றும் வெல்ல அடைகளை படைத்து நன்றி செலுத்தும் நாளே காரடையான் நோன்பு. 

இந்த கதையை வர்ணிக்கும் மார்கண்டேய முனிவரும் சதய நட்சத்திர அதிதேவதை எமதர்மனிடமிருந்து மீண்டவர் என்பது இங்கே தொடர்புபடுத்தி பார்க்கலாம். 

ஆகவே அதிதேவதை வழிபாடுகளை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் பரிந்துரை செய்ததே அர்த்தமுள்ள நோன்புகள் மற்றும் பண்டிகைகள்.

தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼  *தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼 தீர்க சுமங்கலி பவா.....! 
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!

🌼 இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம். 

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு 

⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Monday, 15 March 2021

மதில் சுவர் வாஸ்து

🪔

🏛️ வாஸ்து தகவல் :

வீட்டின் சுவர், தாய் சுவர் என்று அழைக்கப்படும் Mother wall.

மதில் சுவர் | என்பது தந்தை சுவர் என்று அழைக்கப்படும் (Father Wall )

மதில் சுவரானது, வெளியிலிருந்து வரும் தாக்கங்களை தாங்கிக்கொண்டு, ஒரு பாதுகாப்பு அரணாக நம்மை பாதுகாக்கும் .

வீட்டில் நான்கு புறமும் சரியான அளவுகளில் காலியிடம் வீடு கட்டுவது சிறப்பு.

ஒரு வீட்டின் மதில் சுவர் மற்றொரு வீட்டில் மதில் சுவருடன் ஒட்டக் கூடாது.  யாருடனும் கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. அது தந்தையை பகிர்ந்து கொள்வது போல் ஆகிவிடும்.

தாய் சுவரும், தந்தை சுவரும் எந்த இடத்திலும் தொடக்கூடாது. அதாவது, இரண்டு பக்கம் அல்லது மூன்று பக்கம் மதில் சுவர் அமைத்துவிட்டு ஒருபகுதியை தாய்சுவருடன் இணைக்க கூடாது.

மதில் சுவர் அமைப்பு சதுரம் செவ்வகம் ஆக மட்டுமே இருக்க வேண்டும்.

மதில் சுவர் என்ன உயர அளவுகளில் அமைக்க வேண்டும் என்ற சில அளவுகள் உள்ளது, அதன்படி அமைப்பது சிறப்பு.

நாயுருவிச் செடி...



பொருளாதாரம் உயர:-


ஞாயிற்றுக்கிழமையும், பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று, அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி அதைக் கையில் வைத்துக்கொண்டே, சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து, பின்னர் வெள்ளைநிறப்பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.



Saturday, 13 March 2021

பாட்டி சொல்லுவாள்

*பாட்டி சொல்லுவாள்*

1நீரால் கோலம் போடாதே
2நெற்றியைக் காலியாய் விடாதே
3குச்சியைக் கொளுத்தி வீசாதே
4இரவில் ஊசியை எடுக்காதே

5கால் மேல் காலைப் போடாதே
6காலையில் அதிகம் தூங்காதே
7தொடையில் தாளம் போடாதே
8தரையில் வெறுதே கிடக்காதே

9மலஜலம் அடக்கி வைக்காதே
10நகத்தை நீட்டி வளர்க்காதே
11ஆலயம் செல்லத் தவறாதே
12அதிகமாகப் பேசாதே

13எண்ணெய் தேய்க்க மறக்காதே
14சந்தியில் நீயும் உண்ணாதே
15விரிப்பைச் சுருட்ட மறக்காதே
16பகலில் படுத்து உறங்காதே

17குளிக்கும் முன்பு புசிக்காதே
18ஈரம் சொட்ட நிற்காதே
19நாமம் சொல்ல மறக்காதே
20நல்ல குடியைக் கெடுக்காதே

21தீய வார்த்தை பேசாதே
22நின்று தண்ணீர் குடிக்காதே
23எதையும் காலால் தட்டாதே
24எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

Thursday, 11 March 2021

போதாயன அமாவாசை என்றால் என்ன?

போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது. போதாயனரின் கணக்குப்படி, அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி, அன்றைய சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து, துவிதியை துவங்கி, வானில் சந்திரப்பிறையும் தெரியும் எனக் கணக்கிட்டால், அமாவாசையின் முதல்நாளான சதுர்த்தசி அன்றே பிதுர்க்கடனை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். அதுவே போதாயன அமாவாசை. ஆபஸ்தம்பரின் கணக்குப்படி பிதுர்க்கடன் செய்யும் போது அமாவாசை திதி இருக்க வேண்டும் என்பது கருத்து. இதைப் பின்பற்றுபவர்கள் அமாவாசை திதியிருக்கும் அன்றே பிதுர்க்கடன் செய்கிறார்கள்

Wednesday, 10 March 2021

போர்டிக்கோக்கள் வாஸ்து



🏛️ வாஸ்து தகவல் :

தற்காலத்தில் நாகரீக போக்காக கருதி அமைக்கப்படும் போர்டிக்கோக்கள் அமைக்கும் பொழுது பலசூட்சமங்களை பயன்படுத்தி அதை அமைக்க வேண்டும். அப்படி சரியாக அமைக்காவிட்டால் அழகுக்காக அமைத்த போர்டிகோ ஆபத்தாக முடிந்துவிடும்.

வீட்டின் எந்த திசைகளிலும் வேண்டுமானாலும் போர்டிகோ அமைத்துக் கொள்ளலாம். அதற்கென சில அளவுகள் உண்டு.

வீட்டில் தாய் சுவற்றில் "ட "போன்ற வெட்டுப்பட்ட அமைப்பில் போர்டிகோ அமைப்பது தவறாகும்.

பிரமிடு வடிவ , கூம்பு வடிவ , அரைக்கோள வடிவ ,சரிவான வடிவில் அமைக்கக்கூடாது.

போர்ட்டிகோ வீட்டுக்கு வரும் சூரிய ஒளியைத் தடுக்கும் வண்ணம் அமைக்கக் கூடாது.

வீட்டில் மேற்கூரை மட்டத்தில் அமைத்துக் கொள்வது சிறப்பு.

போர்டிகோவில் முடிந்த அளவு தூண்கள் வராமல் அமைப்பு அமைத்துக் கொள்வது சிறப்பு.


கிரக ஷட் பலம்

ஷட் வலு

 

 கிரக ஷட் பலம் என்பது கிரகங்களின் வலிமையை ஆறு விதங்களில் கணக்கிட்டு அவற்றில் அதிக வலிமையான கிரகம் எது, மிகவும் வலிமை குன்றிய கிரகம் எது என்பதை கண்டறிவது ஆகும். "ஷட்" என்றால் "ஆறு" என பொருள்படும். "பலம்" என்றால் "வலிமை" எனப் பொருள்படும். "ஷட் பலம்" என்றால் "ஆறு வித வலிமை" எனப் பொருள்படும்.

பராசரர் சோதிட முறையில் பாவங்களின் வலிமை அஷ்டக வர்க கணிதம் மூலமாகக் கணக்கிடப்படுகிறது. ஷட் பல கணக்கீடு ராகு, கேதுக்களுக்கு கிடையாது. மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே உண்டு. கீழ்க்கண்ட ஆறு விதமான பலங்கள் கிரகங்களின் ஷட் பலம் எனப்படுகிறது.

ஸ்தான பலம்
திக் பலம்
கால பலம்
சேஷ்ட பலம்
நைசார்கிக பலம்
த்ருக் பலம்.
ஏழு கிரகங்களுக்கு ஷட் பலம் கணக்கிட்டு, கிரகங்களை, அவைகளின் வலிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது வழக்கம். அதில் அதிக வலிமையுடைய கிரகத்திற்கு முதலிடம் வழங்கப்படும். மிகவும் வலுக்குன்றிய கிரகத்திற்கு கடைசி இடமான ஏழாமிடம் வழங்கப்படும். ஷட் பலத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கிரகங்கள் சாதகத்தில் அதிக வலிமையுடைய கிரகங்களாகும். மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களைப் பிடித்த கிரகங்கள் சராசரி வலிமையுடைய கிரகங்களாகும். ஆறு, ஏழாமிடங்களைப் பிடித்த கிரகங்கள் மிகவும் வலுக்குன்றிய கிரகங்களாகும்.

ஷட் பலத்தால் அதிக வலிமை பெற்ற கிரகங்கள் தங்கள் தசா-புக்தி காலங்களில் அனுகூலமான பலன்களைத் தரும். 

ஷட் பலத்தால் வலுக்குன்றிய கிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்வதன் மூலம் அந்தக் கிரகங்களை வலிமைப்படுத்தலாம். வலுக்குன்றிய கிரகங்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் பிறரிடமிருந்து தானமாகவோ, இலவசமாகவோ பெறக்கூடாது. ஆனால் ஜாதகர் பிறருக்கு அப்பொருட்களை தானமாகவோ, இலவசமாகவோ கொடுக்கலாம்.

ஷட் பல கணிதம் செய்வதற்கு அதிக கவனமும், ஈடுபாடும், அதிக கால அவகாசமும் தேவைப்படும்..

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். ஷட் வலுவில் அதிக வலுவுடன் இருக்கும் கிரகம். அதனுடைய தசா புக்தி.ஜாதகருக்கு யோகம் செய்யும் நிலையிலிருந்தால் மிகுந்த யோகத்தை செய்யும் ..ஷட் வலுவில் அதிக வலிமை பெற்ற கிரகமே ஒருவரின் குணாதிசயங்களை சொல்லக்கூடியதாக. அமையும்.

எடுத்துக்காட்டாக ஒருவருக்கு செவ்வாய் அதிக வலுவுடன் இருக்கும் ஆனால், இயல்பிலேயே ஜாதகர் தைரியசாலி போராட்டத்தை சந்திக்கக் கூடியவர். எத்தகைய சூழ்நிலையிலும் போராட்ட குணம் இருக்கும்.


பசுவும்_புண்ணியங்களும்



பசுவும்_புண்ணியங்களும்

🐂 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை in தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

🐂பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால்  பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

🐂பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

🐂 பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.

🐂பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது.  இது மிக புண்ணியமான காலமாகும்.

🐂பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது  8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

🐂" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

🐂பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

🐂மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் ,  எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

🐂ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை.  அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

🐂உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

🐂கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்...

மகாபெரியவா சரணம்

Sunday, 7 March 2021

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*


 
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*

*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*

*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*

*குளியல் = குளிர்வித்தல்*

*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*

*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*

*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*

*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*

*வெந்நீரில் குளிக்க கூடாது.*

*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*

*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*

*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*

*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*

*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*

*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*

*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*

*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*

*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*

*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*

*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*

*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*

*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*

*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*

*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*

*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*

*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*

*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*

*குளித்தல் = குளிர்வித்தல்*

*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*

*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*


நவகிரகங்கள் ஏற்படுத்தும் நோய்களும் எளிய பரிகாரங்களும



நவகிரகங்கள் ஏற்படுத்தும் நோய்களும் எளிய பரிகாரங்களும             

 நமது வாழ்க்கை ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைப் பொறுத்துத் தான் அமைகிறது என ஜோதிடம் கூறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் மோசமாக இருந்தால் அவரின் வாழ்க்கை பாழாகிவிடுகிறது. அது சரியாக, சிறப்பாக இருந்தால், அது வறுமையில் இருப்பவனைக் கூட ஒரு ராஜாவாக்குகிறது. இதில் சிறப்பு விஷயம் என்னவென்றால், ஜாதகத்தில் மோசமான கிரக நிலையை சரியாக கண்டறிந்து நிவாரணமாக பரிகாரம், எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வதால் அதிலிருந்து பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
    


ஆரோக்கிய ஜோதிடம் : நமது வாழ்க்கை ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைப் பொறுத்துத் தான் அமைகிறது என ஜோதிடம் கூறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் மோசமாக இருந்தால் அவரின் வாழ்க்கை பாழாகிவிடுகிறது. அது சரியாக, சிறப்பாக இருந்தால், அது வறுமையில் இருப்பவனைக் கூட ஒரு ராஜாவாக்குகிறது. இதில் சிறப்பு விஷயம் என்னவென்றால், ஜாதகத்தில் மோசமான கிரக நிலையை சரியாக கண்டறிந்து நிவாரணமாக பரிகாரம், எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வதால் அதிலிருந்து பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
​சூரியன் மோசமாக அமைந்தால் என்ன நோய் ஏற்படும்?

sun related diseases astrology: நவகிரகங்களின் தலைவனான சூரியக் கடவுள் ஒவ்வொரு கிரகத்தின் பின்னால் சக்தியாக இருக்கிறது. சூரியன் ஒருவருக்கு மோசமாக அமையும் போது, எலும்புகள் மற்றும் கண்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதய நோய், காசநோய் மற்றும் செரிமான அமைப்பில் நோய்கள் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.

இப்படி சூரிய கிரகம் பிரச்னை தரும் போது அவர்கள் அதிகாலையில் எழுந்து சூரியனை வணங்குதலும். சூரிய நமஸ்காரம் செய்யலாம். கோதுமை கஞ்சியை உணவாக எடுத்துக் கொள்ளலாம். செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கவும்.



​சந்திரன் தரும் நோய்கள் : Moon Planets and Diseases
-moon-planets-and-diseases
ஜாதகத்தில் சந்திரனின் குறைபாட்டுடன் இருக்கும் போது, அந்த நபருக்கு மனநோய்கள், மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நபர் தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

இப்படி சந்திரனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் இரவில் சந்திரனை வணங்கலாம். குறிப்பாக ஒவ்வொரு பெளர்ணமி அல்லது ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இது தவிர, சிவனை வணங்குதலும், வெள்ளி மோதிரம் அல்லது வெள்ளி சங்கிலியையும் அணியலாம். இது லாபகரமானதாக அமையும்.



செவ்வாய்க் கிரகம் தரும் நோய்கள்: Mars ​Planets and Diseases
-mars-planets-and-diseases
ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாய் கிரகம் பிரச்சினையைத் தரக்கூடியதாக இருந்தால் அந்த நபருக்கு இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் செவ்வாய் ரத்தத்தைக் குறிப்பவர். அதுமட்டுமல்லாமல் இரத்தம் மற்றும் விபத்து சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது. இது உயர் மற்றும் தாழ்ந்த இரத்த அழுத்தத்திற்கும் காரணமாக அமைகிறது.

இதற்கு தீர்வாக செவ்வாய்க்கிழமைகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சாப்பிடுங்கள். கட்டிலுக்கு பதிலாக தரையில் தூங்குவது நல்லது. முருகப்பெருமானை வணங்கி வருவது நல்லது.




​புதன் கிரகம் ஏற்படுத்தும் நோய்கள் : Mercury ​Planet and Diseases
-mercury-planet-and-diseases
ஜாதகத்தில் புதன் கிரகத்தின் குறைபாடு இருந்தால், அது அந்த ஜாதகதாரருக்கு வாழ்க்கையில் தோல் பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனெனில் புதன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறிக்கிறது. புதன் கிரக பிரச்னையால் தொற்று நோய்களும், காது-மூக்கு மற்றும் தொண்டை நோய்களுடன் தொடர்புடையது.

இதிலிருந்து நிவாரணம் பெற பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கீரைகள் உணவில் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளுங்கள். காலையில், வெறும் வயிற்றில் துளசி இலைகளை வாயில் நன்றாக மென்று சாப்பிடுவது நல்லது. புதன் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும் நன்மை பயக்கும்.



வியாழன் (குரு) கிரகம் தரும் நோய்கள்: Jupiter ​Planets and Diseases
-jupiter-planets-and-diseases
ஒருவரின் ஜாதகத்தில் குரு கிரகம் பிரச்னை தருவதாக இருந்தால் அந்த ஜாதகர் கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம். புற்றுநோய், ஹெபடைடிஸ் மற்றும் கடுமையான வயிற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இதிலிருந்து நிவாரணம் பெற, காலையில் குளிக்கும் போது சிறிதளவு மஞ்சள் கலந்து தண்ணீரில் குளிக்கலாம். குடிக்கும் நீரில் கூட சிறிது உணவில் சேர்க்கும் மஞ்சள் போட்டு குடிக்கலாம். ஆள்காட்டி விரலில் தூய தங்க மோதிரத்தை அணிந்துகொள்ளலாம். இது லாபகரமானதாக இருக்கும். மேலும், மஞ்சள் பொட்டை தவறாமல் வைத்துக் கொள்ளவும். விஷ்ணு சஹஸ்திரநாமத்தை படிப்பது புனிதமானது.


​சுக்கிர கிரகம் மோசமாக அமைந்தால்: Venus Planet Disease
ஜோதிடத்தின் படி, சுக ஸ்தானத்தின் அதிபதியாக சுக்கிரன் விளங்குகிறார். உடலின் வேதிப்பொருட்களை ஒழுங்குபடுத்தக் கூடியவர். ஆனால் சுக்கிர கிரகமே மோசமாக அமையும் போது ஹார்மோன்கள் பிரச்னைகள் மற்றும் நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது கண்களையும் பாதிக்கிறது.

இதிலிருந்து நிவாரணம் பெற, மதிய உணவில் தயிர் சாதம் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி, சர்க்கரை மற்றும் மைதாவை குறைந்தபட்சம் சாப்பிடுங்கள். நிச்சயமாக விடியற்காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.



​சனி கிரகம் தரும் குறைபாடு : Sani ​Planets and Diseases
ஜோதிடத்தின் படி, ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், பல வகையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட ஜாதகத்தைக் கொண்டவர்கள் நீண்டகால நோய்களால் அவதிப்பட வாய்ப்பு உள்ளது. இது நரம்பு மண்டலம் மற்றும் வலியைத் தரக்கூடிய நோய் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சனி தோஷம் உள்ளவர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். உடலை சிறப்பாக பராமரிப்பது அவசியம். இவர்கள் சாத்விகமான உணவை அதாவது எப்போதும் எளிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: வழிபடும் முறைகள்

இவர்கள் இருக்கும் இடத்தில் வாழ காற்றோட்டமான மற்றும் சுத்தமான வீடாக இருக்க வேண்டும். இரும்பு வளையம் கையில் அணிந்து கொள்ளலாம். காலையில் 9 மணிக்குள் சிறிது நேரம் அரச மரத்தின் கீழ் உட்கார்ந்து வரவும்.

ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் பிரச்னைகள் : Rahu Ketu ​Planets and Diseases
ஒரு நபரின் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் மோசமாக இருந்தால், பல வகையான பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். ராகு மர்ம நோய்களைத் தருபவர் என்று கூறப்படுகிறது. இந்த நோய்கள் ஆரம்பத்தில் சிறியவையாக பாதிப்பு குறைவாக இருந்தாலும் பின்னர் தீவிரமாகக் கூடியதாக இருக்கும். அதோடு நோய்களுக்கான காரணம் பெரும்பாலும் சரியாக புலப்படாததாக இருக்கும்.

ராகு கேது தோஷங்கள் விலக எளிய வழி இதோ - இயற்கையே உங்களை வாழ்த்தும்...

ராகு கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற, சந்தனத்தை அதிகம் பயன்படுத்துங்கள். சந்தனத்தின் வாசனையை எப்போதும் நீங்கள் நுகர்வது நல்லது. கழுத்தில் ஒரு துளசி மாலை அணிந்து கொள்ளுங்கள். எப்போதும் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரகாசமான நீல நிறத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

கேது கிரகத்தின் குறைபாடு இருந்தால், அந்த பிரச்னை ஏற்படக்கூடிய காலத்தில் தினமும் காலையில் குளிக்க வேண்டும். தொடர்ந்து ஆன்மிக செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும்.


Saturday, 6 March 2021

கோவிலில் வாசற்படியை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும்

கோவிலில் வாசற்படியை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பது பற்றிய பதிவுகள் 

கோவில் செல்லும் அனைவருக்கும் மனதில் எழும் ஒரே கேள்வி கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்லவேண்டுமா? இல்லை படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் இன்றும் அனைவரின் மனதில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த குழப்பத்தை பற்றி முழு விவரத்தையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவில் மூலம் தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

*கோவில் செல்லும் முன் எப்படி செல்ல வேண்டும்:*

கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் கோவிலுக்கு அருகாமையில் ஏதேனும் தண்ணீர் குழாய்கள் கண்டிப்பாக இருக்கும். கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். குறிப்பாக கை, கால்களை கழுவிய பிறகு ஒரு சொட்டு நீரை தலையில் தெளித்து கொள்ளவேண்டும்.

அடுத்து கோவிலுக்குள் செல்லும் முன்பு அங்குள்ள கோவில் கோபுரத்தையும், கலசத்தையும் வணங்கி விட்ட பிறகுதான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். அடுத்து கோவிலில் இருக்கும் துவாரபாலகரின் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

கோவிலுக்கு செல்லும் முன் அனைவரும் கோவில் படிக்கட்டை குனிந்து வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவத்தின் இடையில் தொட்டு அழுத்த வேண்டும். இப்படி செய்வதால் நாம் கோவிலுக்குள் சென்றதும் நமது பாதத்தின் வழியே கோவில் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் செயல்பட தூண்டும்.

*கோவில் வாசல்படிக்கட்டை எப்படி கடக்க வேண்டும்:*

கோவிலில் குறுக்கே இருக்கும் வாசற்படியை நாம் தாண்டித்தான் செல்ல வேண்டும். கோவில் படியை தாண்டி செல்வதால் நமது மனதில் இருக்கும் கவலைகள், கெட்ட விஷயங்கள், எதிர்மறை எண்ணம் அனைத்தையும் வெளியில் விட்டு செல்வதாக ஐதீகம் கூறுகிறது. அதாவது நமது பிரச்சினைகளை தாண்டி செல்கிறோம் என்று பொருள்.

*வாசற்படியை மிதித்து சென்றால் என்ன அர்த்தம்:*

கோவில் படிக்கட்டை தாண்டாமல் மிதித்து சென்றால் மனதில் உள்ள பிரச்சனைகளை கூடவே கோவிலுக்குள் அழைத்து செல்வதாக ஐதீகம் கூறப்படுகிறது
 
கோவிலில் தினந்தோறும் அர்ச்சகர்கள் கூறும் மந்திர ஒலி, நாதஸ்வரம், மேள சத்தங்கள் போன்றவை கோவிலில் நிறைந்து இருக்கும் 

இதனால் கோவில் வாசற்படியை மிதித்து செல்லாமல் பக்தர்கள் கட்டாயமாக தாண்டித்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்

Friday, 5 March 2021

கோவைக்காய்...!

அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட கோவைக்காய்...!

கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன்  ஏற்படுகிறது.

சிறுநீரக கற்கள் தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது.
 
வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல்  பிரச்சனை தீரும். 
 
உடல் எடை உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை  உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
 
சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக  வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.
 
கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும். இதயம் ஒரு வயதிற்கு மேலே அனைவருக்கும்  உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்டுகிறது. 
 
இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில்  ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. 
 
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான  இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

வேப்ப எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.;

வேப்ப எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.;

வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை  தினமும் முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும்.

வேப்ப எண்ணெய்யில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.

வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது.

வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.

சில சொட்டு வேப்ப எண்ணெய்யை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

உடல் உறுப்புகள் அட்டவணை



விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும். பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும். பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது. இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம். இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம். இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும். இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Wednesday, 3 March 2021

அனுமன் வாயு பகவான்...!!! அனுமன் வழிபாட்டு ரகசியம் இதுதான்!!


அனுமன் வாயு பகவான்...!!! அனுமன் வழிபாட்டு ரகசியம் இதுதான்!!

நம் உடலில் 5 விதமான வாயுக்கள் உள்ளன. அவை பிராணவாயு , சமான வாயு , அபான  வாயு, உதான வாயு மற்றும் வியான வாயு. இதில் பிராண மற்றும் சமான வாயுக்கள் முதலில் உடலை விட்டு பிரிகின்றன . இந்த 2 வாயுக்களும் பிரிந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார் . ஆனால் உடல் மட்டும் இன்னும் வளையும் தன்மையுடன் இருக்கும் . இன்னும் சில மணி நேரங்களில் அபானா மற்றும்  உதானா வாயுக்கள் உடலை  விட்டு பிரிகின்றன . இப்போது உடலின் வளையும் தன்மை நீங்கி கட்டை போல் ஆகின்றது .ஆனால் உடலை பாதுகாக்கும் தன்மை கொண்ட வியான வாயு பிரிய சில நாட்கள் எடுத்துக்கொள்ளும். வியான வாயுதான் இறுதியாகப் பிரிவது . இது முழுவதுமாகப் பிரிவதற்கு பொதுவாக 11 ல் இருந்து 14 நாட்கள் வரை  எடுத்துக் கொள்கிறது அதனால் தான் இறப்பு சடங்குகள் அந்த நாட்கள் வரை நீட்டிக்கபடுகின்றன . ஒருவித புரிதலிலிருந்துதான் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன . ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த சடங்குகள் சரியான புரிதல் இல்லாதவர்களால், சரியான அனுபவம் இல்லாதவர்களால்  செய்யப்படுவதால் இந்த சடங்குகள் அதன் தன்மையை இழந்து வருகின்றன. 

வாயுக்களால் ஆன நம் உடல் காற்றடைத்த பையடா என சித்தர்களால் சொல்லப்படுகிறது..வாயு வெளியேறினால் நாம் வெறும் சதைப்பிண்டம்தான்..அந்த வாயுக்களின் அம்சமாகவும், அனுமனை கண்டு வழிபடுகிறோம்..!!   வாலில் மணி கட்டிய அனுமன் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்...மற்ற படங்கள் ஆகாது!!

Tuesday, 2 March 2021

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. 

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி 
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி 
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.



அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.

ஓர் ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்று தெரியுமா?



ஓர் ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்று தெரியுமா?


லட்சணமான பெண் வேண்டும் என்று சொல்லும் ஒரு ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்று தெரியுமா? இது சாமுத்திகா லட்சணத்தைக் கொண்டு தான் சொல்லப்படுகிறது. சாமுத்ரிகா லட்சணம் என்பது அங்கங்களைக் கொண்டு ஒருவரின் குணங்களைக் கூறுவதாகும்.


உதாரணமாக, ஒரு ஆணுக்கு மூக்கு கூர்மையாக இருந்தால், வாய் சிறியதாக இருந்தால் எப்பேற்பட்டவர்களாக இருப்பர் என்பதாகும். இங்கு ஓர் ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


தலை
ஒரு ஆணுக்கு தலை பெரிதாகவோ, உயர்ந்தோ இருந்தால், அவர்களிடம் செல்வம் கொட்டும். அதுவே பின் பகுதி புடைத்து இருந்தால் நல்ல அறிவாளி. தலையில் உள்ள நரம்புகள் புடைத்து இருந்தால் தந்திரமானவர்கள்.


நெற்றி
நெற்றி நன்கு அகலமாகவும், உயர்ந்தும் இருந்தால், அவர்களிடம் அறிவும், செல்வமும் அதிகம் இருக்கும். சிறிய நெற்றியைக் கொண்டவர்கள் சற்று புத்தி மழுங்கியவர்களாக இருப்பர். அதுவே நெற்றியில் ரேகைகள் தெரிந்தால் அவர்களிடம் அதிர்ஷ்டம் அதிகம் உண்டு. ரேகைகள் இல்லாவிட்டால் ஆயுள் குறைவாக இருக்கும்.



கண்கள்
ஒரு ஆணுக்கு கண்கள் அகலமாகவும், சிவப்பாகவும் இருந்தால், அவன் உலகையே ஆளும் திறன் கொண்டிருப்பான். அதுவே சிறிய கண்ணோ கொண்டிருந்தால், அவர்களிடம் அறிவும், ஆற்றலும் சற்று குறைவாக இருக்கும்.


மூக்கு
கூர்மையான மூக்கைக் கொண்ட ஆண்கள் செல்வம், பதவி, புகழ் என்று இருப்பார்கள். சிறிய மூக்கைக் கொண்டவர்கள் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர். அதுவே மூக்கின் நுனிப்பகுதி பெரியதாக வீங்கி இருந்தால், அவர்கள் நல்ல சிந்தனையாளர்கள் மற்றும் செல்வந்தர்களாக இருப்பர்.


வாய்
ஒரு ஆணிண் வாய் சிறியதாக இருந்தால், அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாக, புத்திசாலியானவர்களாக, புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். அதுவே வாய் பெரியதாக அகன்று இருந்தால், வெறும் வாய்ப்பேச்சு மட்டுமின்றி, எப்போதும் மற்றவரிடம் குற்றம் காண்பவர்களாக இருப்பார்கள்.



நாக்கு
நீளமான நாக்கைக் கொண்ட ஆண், நல்ல பேச்சாளராக இருப்பான். நாக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் சொல்வதெல்லாம் பலிக்கும். நாக்கு சிவப்பாக இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்.


பல்
பற்கள் சிறியதாகவும், வரிசையாகவும் இருந்தால், கல்வியில் சிறந்தவர்களாக இருப்பர். கூர்மையான பற்களைக் கொண்டிருக்கும் ஆணுக்கு கோபம் அதிகம் வரும். ஒருவேளை பற்கள் வரிசையாக இல்லாமல் முன்னும், பின்னும் இருந்தால், தந்திரமானவர்களாக இருப்பர்.


உதடு
உதடுகள் சிறியதாகவும், சிவப்பாகவும் இருந்தால் நல்ல அந்தஸ்து மற்றும் அதிகாரம் அவர்களிடம் நிலைத்து இருக்கும். ஒருவேளை உதடு கருமையாக, தடித்து இருந்தால் அவர்கள் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.



கன்னங்கள்
கன்னங்களின் மேல் பகுதி உயர்ந்து இருந்தால், சுயநலமிக்கவர்களாக இருப்பர். சிரிக்கும் போது அல்லது பேசும் போது கன்னங்களில் குழி விழுந்தால், செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டமிக்கவர்களாகவும் இருப்பர். ஒருவேளை கன்னங்கள் மிகவும் பரந்து, தசைப்பகுதி மிக்கவர்களாக இருந்தால், நல்ல ஆட்சியாளராகவும், செல்வந்தராகவும் இருப்பர்.


தாடை
ஒரு ஆணின் தாடை நீளமாக இருந்தால், சிறந்த பேச்சாளராக இருப்பர். அதுவே தாடையில் முடி நன்கு அடர்த்தியாக வளர்ந்தால், அவர்கள் சற்று சுயநலமிக்கவர்களாக இருப்பர்.


காது
ஒரு ஆணின் காதுமடலின் மேல் பகுதி அகலமாக இருந்தால், அதிக கோபம் வரும். அதுவே சிறிய காதுகளைக் கொண்டிருந்தால் சாந்தமானவர்களாக இருப்பர்.


தோள்பட்டை
ஒரு ஆணுக்கு தோள்பட்டைகள் உயர்ந்து இருந்தால், அவரிடம் செல்வம் கொழிக்கும். சமமாக இருந்தால் அறிவானவர்களாக இருப்பர். அதுவே தாழ்ந்து இருந்தால் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாக இருப்பர். தோள்பட்டையில் ரோமங்களைக் கொண்டவர்களாக இருந்தால், நினைக்கும் எந்த காரியத்திலும் வெற்றி காண முடியாது.


கைகள்
முழங்கால் வரை நீளமான கைகளைக் கொண்ட ஆண்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் மற்றும் நல்ல கல்வியறிவைக் கொண்டவர்களாக இருப்பர். குட்டையான கைகளைக் கொண்ட ஆண்களை நம்பக்கூடாது. கைளில் நீளமான ரோமங்கள் கொண்டிருந்தல் அவர்களை செல்வம் தேடி வரும்.


விரல்கள்
நீளமான விரல்களைக் கொண்ட ஆண்களுக்கு கலை ஆர்வம், காம இச்சை அதிகம் இருக்கும். விரல்களுக்கு இடையே அதிகப்படியான இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கையின் நான்கு மூலைகளும் சம அளவு உயரத்தில் தட்டையாக இருந்தால் நல்ல பதவியில் இருப்பர். உள்ளங்கையில் குழி அதிகம் விழுந்தால் ஆயுள் காலம் மிகவும் குறைவு.


மார்பு
ஒரு ஆணுக்கு மார்பு பகுதி அகலமாகவும், நல்ல தசைப்பிடிப்போடும் இருந்தால், தான் இருக்கும் இடத்தில் நல்ல புகழ் பெற்றவனாக இருக்கும். மார்பு பகுதியில் ரோமம் இல்லாவிட்டால் நல்லதல்ல. அதுவே ரோமம் அதிகம் இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும்.


உயரம்
ஒரு ஆண் உயரமாக இருந்தால், அது நல்ல ஆளுமைக்கான அடையாளம். ஒரு உயரமான ஆண் நல்ல உடல் பாகங்களுடன் இருந்தால், அவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள். அதுவே குட்டையான ஆண்களுக்கு காம உணர்வு அதிகம். மேலும் அவர்கள் புத்திசாலி மற்றும் தந்திரமானவர்கள்.