அக்னி மூலையும்., அடுக்களை அறையும்.
.....................................
வாழ்க்கையின் இன்றிமையாத ஒரு பாகம் தான் உணவு உண்பது.
ஒவ்வொரு ஜீவ ராசிகளுக்கும் பெரும்போராட்ட சம்பவம் அது,
மனுஷ்ய ஜீவன் மட்டும் தான் சமைப்பதற்காக சமையலறை உண்டாக்கினான்,
சமையலறையில் சமைக்கும் உணவுகளுக்கும் மனுஷ்ய குணங்களுக்கும்ம், நிறைய சம்பந்தம் உண்டு,
சமைக்கும் சமையலாளியின் சமைக்கும் போது ஏற்படும் மனோநிலை சமைத்த பக்ஷணங்களில் கண்டிப்பாக காணப்படும்,
சமைக்கும் ஸ்தலம்,
சமையலாளியின் அப்போதைய மனோநிலை,
சமைக்கும் பொருட்கள்,
சமைப்பவர் கைப்புண்ணியம் போன்றவை தான்
அந்த பக்ஷணங்களை சாப்பிடும் மனுஷ்யன்மார்களுக்கு,
சாத்வீக குணம்,
தாமஸ குணம்,
ராக்ஷஸ குணம் போன்றவற்றை
உருவாக்கும்,
பாரதீய ஸாஸ்திரத்தின் படி அக்னிமூலை யில் மட்டுமே சமையல் செய்ய வேண்டும்
தென் கிழக்கு மூலையில்,
இல்லையென்றால் குடும்ப அங்கத்தவர்களுக்கு ஸரீர. உபத்ரவங்கள்,
மனோ நிலையில் மாற்றங்கள் கண்டிப்பாக. ஏற்படுத்தும்,
முன்பு காலங்களில் தென்கிழக்கு மூலையில் மட்டுமே பாசகம் செய்யப்பட்டிருந்தது,
அன்றைய காலகட்டத்தில்
வீட்டிற்கு, தென்னை ஓலை, வைக்கோல் போன்றவற்றை கொண்டு தான் கூரை மேய்வர்,
அப்படியிருக்கும் காலகட்டத்தில்
"தெக்கன் காற்று "
தென்கிழக்கு திக்கில் இருந்து
ஒரு காற்று வந்து அடுக்களை கூரையில் தீ பிடித்து வீடே எரிந்து விடும்,
அப்போது பல குடும்பங்களில் அடுக்களை அறை வடகிழக்கு பாகத்தில் மாற்றப்பட்டது
இப்போது ஓலைவீடுகள் இல்லாததால் மறுபடியும் அக்னி மூலைக்கு அடுக்களை வந்தது.
வடகிழக்கு மீன கூறில்(இராசியில்)
வாஸ்துபுருஷன் தலையும்,
தென்மேற்கு மூலை கன்னி கூறில் (கன்னி இராசியில்)
நைருதி பாகத்தில் வாஸ்து புருஷன் கால் பாதமும் நிலை கொண்டுள்ளது.
அதனால் தான் வடகிழக்கு திசையிலும்,
தென்மேற்கு திசையிலும் அடுக்களை அறை வைக்க கூடாது, என்றனர்,
வளர்ந்து வரும் நாகரீக காலகட்டத்தில்
அடுத்த தலைமுறையில் அடுக்களைகள் இருக்காது.
அனைவரும் உணவகங்களில் வாங்கித்தான் உண்பர்.
No comments:
Post a Comment