Thursday, 22 April 2021

திருமாங்கல்ய கயிறு மாற்ற வழிமுறைகள்...

திருமாங்கல்ய கயிறு மாற்ற வழிமுறைகள்...

திருமாங்கல்யம்- 16 செல்வங்களும் அளிக்கக்கூடிய மங்கலப்பொருள், 

கயிறு நல்லதா அல்லது செயின் நல்லதா என்றால்: கயிறு
ஏன் கயிறு: 16 திரிகளை ஒன்றாக இணைத்தே தாலி கயிறு செய்கிறார்கள், 16 திரிகளும் 16செல்வங்களை குறிக்கும் ஆகவே தமிழ் முறைப்படி கயிறே உகந்தது, 

உதந்த நாள்: வளர்பிறை தசமி மற்றும் பஞ்சமி திதி நாள் 

உகந்த நேரம்: சூரிய உதயத்திற்கு முன்

ஒரேநாளில் 3திதி, 3 நட்சத்திரம் வரும் நாட்களில் எந்நேரமும் மாற்றலாம்...

வழிமுறை:

1)திசை: வடக்கு அல்லது கிழக்கு பார்த்து அமரவேண்டும்

2)இடம் : பூஜை அறை

3)குளித்து முடித்து, 
4) பஞ்சகவ்யத்தை எடுத்து ஒரு டம்ளரிலோ பஞ்சபாத்திரத்திலோ ஊற்றி கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்
5) கிழக்கு அல்லது வடக்கு திசைபார்த்து அமரவேண்டும்

6) ஒவ்வொரு உருவாக எடுத்து கோர்க்கும்போது " ஓம் ஐம் ஶ்ரீம் வசம் வசங்கரி மங்கலாம்பிகா இரட்சிப்பாய்" என்ற மந்திரத்தை சொல்லவேண்டும், 

7) கோர்த்து முடித்தவுடன் பஞ்சகவ்யத்தினுல் தொய்க வேண்டும் (நனைக்க) அப்போது உங்களுக்கு தெரிந்த அம்பாள் ஸ்தோத்திரங்களை சொல்லலாம், "சர்வ மங்கல மாங்கல்யே சிவே சர்வாதகே" என்ற மந்திரமும் சொல்லலாம்

8) 27 முறை பஞ்சகவ்யத்தில் தொய்த்து எடுக்கவேண்டும் 

9) பின்பு மஞ்சள் நீரில் அதை கழுவ வேண்டும்

10) 11 அம்பாளினுடைய நாமத்தை சொல்லி குங்கும அர்ச்சனை செய்யவேண்டும்

11) தூப தீபங்கள் காட்டவேண்டும் 

12) பின்பு உள் வைத்துக்கொள்ளலாம் 

13) உதவிக்கு உங்கள் தாயை வைத்துக்கொள்ளலாம், இல்லாதவர்கள் மூத்த சுமங்கலியின் உதவியை நாடலாம்,

14) பிறர் உதவியுடன் அணிந்தால், அணிபவர்கள் அல்லது மாற்றிக்கொள்பவர் கிழக்கு நோக்கியும் செய்பவர் வடக்கு நோக்கியும் அமர்ந்து செய்யலாம்

15) இப்போது அணிந்தாயிற்று, பஞ்ச கவ்வியத்தை நீங்களும் உங்கள் கணவரும், பிள்ளைகளும் சாப்பிட்டு மீதம் உள்ளதை கால்படாத இடத்தில் ஊற்ற வேண்டும்
16) மாலை கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு அர்ச்சனை செய்து ஒன்று அல்லது மூன்று சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்கவேண்டும்.

சர்வமங்களம் உண்டாகும்.

 

No comments:

Post a Comment