Thursday, 20 May 2021

மரணம் வரும் வழி!

1.சந்திரன் எட்டில் இருப்பதுடன், சனியின் நேரடிப் பார்வையையும் பெற்றால், ஜாதகன் அறுவை சிகிச்சையின்போது உயிரைவிட நேரிடும்.

2. தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், அல்லது சனி, அல்லது ராகுவுடன் கைகோர்த்துக்கொண்டு எட்டில் இருந்தால், ஜாதகன் நீரில் மூழ்கி இறப்பான். அல்லது நெருப்பில் சிக்கி இறப்பான். அல்லது ஆயுதங்களால் தாக்குண்டு இறப்பான்.

3. சூரியன், சந்திரன், செவ்வாய், சனி ஆகிய நான்கு கிரகங்களும் ஒன்றாக எட்டாம் வீடு, அல்லது ஐந்தாம் வீடு அல்லது ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மலை உச்சி போன்ற உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்து இறக்க நேரிடும். அல்லது இடி, மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கி இறக்க நேரிடும்.

4. தேய்பிறைச் சந்திரன் 6 அல்லது 8ல் இருக்க, ஜாதகனின் 4 & 10 ஆம் வீடுகளில் பாவக்கிரகங்கள் இருந்தால், ஜாதகன் எதிரிகளின் சூழ்ச்சியால் இறக்க நேரிடும். அல்லது எதிரிகளால் கொல்லப்படுவான்.

5. சூரியன், சந்திரன், புதன் ஆகிய 3 கிரகங்களும் ஏழில் இருக்க, சனி லக்கினத்திலும், செவ்வாய் விரையத்திலும் இருந்தால் ஜாதகன் வெளி தேசங்களில் இறக்க நேரிடும். அல்லது தூர தேசங்களுக்குப் போகும்போது இறக்க நேரிடும்.

6. புதனும், சுக்கிரனும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன் தூக்கத்திலேயே இறந்து போவான் (அடடே, இது நன்றாக இருக்கிறதே!)

7. புதனும் சனியும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன், அரச தண்டனையால் இறக்க நேரிடும்.

8. சந்திரனும் புதனும் 6 அல்லது 8ஆம் வீட்டில் ஜாதகனின் மரணம் விஷத்தால் (poison) ஏற்படும்.

9. சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக 8ல் இருந்தால் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

10. செவ்வாய் 12லும், சனி 8லும் இருந்தாலும், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

11. சந்திரன் 12ல், சனி 8ல் இருந்தாலும் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

12. ஆறில் செவ்வாய் இருந்து, அவர் மீது வேறு சுபப்பார்வை எதுவுமில்லை என்றால், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

13. ஆறாம் வீட்டில் ராகுவும் நான்காம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் திடீர் என இறக்க நேரிடும். அதாவது திருட்டு, கொள்ளை, கலவரம் போன்ற நிகழ்வுகளில் இறக்க நேரிடும்.

14. அந்த இடத்தில் ராகுவிற்குப் பதிலாக கேது இருந்தாலும், அதே முடிவுதான்!

15. எட்டாம் வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாவக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலி உடையதாக இருக்கும். அது புற்றுநோய் போன்ற கொடிய நோயாக இருக்கலாம் அல்லது விபத்தாக இருக்கலாம். அல்லது, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களால் ஏற்படலாம்.

16. எட்டாம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலியில்லாததாகவும்,இயற்கையானதாகவும், அமைதியனதாகவும் இருக்கும்.

17. எட்டில் சந்திரன் இருக்க, எட்டாம் வீட்டில் இருபுறமும் பாவக்கிரகங்கள் இருந்தால் (அதாவது எட்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தல்)  ஜாதகன் நீரில் மூழ்கி இறக்க நேரிடும்

No comments:

Post a Comment