இறப்பு vs மரணம்
நமக்கு இறப்புக்கும், மரணத்திற்கும் வித்தாயசம் தெரியாமல் வளர்ந்து இருப்போம். இன்று அதை பற்றியா தெளிவு கிடைக்க இந்த தகவல் உங்களுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையோடு...
நாம் சாலையில் இந்த செய்தியை போஸ்டர்களின் பார்க்காமல் இருக்கா வாய்ப்பில்லை. "இயற்கை எய்தினார்", "அகால மரணம் அடைந்தார்". ஆனால் இது சாதரணமாக போஸ்டர் தானே என்று எழுதும் வசனம் இல்லை. இதற்க்கு பின்பு சில விஷயங்கள் உள்ளது. உண்மையில் இந்த காலத்தில் இயற்கை எய்தினார் என்பது குறைவே. நாம் போஸ்டரில் பார்க்கும் நபர் உண்மையில் இயற்கை எய்தி இருக்கமாட்டார் மாறாக மரணமடைந்து இருப்பார். என்னது இயற்கை எய்துவதும், மரணமும் ஓன்று இல்லையா?!
ஆம். இறப்பு என்பது இயற்கை எய்துதல் மற்றவை எல்லாம் மரணமே. அப்போ இயற்கை எய்துதல் என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்பது தெளிவு கிடைத்தால் மரணம் எதுவென்று புரிந்துவிடும்.
இயற்கை எய்தினார் என்பதின் சில அறிகுறிகள்: நம் கண்ணால் பார்க்கவும் முடியும்.
1. உடலை மண் தீண்டாது.
2. உடல் அழுகாது.
3. உடல் பூக்கூடை போல் இருக்கும். (பிணம் கனக்கும். 4 பேர் வேண்டும் தூக்க)
4. உடல் வியர்க்கும்.
5. 98.4 டிகிரி வெப்பம் இருக்கும்.
6. தீர்த்தம் கொடுத்தால் தொண்டைகுழிக்குள் இறங்கும்.
7. கை கால்களில் சொடக்கு எடுத்தால் நெட்டி வரும்.
8. வயோதிகமானவர்கள் முகத்தில் இளமை பூத்து பசுமஞ்சள் வர்ணம் உலாவும். (இதற்க்கு தான் சில வீட்டில் முகத்தில் செயற்கையாக மஞ்சள் தூள் பூசபடுகிறது)
இப்படிப்பட்ட உடல் இருந்தால் தான் அதற்கு பெயர் இறப்பு மற்ற உயிரிழப்பில் மேற்கூறிய எந்த அடையாளங்களும் இருக்காது அவைகள் தான் மரணம். இப்படி இறப்பு நேரிடும் உடலை தான் அன்று மண்ணில் புதைத்தார்கள் மரணம் அடைந்த உடலை எரித்தார்கள். இன்று சாதி, மதம், குலம் என்று பல வேறுபாடுகளில் புதைப்பதும், எரிப்பதும் என்னவென்று நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள்.
எங்கு இறப்பு நேர்கிறதோ அங்கு ஆனந்தா கண்ணீர் மட்டுமே இருக்கும் வேரும் கண்ணீர் இருக்காது. இதைத்தான் எதிரியாக இருந்தாலும் நல்லா காரியத்துக்கு போகவில்லை என்றாலும் பரவாயில்லை சாவுக்கு போக வேண்டும் என்ற கட்டாயத்தை கடைபிடித்தார்கள். அப்போதான் அவர் எப்படி வாழ்ந்தார் என்பது நம்மக்கு தெரியும். வாழ்வது என்பது யார் கையில்? ரஜினி பட வசனம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல
அந்த காலங்களில் வீட்டில் நூறு வயதை தாண்டி வாழ்ந்த மணிதர்கள் இருந்தார்கள். சில வருடங்கள் கழித்து அவர்கள் உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் கூட இருப்பார்கள் இவர்களை ஒரு நாள் ஒரு பெரிய பானையில்(மூத்தோர் தாலி) வைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகள் வைத்து குழிகள் புதைப்பதே சாவு என்ற அழைக்கபடுகிறது. இதனை நீங்கள் சில அருங்காட்சியத்தில் காண முடியும். இப்படி நோய்நொடி இல்லாமல் வாழ்ந்த சமூகம் இது.
இப்படி சாவை சந்தோஷமாக கொண்டாடியா மனிதர்கள் இங்கே இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்... இவர்கள் இன்றும் இயற்கை எய்துவதை தனது இலட்சியமாக வைத்து இருக்கிறார்கள். பிறத்தது ஏதற்காக என்று கேட்டால் சாதிக்க என்று கூறுவோர் இருக்கும் இடத்தில் சாக என்று கூறும் மனிதர்கள். அவர்கள் சாவு என்று கூறுவதை விட அடக்கம் ஆகிட்டாங்க என்று தான் கூறுவார்கள். அடக்கம் என்றால் புதைப்பது. இப்படி இறப்பு பற்றி புரிதல் இருக்கவே அவர்களுக்கு இறப்பு மீது பயம் வருமா என்ன? மாறாக சந்தோஷம் தான் வரும். அவர்கள் புதுக்கோட்டை அருகே மெய்வழிசாலை என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி வாழும் மனிதர்கள். இவர்கள் அடையாளம் தலையில் தலப்பா அணிந்து இருப்பார்கள், இவர்கள் பெயரில் சாலை என்று இருக்கும். பொறுங்க பொறுங்க அதுக்குள்ள google போய் அவங்களை பற்றி தேட வேண்டாம்(தப்பு தப்பா வந்தா கண்டுகொள்ள வேண்டாம்). இன்னும் கொஞ்சம் தான் இருக்கு படிக்க.
மரணம் = மா (பெரிது படுத்தி கூறுவது)+ ரணம். உதாரணம் மாநாடு.
ரணம் என்றால் புண் அதிலும் மா ரணம் என்றால் அதிக வேதனை தரும் புண் என்று அர்த்தம். இன்று வீட்டில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நபர்களை இயற்கை எய்தினார் என்று கூறபடுகிறது, அதுவும் தவரே. சில நேரங்களில் மனிதர்கள் கடும் கோவத்தில் உனக்கு நல்லா சாவு வராது என்று கூறுவதும் மரணத்தையே.
இந்த மரணத்தை வைத்து விளையாடும் விளையாட்டு தான் எத்தனை எத்தனை சொல்லி மாலது. இயற்கை ஒரு போதும் தவறு செய்யாது என்பதை புரிந்தவர்களுக்கு மட்டும்.
மறு அயணம் = மரணம் என ஆகியது
ReplyDeleteயானைதான், ஆனாலும் அடி சறுக்குகிறது