Wednesday, 26 May 2021

ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.

ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கற்றாழை பல்வேறு இடங்களில் சுலபமாக கிடைக்கிறது. வெயில் காலத்தை சமாளிக்க இயற்கையாகவே படைக்கப்பட்டது இந்த கற்றாழை. இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கற்றாழையில் இருந்து சாறு மற்றும் ஜெல் பெறப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த கற்றாழை எகிப்து நாட்டில் 16 நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளது. கற்றாழை இந்தியா, எகிப்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகள் அதை மகிமையை உணர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கற்றாழை இந்தியாவில் பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழில் கற்றாழை, இந்தியில் ஹிரித்குமாரி, தெலுங்கில் கலாபண்டா, மலையாளத்தில் குமாரி, கன்னடத்தில் லோலிசரா, மராத்தியில் கோரோபிடா, பெங்காளியில் கொர்டாகுமாரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கற்றாழையின் பயன்கள் (Aloe Vera Benefits)

தோற்றத்தில் மட்டுமல்ல மருத்துவத்திலும் கற்றாழையின் செயல்பாடுகள் அழகுதான். அதன் பயன்கள் என்னென்ன என்பதை தற்போது காண்போம்.

தோலுக்கு கிடைக்கும் நன்மைகள் (Aloe Vera Benefits for Skin)வயதான தோற்றத்தை கற்றாழை மூலம் எப்படி தடுக்கலாம்?

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான தோற்றத்தை தடுக்க கற்றாழையை கொண்டு தோலை பாதுகாக்கும் கீரிம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி ஆலிவ் வேரா ஜெல்
அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில்
1 தேக்கரண்டி ஓட்ஸ்

தயாரிக்கும் முறை

மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதனை பேஸ்ட் மாதிரி பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின்னர், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முகத்தை கழுவிய பின்னர் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து இளமையும் காணப்படுவதை கண்டு நீங்களே நெகிழ்ச்சியடைவீர்கள். கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் மிருதுவாக இருக்கும் என்பதை ஆராய்ச்சிகள் மூலமும் நிருபித்துள்ளனர்.

மிருவதான சருமத்தை பெற

கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் வழியும் முகத்தை தடுக்கவும் இந்த கற்றாழை பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

காற்றாழையில் இருந்து நேரடியாக அதன் ஜெல்லை எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல்லையும் வாங்கி பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

கற்றாழை மட்டுமே போதுமானது.

தயாரிக்கும் முறை

கற்றாழை வெட்டி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை போட்டு பிரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். பின்னர் அதை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இந்த கற்றாழை ஜெல்லை முகத்தில் பயன்படுத்துவதால் முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனால் வறண்ட சருமத்திலிருந்து விடுபடலாம்.

முகப்பருவை தடுத்து அழகை மெருகேற்ற

கற்றாழையின் ஜெல் உங்களது முகத் தோலில் படிந்துள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச் செய்யும். மேலும், முகப்பருக்களை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டுள்ளது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை மற்றும் சிறு துளி எலுமிச்சை சாறு கலந்த கலவையினை பயன்படுத்தினால் சரும நோய்கள் நீங்கும். தழும்புகளை நீக்கும் குணங்களும் இதில் உள்ளது. எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை கலந்த கலவையானது முகப்பருக்களை வேருடன் அழிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

தேவையான பொருட்கள்1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்2 முதல் 3 துளி எலுமிச்சை சாறுதயாரிக்கும் முறைகற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறினை நன்றாக கலக்க வேண்டும்.அந்தக் கலவையினை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே இரவில் நல்ல பலனைக் காண முடியும்.கிடைக்கும் பலன்கள்

கற்றாழையின் ஜெல்லானது அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளதால் சருமத் தொடர்பான பிரச்சனைகளை எளிதில் கட்டுப்படுத்துகிறது. முகப்பருக்களை வேருடன் அளித்து பொலிவுறச் செய்யும் தன்மை இதில் உள்ளது. உயிரிழந்த செல்களை நிக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது.

விளைவுகள்

சூரியனிள் வெப்பத்திற்கு ஏற்றவாறு எலுமிச்சை சாறினை குறைத்துக் கொள்வது நல்லது

No comments:

Post a Comment