*_வெயில் காலத்துல இந்த 5 பழங்களை வைத்தே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்... நிறைய சாப்பிடுங்க..._*
உயர் இரத்த அழுத்தம் தான் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பலர் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்றாகும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை மருந்து சாப்பிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே உங்க உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க கோடை காலங்களில் நீங்கள் சேர்க்க வேண்டிய 5 பழங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
*தர்பூசணி*
தர்பூசணி குறைந்த கலோரிகள் கொண்ட பழமாகும். இதன் இனிப்பு மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும் தன்மை காரணமாக கோடை காலங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கோடை கால பழம் ஒரு சுவையான பழம் மட்டும் கிடையாது. இதில் நிறைய விட்டமின் சி, ஏ, பொட்டாசியம், அமினோ அமிலங்கள், லைகோபீன், சோடியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகியவை காணப்படுகிறது. இது நம்முடைய உயர் இரத்த நிர்வகிக்க உதவுகிறது.
*கிவிபழம்*
கிவி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவையும் நம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவை செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது பக்கவாதம், மாரடைப்பு போன்ற இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இதய நோய்களையும் தடுக்கவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
*மாம்பழம்*
மாம்பழம் இந்த கோடை காலத்திற்கு ஒரு சுவையான பழமாகும். ஏனெனில் மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் சிறந்த மூலமாக காணப்படுகிறது. இவையும் நம் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. இதை பழங்களின் ராஜா என்றே குறிப்பிடலாம். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
*வாழைப்பழம்*
எஃப்.டி.ஏ படி, பொட்டாசியம் நிறைந்த மற்றும் சோடியம் குறைவாக உள்ள உணவு உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கிறது. வாழைப்பழம் உங்க செரிமானத்தை ஊக்குவிக்கும் ஒரு பழமாகும்.
No comments:
Post a Comment