Monday, 7 June 2021

எந்த உறவால் ஜாதகருக்கு பணம் வரும்?

எந்த உறவால் ஜாதகருக்கு பணம் வரும்?

ஜோதிட சாஸ்திரத்தில் பொதுவாக உறவுகளைக் குறித்தும் பாவங்களாக குறிப்பிடப்படுபவை 3, 4, 5, 7, 9 மற்றும் 11 ஆகும்.

மூன்றாமிடம் இளைய சகோதரனையும், நான்காமிடம் தாயையும், ஐந்தாமிடம் குழந்தைகளையும், 7-ஆம் இடம் மனைவி மற்றும் நண்பர்களையும், ஒன்பதாமிடம் தந்தையும் 11-ஆம் இடம் மூத்த சகோதர உறவுகளையும் சுட்டிக்காட்டும்.

இதோடு பத்தாமிடம் மாமியாரை சுட்டிக்காட்டும்.
 7-ஆம் இடம் மனைவி என்றால் 7க்கு நான்காம் இடமான இலக்னத்திற்கு பத்தாம் இடம் மனைவியின் தாய், ஜாதகருக்கு மாமியாரை சுட்டிக்காட்டும்.

அதேபோல் 7க்கு 9-ஆம் இடமான இலக்னத்திற்கு 3ஆம் இடம் மாமனாரை சுட்டிக்காட்டும். பணவரவை சுட்டிக்காட்டும் இடம் தன ஸ்தானமான 2-ஆம் இடம். உறவுகளைக் குறிப்பிடும் கிரகங்களுடன் இரண்டாம் அதிபதி இணைந்து இலக்னத்தில நின்று இலக்னாதிபதி பாதிப்பின்றி இருக்கும்போது அந்த காரகத்துவ உறவால் ஜாதகருக்கு பணவரவு உண்டு.
இந்த அமைப்பு கேந்திர திரிகோணங்களில் இருப்பதும் பொருந்தும்.

உதாரணமாக இரண்டாம் அதிபதி, ஏழாம் அதிபதியுடன் இணைந்து கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலையில் ஏழாமிட காரகத்துவ உறவான மனைவி வகையில் ஜாதகருக்கு முன்னேற்றம்  பணவரவு உண்டு.
தொடர்புடைய திசாபுத்திகளில் இவற்றை அனுபவரீதியாக உணர இயலும்..


No comments:

Post a Comment