Wednesday, 9 June 2021

ஆயுள்......

ஆயுள்

அஷ்டமாதிபதி அல்லது லக்னத்துக்கு 8-ஆம் வீட்டில் அமையும் கிரகத்தை வைத்தே ஆயுளைக் கூற வேண்டும். ஆயுளுக்குக் காரகனான சனி பகவானையும், பத்தாம் வீட்டு அதிபதியையும் வைத்தே ஆயுளைக் கூற வேண்டும்

லக்னம் எனும் 1-ஆம் வீடு மற்றும் 4, 7 அல்லது 10-ஆம் எனும் கேந்திர வீடுகளில் குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் 100 வயது வரை வாழ்வார். 9-ஆம் அதிபதி 11-ல் இருந்தாலும் 100 வயது வரை வாழ்வார். லக்னாதிபதி, 8 மற்றும் 10-ஆம் அதிபதிகள், 11 அல்லது கேந்திர வீடுகள் எனும் 1, 4, 7, 10-ஆம் வீடுகள் அல்லது கோண வீடுகள் எனும் 5, 9-ஆம் வீடுகளில் அமர்ந்தாலும் நீள் ஆயுள் உண்டு. 4, 6, 8, 12-ஆம் வீடுகளில் பாப கிரகங்களாகிய சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் போன்றோர் இருந்தாலும் ஆயுள் கூடும்.

10-ஆம் அதிபதி & உச்சம், மூல திரிகோணத்தில் இருந்தாலும் நல்லது. மேற்படி அமைப்பில் பாபர் 8-ஆம் வீட்டில் இருந்தால் தீர்க்காயுசு தருவார்கள். 3, 6, 11-ஆம் வீடுகளில் பாபர்களும், 1, 5, 9-ஆம் வீடுகளில் சுபர்களும் இருத்தல் நல்லது. பாபர் 3, 6, 9, 12-ஆம் வீடுகளில் தனியாகவோ அல்லது சேர்ந்து இருப்பதும் நீள் ஆயுளைத் தரும்.

லக்னாதிபதியும் 8-ஆம் அதிபதியும், சந்திர ராசி அதிபதி மற்றும் அதன் 8-ஆம் அதிபதியும், சூரியனும் லக்ன அதிபதியும், லக்னாதிபதியும், சந்திரன் நின்ற ராசி அதிபதியும் நட்பாக இருந்தால் நீள் ஆயுளைத் தரும்.

புதன் 8-ல் அமைதல், சனி 3, 6, 11-ஆம் வீடுகளில் ஆட்சியாக இருத்தல்; சூரியன் 11-ல் இருத்தல்; வியாழன் 11-ல் இருத்தல்; சுக்கிரன் 8, 12 போன்ற வீடுகளில் மறைதல்; ராகு 6-ஆம் வீட்டில் அமைதல்; பட்ச பலத்துடன் சந்திரன் 11-ல் இருக்கும்போது, ராத்திரியில் ஜனித்தல்; சூரியன் 11-ஆம் வீட்டில் அமைந்து பகலில் பிறத்தல்; 6, 12-ஆம் அதிபதிகள் 6 அல்லது 12-ல் இருத்தல்; 6,12-ஆம் வீடுகளில் 12-ஆம் அதிபதி இருத்தல்; 6,12-ஆம் அதிபதிகள் லக்னம் அல்லது 8-ல் இருத்தல்; குரு லக்னத்தில் இருத்தல்; கிரகங்கள் பலம் பெற்று லக்ன கேந்திரங்களில் (1, 4, 7, 10) அமைதல்; லக்ன அதிபன் லக்ன கேந்திரத்தில் அமைதல்; சந்திர ராசி அதிபன் அங்கேயே இருத்தல்; அஷ்டமாதிபதி அஷ்டமத்திலேயே இருத்தல் போன்ற நிலைகள் தீர்க்க ஆயுளைத் தரும்’’ எனக் கூறி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட குரு, ‘‘என்ன சிஷ்யா, கிரகங்கள் தரும் ஆயுள் போகங்களைத் தெரிந்து கொண்டாயா? 50 விழுக்காடு அல்ல, 80 விழுக்காடு மக்களுக்கும் மேற்கண்ட அமைப்புகளுள் ஏதேனும் ஒன்று உறுதியாக இருக்கும். எனவே, பதற்றப்படத் தேவையில்லை

No comments:

Post a Comment