Thursday, 3 June 2021

கொரோனா தடுப்பு மருந்து எவ்வாறு வேலை செய்யும்..

இந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர் எல்லோர் உடம்பிலும் கொரோனா கிருமி இருக்கும்...

இதென்னடா புது குழப்பம்??

அவ்ளோ டென்ஷன் ஆகற விஷயம் இல்ல.... ஊசி போட்டுக்கிறவங்க உடம்புல இருக்கிறது "கொம்பன்" கொரோனா இல்ல.... "கும்கி" கொரோனா...
லேசா புரியுற மாதிரி இருக்கா...

அதாவது இந்த கொரோனா தடுப்பூசிக்கு மூல ஆதாரப்பொருளே அதே கொரோனா தான்.. அந்த வைரஸோட உடம்புல இருக்க உயிருக்கு ஆபத்து தரக்கூடிய அந்த XYZ எல்லாத்தையும் எடுத்துட்டு அத தான் தடுப்பூசியா செலுத்துறாங்க... அது நம்ம உடம்புக்குள்ள போனதும் , அடடா.. எவனோ புதுசா ஒரு எதிரி உள்ளவந்துட்டான்னு ஏற்கெனவே நம்ம உடம்புல இருக்க வெள்ளையணுக்கள் எல்லாம் வாரி சுருட்டி வாளெடுத்துகிட்டு புதுசா உள்ள போன கும்கி கொரோனாவோட மல்லுக்கட்டும்...

அதுதான் தடுப்பூசி போட்ட அப்புறம் வர காய்ச்சல்... ஒன்னு-ரெண்டு நாள்லயே வெள்ளையணுக்கள் புரிஞ்சுக்கும்.. இவன் நம்மள கொல்ல வந்தவன் இல்ல ன்னு.. அப்புறம் ரெண்டும் கூட்டாயிடும்...

அதுக்கப்புறம் ஒரிஜினல் கொம்பன் கொரோனா உடம்புக்குள்ள நுழையுறப்போ , ஏற்கெனவே நம்ம உடம்புக்குள்ள இருக்க கும்கி கொரோனா ஈஸியா ஸ்மெல் பண்ணிடும்... வந்திருக்கிறது கொம்பன் கொரோனா ன்னு....

உடனே ஊர்க்காரங்க (வெள்ளையணுக்கள்) சப்போர்ட்டோட கொம்பனோட போராடி.... கும்கி ஜெயிச்சுடும்....

இம்புட்டுதான் மேட்டரு... இதுக்கு போயி பயந்துகிட்டு இருக்கீங்க.. சட்டுபுட்டுன்னு போய் அந்த கும்கி கொரோனாவை உடம்புல ஏத்திக்கிட்டு வாங்கப்பு

No comments:

Post a Comment