Sunday, 6 June 2021

படுக்கை புண்ணை வீட்டில் குணப்படுத்துவது எப்படி?

1.தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உங்கள் தோலை மலர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும் அணைத்து அத்யாவசிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. சிறிது தேங்காய் எண்ணெயை மிதமாக சூடு படுத்தி உங்கள் சருமத்தில் போட்டு மென்மையாக மசாஜ் செய்யவும். பாதிக்கப்பட்ட இடத்தை அழுத்தி தேய்க்காமல் இருக்கவும். இதை ஒரு நாளுக்கு 2-3 முறை செய்வதன் மூலம், படுக்கை புண்ணை அகற்றுவதுடன் மேலும் தோலில் புண்கள் வராமல் பாதுகாக்கலாம்.

 

2.உப்பு தண்ணீர்

ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து தண்ணீருடன் கலக்குங்கள். அதை கொதிக்க வையுங்கள். ஆறின பிறகு, படுக்கை புண் மீது தடவி பிறகு அந்த கலவையை முற்றிலும் கழுவி விடுங்கள். இது படுக்கை புண்களை குணப்படுத்துவதுடன் மேலும் புண்கள் வராமல் பாதுகாக்கும்.

 

3.மஞ்சள்

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்க்கும் குணம், படுக்கை புண்களுக்கு எதிரான ஒரு அற்புதமான வீட்டு நிவாரண பொருளாகிறது. பாதிக்க பட்ட இடத்தில் உப்பு நீரால் கழுவி விட்டு, மஞ்சள் பூசி ஒரு துண்டு துணியால் மூடி வையுங்கள். இவ்வாறு இரு முறை அல்லது மூன்று முறை ஒரு நாளுக்கு செய்யுங்கள்.

 

4.இருக்கும் நிலை

நோயாளியின் அமரும் நிலை அல்லது படுக்கும் நிலையை ஒவ்வொரு 20-30 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றவும். ஒரே நிலையில் பல மணி நேரம் இருப்பதை விட, உங்கள் உடலை கொஞ்சம் நகர்த்தி கொண்டே இருந்தால், குணமாக வாய்ப்பு இருக்கிறது. இது படுக்கை புண் மீண்டும் வருவதை தடுக்கும்.

 

5.குழந்தை பவுடர்

குழந்தைகள் பவுடர் காயம் பட்ட இடத்தில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொண்டு காயத்தை ஆற்றும். முதலில், காயத்தை உப்பு நீரால் கழுவவும் பிறகு குழந்தைகள் பவுடரை மேலே தூவவும். இது சீழ் வடிவதை உறிஞ்சி உலர்வாக வைத்து இருக்கும்.

 

6.பீட்ரூட்டுடன் தேன்

படுக்கை புண்கள் இயற்கையாக குணமாகுவதற்கு பீட்ரூட் உதவும். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து காயம் பட்ட இடத்தில் தடவவும். இது காயத்தை ஆற்றுவதுடன் அரிப்பில் இருந்து விடுபட உதவும்.

 

7.சரியான உணவு உண்ணுதல்

சரியான உணவை உண்ணுதல் படுக்கை புண்களை குணப்படுத்துவதற்கு மற்றொரு வழி. தண்ணீர், பழச்சாறு போன்ற நிறைய நீராகாரம் அருந்துங்கள். இவை உடலில் நீர் சத்து கொடுத்து ரத்த ஓட்டம் சீராக ஓட உதவும். மேலும் வைட்டமின் A, C E நிறைந்த உணவுகள் உண்ணவும். ஆரோக்கியமான தோலிற்கு நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் உண்ணவும்.

படுக்கை புண் ஆரம்ப நிலையில் இருந்தால், அதை வீட்டில் எளிதாக குணப்படுத்தலாம் தொழில்முறை உதவி இல்லாமல். ஆனால் பல காலம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், படுக்கை புண்ணை குணப்படுத்த மருத்துவ உதவி தேவை படும், அது சிரமம் கொடுக்கும்

No comments:

Post a Comment