Sunday, 6 June 2021

பெருங்காயம்

காலம் காலமா பெருங்காயத்தை ரசத்திலும் சாம்பாரிலும் சேர்க்கும் சமையல் முறை தமிழனுடையது...இது பீட்சா,பர்க்கரில் இல்லை..இதன் அவசியம் என்ன..?

பெருங்காயத்தின் மூக்கைத் துளைக்கும் தீவிர மணத்தின் அருமை தெரியாத மேற்கத்தியர் ஆரம்பத்தில் இதற்கு வைத்த பெயர் “ நாற்றம்பிடித்த பிசின்/பிசாசின் மலம்”(devil’s dung /stinking gum). கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது 1918-இல் பெருங்காய விஷயத்தில் ஊர்ஜிதமானது. 

கிட்டத்தட்ட வாரம் ஒன்றுக்கு 10,000 அமெரிக்கர்களை பலிவாங்கிய ஸ்பானிஷ் விஷ ஜுரத்தின் (SPANISH FLU) போது, மற்ற மருந்துகள் எல்லாம் பொய்த்துப் போன போது பெருங்காயம் தான் கடைசியில் ஒட்டுமொத்த அமெரிக்கரையும் காப்பாற்றியது. 

இன்று உலகின் அத்தனை மருந்துகளையும் தர கட்டுப்பாடு செய்து உலகெங்கும் மருத்துவ விற்பனையை ஒழுங்குபடுத்தும்(?) அமெரிக்காவின் FDA அமைப்பு பெருங்காயம் Spanish flu-ற்கு பயனளிக்கும் என்று அங்கீகரித்து பயன்படுத்த அறிவுறுத்தியது.

 ’பிசாசு மலம்-ஐய்யயே!’- என்று ஏளனம் செய்தவரெல்லாம்- உருத்திராட்சம் போடுவது போல், பெருங்காயக் கட்டியை கழுத்தில் போட்டு தம்மைக் காப்பாற்றிக் கொண்டதை வரலாறு வர்ணிக்கிறது. 

அதன்பின் 2009-இல் பறவைக்காய்ச்சல் உலகெங்கும் பயமுறுத்திய போது, அதே அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் பெருங்காயம் HINI VIRUS-க்கு எதிராக ஆய்வகத்தில் செயல் புரிவதை மீண்டும் நிரூபித்தனர்..

.எந்த ஜுரமாக இருந்தாலும்,எப்படிப்பட்ட புதுவகையான காய்சலாக இருப்பினும் பெருங்காயம் அதற்கு மாமருந்து!!தமிழன் அப்பவே உணர்ந்துட்டான்பா!!

No comments:

Post a Comment