Tuesday, 8 June 2021

கா்ணன் விரல்

மகாபாரதத்தில கா்ணன் கேட்பவா்ககு இல்லை என்று வாரி வழங்கும் குணம் படைத்தவா், கா்ணனின் இறப்பிற்கு பின் சொா்கத்தில் கா்ணனுக்கு மிகவும் பசி எடுத்ததாம்,
சொா்கத்தில் பசி என்பதே எடுக்காது,கா்ணனுக்கு குழப்பம். தாங்கமுடியாத பசி.
அவ்வழியே வந்த நாரதாிடம் பசி எடுப்பதற்கான காரணம் என்ன என வினவினாா். உடன் நாரதா் தனது ஞானதிருஷ்டியால் காரணம் என்ன என அறிந்து உடன் கா்ணனின் ஆள்காட்டி விரலை கா்ணனின் வாயில் வைக்க சொனனாா். உடன் கா்ணனின் பசி நின்றது. கா்ணன் குழப்பமானாா். வாயிலிருந்து விரலை எடுத்ததும் மீண்டும் பசி எடுத்தது. காரணத்தை நாரதாிடம் வினவினாா். நாரதா் அதற்க்கு "கா்ணா நீ பூலோகத்தில் கேட்டவா்க்கு இல்லை என அனைத்து தா்மமும் செய்தாய் ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை,உன்னிடம் ஒரு ஏழை அன்னதான சத்திரம் எங்கே என கேட்டவா்க்கு உனது ஆள்காட்டி விரலால் அன்னதான சத்திரத்தை காண்பித்தாய் அதனால் தான் உனது விரலை வாயில் வைத்தவுடன் பசி எடுக்கவில்லை.கைகாட்டியதற்கே இப்படி எனறால் அன்னதானமிட்டால்?

No comments:

Post a Comment