Sunday, 6 June 2021

இரக்கமில்லாத ராசிகள் :




இரக்கமில்லாத ராசிகள் : ஒருவரையும் மன்னிக்காத 4 ராசி 
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவர் மனிதன், மன்னிப்பவன் பெரிய மனிதன் என்பார்கள். மன்னிப்பு என்று வரும்போது, மன்னிக்கவும், முழு மனதுடன் மறக்கவும் கூடியவர்கள் மிகக் குறைவு. சில ராசியினர் துரோகத்தை எப்போதும் மனதில் வைத்திருப்பவராகவும், ஒருபோதும் மன்னிக்காதவராக இருப்பார்கள்.
    


தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவர் மனிதன், மன்னிப்பவன் பெரிய மனிதன் என்பார்கள். மன்னிப்பு என்று வரும்போது, மன்னிக்கவும், முழு மனதுடன் மறக்கவும் கூடியவர்கள் மிகக் குறைவு. சில ராசியினர் துரோகத்தை எப்போதும் மனதில் வைத்திருப்பவராகவும், ஒருபோதும் மன்னிக்காதவராக இருப்பார்கள்.

தவறை மன்னிக்காத ராசிகள்

ஒருவரின் தவறை மன்னிப்பதால் அந்த மன்னிப்பவரை கடவுளாக பார்க்கப்படுகிறார். சிலர் சிறிய தவறு, கசப்பான செயலை செய்துவிட்டார் என்பதற்காக அவர் மீது கோபப்படுவது தவறில்லை. ஆனால் அவரை மன்னிக்க முடியாதளவு குற்றம் செய்தவராக பார்க்கின்றனர்.

தவறு செய்தவர் மீது மனக்கசப்பு மற்றும் உணர்ச்சிவசமான நிலையில் இருப்பார்கள். அவர்களின் தவறு மற்றும் துரோகத்தை மறந்துவிடுவதில்லை. வாழ்நாள் முழுவதும் அவர்களை வெறுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மன்னிக்காத 4 ராசிகள் குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்.

அதிகமாக பேசக்கூடிய 4 ராசிகள் யார் தெரியுமா? - செய்ய வேண்டிய முக்கிய விஷயம்


​மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த ஒரு முக்கிய விஷயமும் தன்னிடம் மறைக்கக்கூடாது என நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு வேலையை செய்து முடிக்க ஒப்புக் கொண்டு அதை செய்யாமல் தவிர்பவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

இவர்கள் யாரேனும் தவறு அல்லது துரோகம் செய்தால் அதை எப்போதும் மனதில் வைத்திருப்பார்கள். அதனை எப்போதும் மன்னிக்காத மனநிலையுடனே இருப்பார்கள்.



​கடகம்

கடக ராசியினர் கலகலப்பானவர்களாக இருந்தாலும், தங்கள் குடும்பத்தை காயப்படுத்திய ஒருவரை கடக ராசியினர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.



குடும்பத்தின் மீது அதீத பற்று கொண்ட, அன்பு கொண்ட கடக ராசியினர் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். யாரேனும் குடும்பத்திற்கு பிரச்னை, காயப்படுத்தினால் அல்லது துரோகம் செய்தவர்களை மன்னிக்காதவர்களாகவும், அவர்கள் மீது கடுமையானவர்களாக இருப்பார்கள்.

ஆதிக்கம், ஆணவம் அதிகம் கொண்ட 4 ராசிகள் : இவர்களிடம் கவனமாக இருங்கள்

​விருச்சிகம்

விருச்சிக ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சி மிகுதியாக தான் பார்ப்பார்கள். அதன் காரணமாக இவர்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடியவர்கள் மற்றும் அவர்களுக்கு தீங்கு செய்யக் கூடியவர்களை ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள். ஒரு முறை அவர்களிடம் பேசக்கூடாது என முடிவெடுத்தால் அதிலேயே விடாப்பிடியாக இருப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் தங்கள் வாழ்வில் கசப்பான செயலை ஏற்படுத்தக்கூடியவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.




​மகரம்

மகர ராசியினர் பர்க்க எளிமையானவராகத் தோன்றலாம். ஆனால் தங்களின் மனதில் மிக சிக்கலானவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருமுகங்களைக் கொண்டவர்கள் எனலாம். காட்டிக் கொடுப்பவர்கள், துரோகம் செய்பவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

அதோடு இவர்களின் மனதுடன் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.


No comments:

Post a Comment