Sunday, 6 June 2021

அங்கிசநாதன் யார்?

அங்கிசநாதன் யார்?
அது பற்றிய விவரம்.

அங்கிச நாதன்...
        இந்த வார்த்தை கேள்விப்பட்டு இருக்கலாம். ஜோதிட ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் எல்லாம்-
   சிலருக்கு இது பற்றி நன்றாக தெரியும். சிலருக்கோ நவாம்சத்தில் கிரகம் இருக்கும் அதிபரா? அல்லது கிரகம் நின்ற நட்சத்திர அதிபரா? என்று குழப்பம் வரக்கூடும்😂 நான் அப்படித்தான் குழம்பினேன்😀 இன்று இதைப் பற்றி ஒரு பதிவை படித்து அறிந்து கொள்ளும் வரை.
நன்றி பதிவாசிரியருக்கு.(பதிவாசிரியர் ஞானகளஞ்சியம்)

இப்போது அங்கிசநாதன்- விஷயத்திற்கு வருவோம்.

27 நட்சத்திரங்களை மூன்று மூன்றாக பிரித்து கொள்ள வேண்டும்.
இந்த நட்சத்திரங்கள் 27 ஐயும் நவகிரகங்கள் மூன்று மூன்றாக பங்கிட்டுக் கொள்ளும் 
அப்படி மூன்று நட்சத்திரங்களுக்கு ஒரு கிரகம் என்று கிழமை வரிசைப்படி  பங்கிட்டுக் கொள்ளும்.
     அப்படி பங்கிட்டுக் கொண்ட கிரகம் தான் அங்கிச நாதன்.

நட்சத்திரங்களும் அதற்குரிய அங்கிசநாதர்களும்.

1- அஸ்வினி பரணி கிருத்திகை இந்த நட்சத்திரங்களுக்கு சூரியன் அங்கிச நாதனாக வருவார்.

2- ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை இந்த மூன்று 🌟 அங்கிசநாதன் சந்திரன்-

3- புனர்பூசம் பூசம் ஆயில்யம் இந்த மூன்று 🌟 அங்கிசநாதன் செவ்வாய்.

4- மகம் பூரம் உத்திரம் இந்த மூன்று 🌟 அங்கிசநாதன் புதன்.

5- ஹஸ்தம் சித்திரை‌ ஸ்வாதி  இந்த மூன்று 🌟 அங்கிசநாதன்  குரு

6-  விசாகம்,, அனுஷம் கேட்டை  இந்த மூன்று 🌟 அங்கிசநாதன்  சுக்கிரன்.

7-  மூலம்,,பூராடம்,  உத்திராடம்  இந்த மூன்று 🌟 அங்கிசநாதன் சனி 

8- திருவோணம்
அவிட்டம் சதயம்  இந்த மூன்று 🌟 அங்கிசநாதன் ராகு

9- பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி இந்த மூன்று 🌟 அங்கிசநாதன் கேது.

துணை அங்கிசநாதன் என்பது நவாம்சத்தில் ஒரு  கிரகம் இருக்கும் ராசிநாதன் தான் துணை அங்கிசநாதன்.

இந்த அங்கிச,
துணை அங்கிசநாதர்கள் நிலையும் ஜாதகத்தில் பார்த்து பலன் கூறினால் அது சரியாக இருக்கும்.
(உம்)ஒரு கிரகம் நின்ற நட்சத்திரம் எந்த அங்கிசத்தில் வருகிறதோ அவரே அந்த தசா காலத்தில் அங்கிசநாதனாக செயல்படுவார்.
நவாம்ச அதிபதி துணை அங்கிசநாதனாக செயல்படுவார்.
இவர்களும் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்திருப்பது அவசியம்/ (சிறப்பு)

 தசா காலத்தில் தசா பலனில் தசாநாதன் ....ஸ்தூல நிலையிலும்
அங்கிசநாதன் சூஷ்மமாகவும் 
துணை அங்கிசநாதன் அதி சூட்சும நிலையிலும் செயல்படுகிறது.

அங்கிசநாதனும் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது முக்கியம்.
அப்போது தான் தசா பலனில் நன்மை காண முடியும்.

No comments:

Post a Comment