Sunday, 18 July 2021

எதிர்காலத்தை குறிக்கும் ராகு..!



எதிர்காலத்தை குறிக்கும் ராகு..!

சோதிடத்தில் பின்னோக்கி சுழலும் போது முன்னோக்கி சிந்திக்கும் கிரகம் ராகு, ராகுவால் தான் மனிதன் உயிர் வாழ்கிறான், ராகுவே உயிர் ஆசையையும், பொருளாசையையும் தருகிறார், ராகு உங்கள் முழு எதிர்கால வாழ்வையும் கட்டுப்படுத்துகிறார் என்றால் மிகையாகாது, வாழ்க்கையில் எந்த பொருள்/சுகம்/உறவு தேவை அவசியம் என்பதை ராகுவே உணர்த்துகிறார், ராகு மட்டுமில்லை என்றால் மனிதன் எதையும் விரும்ப மாட்டான், ரசிக்கமாட்டான், இவ்விரண்டும் இல்லாத மனிதன் எதற்காக வாழவேண்டும் என்றே நினைப்பான், ஒருவர் எதிர்கால சிந்தனைகளை தான் கனவாக காண்கிறார், பிரபஞ்ச விதி நீ எதுவாக நினைக்கிறாயோ/கணவுகாண்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்கிறது, இந்த வாசகத்துக்கு காரகம் ராகுவே, வாழ்க்கையில் பலதரப்பட்ட உலகியல் இன்பங்களை கொடுத்து மனிதனை மூடனாக்குபவரும் ராகு தான்..!

என்னால் இது இது இருந்தால் தான் ஒரு விஷயத்தை செய்ய இயலும் என்று கூற வைப்பவர் ராகு, உதாரணமாக: வெளியே போக வேண்டும் என்றால் நான் வாகனத்தில் தான் போவேன், பேருந்தில் செல்லமாட்டேன் என்று சுகத்தை எதிர்பார்க்க செய்பவர் ராகுவே, பெரிய எதிர்பார்ப்புகளை ராகு தான் உருவாக்குகிறார், இந்த எதிர்பார்ப்புகளே மனிதனின் வாழ்க்கையை நகர்த்தி செல்கிறது என்றால் பொறுத்தமாகவே இருக்கும், நான் வாழ என்ன வேண்டும் என்றாலும்/எவரை வேண்டுமானாலும் கீழே தள்ளிவிடுவேன் என்கிற சுயநலத்தை ராகுவே கொடுக்கிறார், பொய் பேசுவது/ஏமாற்றுவது/தன் சுகமே முக்கியம் என்று எண்ணுவது போன்ற அனைத்து காரகங்களையும் ராகுவே குறிக்கிறார், பலரின் வாழ்க்கை கனவில் தான் இன்று நகர்கிறது கணவுகளே எதிர்காலத்தை எதிர்நோக்கும் வல்லமையை தருகிறது அப்படி எதிர்காலத்தை எதிர்நோக்கும் போதே நம்பிக்கை பிறக்கிறது அந்த நம்பிக்கையே வாழ்வதற்கு அடித்தளமாகிறது, சிலரை பார்க்கலாம் கையில் ஒன்றுமே இருக்காது ஆனால் நாளைக்கு வீடு வாங்குவதை போல விற்பனையாளரிடம் விலை விசாரிப்பார், இப்படி அவர் பலநாள் விசாரித்த ஒன்று ஒருநாள் நடக்கும் என்கிற நம்பிக்கையை தருகிறது, அந்த நம்பிக்கையே அதனை செயல்படுத்தும் ஊக்கத்தை கொடுக்கிறது அதுவே கனவை நனவாக்க செய்கிறது, இப்படி பல நேர்மறைகளை ராகு கொடுத்தாலும், எதிர்மறைகளில் ராகுவின் காரகங்கள் என்று எடுத்துக்கொண்டால்..!

பேராசை அந்த பேராசையால் விளையும் விளைவுகள், பலர் வாழ்வில் தவரிழைப்பது பேராசையால் தான், பேராசை பெரு நஷ்டத்தை கொடுத்தாலும் அதனை ராகு உணரவிட மாட்டார், மீண்டும் மீண்டும் பேராசையை தூண்டி வாழ்க்கையில் என்ன ஆனாலும் சரி நான் அதனை அடைந்தே தீருவேன் என்று செயல்பட வைப்பார், சிலரை பார்த்திருப்போம் தன் காரியத்தில் கண்ணாக செயல்படுவார்கள், பக்கத்து வீட்டில் இழவு விழுந்தாலும் இவர்கள் தங்கள் வீட்டில் மாவிலை, தோரணம் கட்டி, ஒலிபெருக்கி வைத்து பாட்டு போடுவார்கள் இந்த மனோநிலையை ராகுவே கொடுக்கிறார், ராகு வலுத்தவர்கள் அடுத்தவரை பேச விட மாட்டார்கள் அடைமழை போல தான் சொல்ல வந்ததை சொல்லிட்டே ஓய்வார்கள், அதுவும் இவர்கள் சத்தமாக பேசுவார்கள் அதில் இவர்களுக்கு அடுத்தவரை தான் அடக்கிவிட்டோம் என்கிற நினைப்பு (எவ்வாறு சூரியன் ராகுவின் நட்சத்திரத்தில் நீச்சமடைகிறதோ அவ்வாறு), எதையும் மற்றவருக்கு தெரிவதை போல செய்வார்கள் ராகு வலுத்தவர்கள்..!

பொதுவாக ராகு தரும் ஆசைகள் பொருளாசை/சதை பற்று, ஆம் ராகுவே உடலுறவுக்கு மறைமுக முக்கிய காரகமாகிறார், ராகு+சந்திரன், ராகு+சுக்கிரன் இணைந்த ஜாதகர்கள் தன் எதிர்பாலினத்தை கடித்து தின்று விடுவதை போல பார்ப்பார்கள், பல வக்கிர சிந்தனைகளை மேலே கூறிய இணைவு தரும், சிந்தனைகளால் ஒருவரை கற்பழிப்பார்கள் இவர்கள், இதே அமைப்பு லக்னம் அல்லது 2ல் ஏற்பட்டால் Ex ray Eyes என்று கூறலாம், எதிராளியை அப்படியே படம்பிடித்து சிந்தனையில் ரசிப்பார்கள்/ஆராய்வார்கள், அதாவது கண்களில் Camera வைத்திருப்பார்கள், இவர்களை துப்பு துலக்க பயன்படுத்தலாம், ராகு செய்யும் வக்கிர செயல்கள்  ஒருவர் நினைத்து பார்க்க இயலாத விதத்தில் இருக்கும், இவர்களின் செயலே இவர்களை வெளிச்சம் போட்டு காட்டிவிடும் அதையும் ரசிப்பார்கள், உதாரணமாக: மர்ம மரணங்கள், வக்கிரமான கொடூரமான பாலியல் மரணங்கள், யார் செய்தது என்றே தெரியாத குற்ற செயல்கள், சட்டம்/நெறிமுறைகளை உடைக்க ராகுவுக்கு மிகவும் பிடிக்கும், சிந்தனைகள் என்றால் எதிர்காலத்தை பற்றிய பயம் ராகுவே தருகிறார், ஒருவரின் மனம் சொல்லொண்ணா குழப்பம் கொள்வதும், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று திண்டாடவும் வைப்பார், புகை மூட்டம் போல சிந்தனைகள்/செயல்களை மறைவில் வைத்து  Surprise கொடுப்பார் ராகு, ராகு காரகம் கொண்டவர்கள் அடிக்கடி இவ்வாறு Surprise கொடுப்பார்கள், பரிசு கொடுப்பது ராகுவுக்கு மிகவும் பிடிக்கும், ஒருவரை திடீர் சந்தோஷத்திலும் துக்கத்திலும் தள்ளிவிடும் ராகு. 

No comments:

Post a Comment