Sunday, 18 July 2021

பலாப்பழக்கொட்டையை சாப்பிடுவதால் இத்தனை நன்மை கிடைக்கும்போது ஏன் கீழே தூக்கி போடறீங்க

*🙏💱பலாப்பழக்கொட்டையை சாப்பிடுவதால் இத்தனை நன்மை கிடைக்கும்போது ஏன் கீழே தூக்கி போடறீங்க💚❤️*

உலகின் மிகப் பெரிய மர பழமான பலாப்பழத்தில் புரதச்சத்து மற்றும் வைட்டமின் பி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதேபோல் அதன் கொட்டைகளிலும் பல சத்துகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது.

​பலாக்கொட்டை

பலாக்கொட்டைகளில் தியாமின் மற்றும் ரைபோப்ளேவின் நிறைந்துள்ளன. இவை நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்ற உதவும். அத்தோடு பலாக்கொட்டையில் துத்தநாகம், இரும்புச் சத்து, கால்சியம், தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பலாக்கொட்டை பாரம்பரிய மருத்துவ முறையில் ஜீரண மண்டலத்தின் பிரச்சனையைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. பலாக்கொட்டையை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

​முக சுருக்கங்களை எதிர்த்துப் போராட

உங்கள் முகம் அல்லது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தவிர்க்க பலாக்கொட்டை உதவுகிறது. பலாக்கொட்டையை குளிர்ந்த பாலில் சிறிது நேரம் ஊற வைத்து விட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்டை உங்கள் முகத்தில் பேஸ் பேக் போல் போட்டுக் கொள்ளுங்கள். இந்த பேஸ் பேக் உங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை நீக்கவும், தடுத்து நிறுத்தவும் உதவுகிறது. மேலும், உங்கள் சருமத்தின் இளமையை அதிகரிக்கவும் பலாக்கொட்டை உதவும். அதேபோல் சிறுது பால் மற்றும் தேன் சேர்த்து பலாக்கொட்டையை ஊற வைத்து அரைத்து பேஸ் பேக் போல் போட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

​மன அழுத்தம் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்த

பலாப்பழ விதைகளில் புரதங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் உங்களின் மன அழுத்த அளவு மற்றும் பல தோல் நோய்களை நிர்வகிக்கவும் முடியும். சருமத்தின் ஈரப்பதம் மற்றும் உங்கள் தலைமுயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் பலாப்பழ கொட்டைகளை சாப்பிடுங்கள்.

​அனீமியாவைத் தடுக்க

பலாப்பழ கொட்டைகளை சாப்பிடுவதால் உங்களின் அன்றாட ஊட்டச்சத்துகள் உங்களுக்கு கிடைக்கும். பலாப்பழத்தின் கொட்டைகள் இரும்புச் சத்துக்கான சிறந்த மூலமாக விளங்குகிறது. இரும்புச் சத்து தான் ஹீமோகுளோபினின் அங்கமாகும். இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சோகை மற்றும் பிற இரத்தக் கோளாறுகளின் அபாயம் நீங்கும். அதோடு உங்கள் மூளையையும், இதயத்தையும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க பலாக்கொட்டை உதவும்.

​ஆரோக்கியமான முடி மற்றும் கண் பார்வைக்கு

பலாக்கொட்டைகளில் வைட்டமின் ஏ இருப்பதால் உங்களின் கண் பார்வை பராமரிக்கப்படும். வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான சத்தாகும். அதேபோல் வைட்டமின் ஏ ஆரோக்கியமான தலைமுடியை ஊக்குவிக்கவும், முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது.

​அஜீரணத்தைத் தடுக்க

பலாப்பழ கொட்டைகள் அஜீரணத்திலிருந்து உடனடி நிவாரணம் தர உதவுவதாக அறியப்பட்டுள்ளது. இதற்கு பலாக்கொட்டையை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து சேமித்துக் கொள்ளவும். இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் அஜீரணம் விரைவாக நடக்கும். அதேபோல் மலச்சிக்கலைத் தீர்க்கவும் பலாக்கொட்டை உதவும்.

​தசைகளை உருவாக்க

பலாக்கொட்டைகளில் உயர் தர புரதங்கள் உள்ளன. அவை புதிய தசைகளை உருவாக்க உதவுகின்றன. இந்த புரதங்கள் அதிக கொழுப்பிலிருந்து விடுபட உதவுகின்றன. உடலில் தேங்கியிருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கி, தசைகளை உறுதியாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.

No comments:

Post a Comment